அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா
நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இந்த இரு கூற்றுகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. முழங்கை வரை மறைக்க வேண்டியதுமில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது முழுக்கைகளும் வெளியே தெரியும் அளவுக்கு ஆடை அணிந்துள்ளார்கள்.
صحيح البخاري
355 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»
355, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஒரு ஆடையை அணிந்து அதன் இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : உமர் பின் அபீஸலமா (ரலி)
நூல் : புகாரி 355
ஒரு நீளமான துணியின் வலது முனையை இடது தோளின் மீது போட்டுக் கொண்டும், இடது முனையை வலது தோளின் மீது போட்டுக் கொண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது இருப்பதால் அவர்கள் முழுக் கையும் ஆடியில்லாமல் தான் இருந்துள்ளது.
صحيح البخاري
390 – أَخْبَرَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ ابْنِ هُرْمُزَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ
390, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது அவர்களின் இரு அக்குள் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கைகளையும் விரிப்பார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி)
புகாரி 390, 807, 3564,
ஸஜ்தா செய்யும் போது பின்னால் இருந்து பார்ப்பவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அக்குள் தெரியும் என்றால் கைகள் முற்றிலும் மறைக்கப்பவில்லை என்பது உறுதியாக தெரிகிறது
صحيح البخاري
359 – حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ
359, உங்களில் யாரும் ஒரு ஆடையை அணிந்திருந்தால் தோள்கள் மீது ஒரு பகுதியேனும் இல்லாமல் தொழவேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 359
தோள் புஜம் தான் மறைக்க வேண்டும் என்ற நபி மொழியில் இருந்து அரைக்கை சட்டை அணிந்து தொழலாம் என்பதை அறியலாம்.
வசதியற்ற நிலையில்
‘தொழுகையின் போது தோள் புஜத்தை மறைக்க வேண்டும் என்ற விதியில் வசதியற்றவர்கள் விலக்குப் பெறுகிறார்கள் அதற்கான சான்றுகள் வருமாறு
صحيح البخاري
361 – حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ سَعِيدِ بْنِ الحَارِثِ، قَالَ: سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الصَّلاَةِ فِي الثَّوْبِ الوَاحِدِ، فَقَالَ: خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي، فَوَجَدْتُهُ يُصَلِّي، وَعَلَيَّ ثَوْبٌ وَاحِدٌ، فَاشْتَمَلْتُ بِهِ وَصَلَّيْتُ إِلَى جَانِبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَا السُّرَى يَا جَابِرُ» فَأَخْبَرْتُهُ بِحَاجَتِي، فَلَمَّا فَرَغْتُ قَالَ: «مَا هَذَا الِاشْتِمَالُ الَّذِي رَأَيْتُ»، قُلْتُ: كَانَ ثَوْبٌ – يَعْنِي ضَاقَ – قَالَ: «فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ»
361, ஒரு ஆடை அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு பயணத்தில் நான் அவர்களுடன் சென்றேன். ஒரு இரவு எனது தேவைக்காக நான் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அப்போது என் மீது ஒரு ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் என் உடல் முழுதும் போர்த்திக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுது முடிந்ததும் என்ன, இரவு நேரத்தில் வந்திருக்கிறீர் ஜாபிரே? என்று கேட்டார்கள். அப்போது நான் எனது நோக்கத்தை அவர்களிடம் தெரிவித்தேன். நான் சொல்லி முடித்ததும், என்ன இப்படி போர்த்திக் கொண்டிருக்கிறீர்? என்று கேட்டார்கள். ஆடை சிறியது என்று நான் சொன்னேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆடை விசாலமானதாக இருந்தால் அதனைச் சுற்றிக் கொள்ளுங்கள்; ஆடை சிறியதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸயீத் பின் ஹாரிஸ்
நூல் : புகாரி 361
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் முழுமையாக தங்கள் மேனியை மறைக்கும் அளவுக்கு வசதி பெற்றிருக்கவில்லை. அது போன்ற நேரங்களில் கீழ்ப்பகுதியை மட்டும் மறைத்துள்ளார்கள் என்பதற்கு இவை ஆதாரங்களாகும்.
















