1 – بَابُ بَدْءِ الوَحْيِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

قَالَ الشَّيْخُ الْإِمَامُ الْحَافِظُ أَبُو عَبْدِ اللَّهِ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْمُغِيرَةِ الْبُخَارِيُّ رَحِمَهُ اللَّهُ تَعَالَى آمِينَ:

அத்தியாயம் : 1 இறைச்செய்தி வருகையின் துவக்கம்

அறிஞரும் ஹதீஸ்கலை வல்லுனருமான அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் பின் இப்ராஹீம் பின் முஃகீரா அல்புகாரீ கூறுகிறார்.

كَيْفَ كَانَ بَدْءُ الوَحْيِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟

பாடம் : 1 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்செய்தி (வஹீ) எவ்வாறு துவங்கிற்று?

وَقَوْلُ اللَّهِ جَلَّ ذِكْرُهُ: {إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ} [النساء: 163]

அல்லாஹ் கூறுகின்றான்:

(முஹம்மதே) நூஹுக்கும், அவருக்குப் பின்னால் வந்த நபிமார்களுக்கும் நாம் இறைச்செய்தி (வஹீ) அருளியதைப் போன்றே உமக்கும் நாம் இறைச்செய்தி அருளினோம். (திருக்குர்ஆன் 4:163)

1 – حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»

1, எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. ஆகவே, ஒருவரது ஹிஜ்ரத் (நாடுதுறத்தல்) உலகத்தை நோக்கமாகக் கொண்டு இருந்தால் அதை அவர் அடைவார். பெண்ணை நோக்கமாகக் கொண்டு இருந்தால் அவளை மணந்து கொள்வார். எனவே அவர் எதற்காக ஹிஜ்ரத் செய்தாரோ அதை நோக்கியதாகவே அவரது ஹிஜ்ரத் அமையும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி)

2 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَنَّ الحَارِثَ بْنَ هِشَامٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ يَأْتِيكَ الوَحْيُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْيَانًا يَأْتِينِي مِثْلَ صَلْصَلَةِ الجَرَسِ، وَهُوَ أَشَدُّهُ عَلَيَّ، فَيُفْصَمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ عَنْهُ مَا قَالَ، وَأَحْيَانًا يَتَمَثَّلُ لِيَ المَلَكُ رَجُلًا فَيُكَلِّمُنِي فَأَعِي مَا يَقُولُ» قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: وَلَقَدْ رَأَيْتُهُ يَنْزِلُ عَلَيْهِ الوَحْيُ فِي اليَوْمِ الشَّدِيدِ البَرْدِ، فَيَفْصِمُ عَنْهُ وَإِنَّ جَبِينَهُ لَيَتَفَصَّدُ عَرَقًا

பாடம் : 2

2. அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இறைச்செய்தி (வஹீ) எப்படி வருகின்றது? என்று ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சில வேளைகளில் அது மணியோசையைப் போன்று எனக்கு வரும். இது எனக்கு கடும் சிரமமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் மனனமிட்டுக் கொண்ட நிலையில் அது நிறுத்தப்படும். இன்னும் சில வேளைகளில் வானவர் ஒரு மனிதரைப் போன்று எனக்குக் காட்சியளித்து என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன் என்று பதிலளித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடுமையான குளிர்வீசும் நாளில் இறைச்செய்தி (வஹீ) வந்து இறைச்செய்தி நின்ற பின் அவர்களது நெற்றியிலிருந்து வியர்வை சொட்டுவதை நான் பார்த்துள்ளேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

3 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ أَنَّهَا قَالَتْ: أَوَّلُ مَا بُدِئَ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الوَحْيِ الرُّؤْيَا الصَّالِحَةُ فِي النَّوْمِ، فَكَانَ لاَ يَرَى رُؤْيَا إِلَّا جَاءَتْ مِثْلَ فَلَقِ الصُّبْحِ، ثُمَّ حُبِّبَ إِلَيْهِ الخَلاَءُ، وَكَانَ يَخْلُو بِغَارِ حِرَاءٍ فَيَتَحَنَّثُ فِيهِ – وَهُوَ التَّعَبُّدُ – اللَّيَالِيَ ذَوَاتِ العَدَدِ قَبْلَ أَنْ يَنْزِعَ إِلَى أَهْلِهِ، وَيَتَزَوَّدُ لِذَلِكَ، ثُمَّ يَرْجِعُ إِلَى خَدِيجَةَ فَيَتَزَوَّدُ لِمِثْلِهَا، حَتَّى جَاءَهُ الحَقُّ وَهُوَ فِي غَارِ حِرَاءٍ، فَجَاءَهُ المَلَكُ فَقَالَ: اقْرَأْ، قَالَ: «مَا أَنَا بِقَارِئٍ»، قَالَ: ” فَأَخَذَنِي فَغَطَّنِي حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي، فَقَالَ: اقْرَأْ، قُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّانِيَةَ حَتَّى بَلَغَ مِنِّي الجَهْدَ ثُمَّ أَرْسَلَنِي، فَقَالَ: اقْرَأْ، فَقُلْتُ: مَا أَنَا بِقَارِئٍ، فَأَخَذَنِي فَغَطَّنِي الثَّالِثَةَ ثُمَّ أَرْسَلَنِي، فَقَالَ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ. خَلَقَ الإِنْسَانَ مِنْ عَلَقٍ. اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ} [العلق: 2] ” فَرَجَعَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْجُفُ فُؤَادُهُ، فَدَخَلَ عَلَى خَدِيجَةَ بِنْتِ خُوَيْلِدٍ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالَ: «زَمِّلُونِي زَمِّلُونِي» فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ، فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الخَبَرَ: «لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي» فَقَالَتْ خَدِيجَةُ: كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا، إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ، وَتَكْسِبُ المَعْدُومَ، وَتَقْرِي الضَّيْفَ، وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، فَانْطَلَقَتْ بِهِ خَدِيجَةُ حَتَّى أَتَتْ بِهِ وَرَقَةَ بْنَ نَوْفَلِ بْنِ أَسَدِ بْنِ عَبْدِ العُزَّى ابْنَ عَمِّ خَدِيجَةَ وَكَانَ امْرَأً تَنَصَّرَ فِي الجَاهِلِيَّةِ، وَكَانَ يَكْتُبُ الكِتَابَ العِبْرَانِيَّ، فَيَكْتُبُ مِنَ الإِنْجِيلِ بِالعِبْرَانِيَّةِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَكْتُبَ، وَكَانَ شَيْخًا كَبِيرًا قَدْ عَمِيَ، فَقَالَتْ لَهُ خَدِيجَةُ: يَا ابْنَ عَمِّ، اسْمَعْ مِنَ ابْنِ أَخِيكَ، فَقَالَ لَهُ وَرَقَةُ: يَا ابْنَ أَخِي مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَبَرَ مَا رَأَى، فَقَالَ لَهُ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي نَزَّلَ اللَّهُ عَلَى مُوسَى، يَا لَيْتَنِي فِيهَا جَذَعًا، لَيْتَنِي أَكُونُ حَيًّا إِذْ يُخْرِجُكَ قَوْمُكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَ مُخْرِجِيَّ هُمْ»، قَالَ: نَعَمْ، لَمْ يَأْتِ رَجُلٌ قَطُّ بِمِثْلِ مَا جِئْتَ بِهِ إِلَّا عُودِيَ، وَإِنْ يُدْرِكْنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا. ثُمَّ لَمْ يَنْشَبْ وَرَقَةُ أَنْ تُوُفِّيَ، وَفَتَرَ الوَحْيُ

பாடம் : 3

3. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு தூக்கத்தில் நல்ல கனவுகளாகவே ஆரம்பத்தில் இறைச்செய்தி வந்தது. அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலை வெளிச்சம் போல் இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வரும் வரை ஹிரா குகையில் தவம் இருப்பார்கள். (தவம் என்பது) பல இரவுகள் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். அதற்கான உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். மீண்டும் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து அதைப் போன்று உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். இந்நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு (குர்ஆன் எனும்) சத்தியம் வரும் வரை நீடித்தது. (ஒருநாள்) அவர்களிடம் வானவர் (ஜிப்ரீல்) வந்து, ஓதுவீராக என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்று சொன்னார்கள்.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத் தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு ஓதுவீராக என்றார். அப்போதும் நான் ஓதத்தெரிந்தவனில்லையே என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னை விட்டுவிட்டு, படைத்த உம்முடைய இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை கருவுற்ற சினையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் வள்ளல் எனும் வசனங்களை (96:1-5) அவர் ஓதினார் (என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறிRiனார்கள்).

(ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:)

பிறகு அந்த வசனங்களுடன் இதயம் படபடக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றனர். உடனே அவர்களுக்குப் போர்த்திவிட்டனர். அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்து விடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், அவ்வாறில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; தாங்கள் உறவுகளைப் பேணுகிறீர்கள்; (பிறரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்தியத்துக்காக ஏற்படும் துன்பங்களின் போது உதவி செய்கிறீர்கள் என்று கூறினார்கள்.

பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.

வரக்கா அறியாமைக் காலத்தில் கிறித்தவ மதத்தைத் தழுவி இருந்தார். மேலும், அவர் எபிரேய (ஹீப்ரு) மொழியில் எழுதத் தெரிந்தவராகவும், இஞ்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு ஹீப்ரு மொழியில் எழுதுபவராகவும் இருந்தார். மேலும் பார்வையிழந்த முதியவராகவும் அவர் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்கள் புதல்வர் (முஹம்மத்) கூறுவதைக் கேளுங்கள்’ என்றார்கள். அப்போது வரக்கா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், என் சகோதரர் மகனே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் சொன்னார்கள்.

அவர் தான், மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று நபியவர்களிடம் வரகா கூறினார். உம்மை உம் சமூகத்தார் வெளியேற்றும் அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! அப்போது நான் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே! என்றும் கூறினார்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னையா வெளியேற்றுவார்கள்? என்று கேட்க, வரக்கா, ஆம், நீங்கள் கொண்டு வந்ததைக் கொண்டு வந்த எவரும் பகைக்கப்படாமல் இருந்ததில்லை. உங்களது அந்த நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவி செய்வேன் என்று சொன்னார். அதன் பின் வரக்கா நீண்ட நாள் வாழவில்லை. இறந்துவிட்டார். அத்துடன் இறைச்செய்தி (சிறிதுகாலம்) நின்றுபோயிற்று.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

4 – قَالَ ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ: وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الوَحْيِ فَقَالَ فِي حَدِيثِهِ: ” بَيْنَا أَنَا أَمْشِي إِذْ سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَرُعِبْتُ مِنْهُ، فَرَجَعْتُ فَقُلْتُ: زَمِّلُونِي زَمِّلُونِي ” فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {يَا أَيُّهَا المُدَّثِّرُ. قُمْ فَأَنْذِرْ} [المدثر: 2] إِلَى قَوْلِهِ {وَالرُّجْزَ فَاهْجُرْ} [المدثر: 5]. فَحَمِيَ الوَحْيُ وَتَتَابَعَ تَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، وَأَبُو صَالِحٍ، وَتَابَعَهُ هِلاَلُ بْنُ رَدَّادٍ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ يُونُسُ، وَمَعْمَرٌ بَوَادِرُهُ

4. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு இறைச்செய்தி (வஹீ) நின்று போயிருந்த காலம் பற்றி கூறினார்கள்:

நான் நடந்துபோய்க் கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். ஹிராவில் இருந்த போது என்னிடம் வந்த வானவர் வானுக்கும், பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு நான் அச்சமடைந்து உடனே (வீட்டிற்குத்) திரும்பினேன். எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள் என்று சொன்னேன். போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மைப்படுத்துவீராக! அசுத்தத்தை வெறுப்பீராக! எனும் அப்போது அல்லாஹ் வசனங்களை (74:1-5) அருளினான். பின்னர் இறைச்செய்தி (வஹீ) தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

இதே ஹதீஸ் மற்ற சில அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. யூனுஸ், மஅமர் ஆகியோருடைய அறிவிப்பில் (இதயம் படபடக்க என்பதற்குப் பதிலாக) கழுத்துச் சதைகள் படபடக்க என வந்துள்ளது.

5 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ فِي قَوْلِهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16] قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ مِمَّا يُحَرِّكُ شَفَتَيْهِ – فَقَالَ ابْنُ عَبَّاسٍ: فَأَنَا أُحَرِّكُهُمَا لَكُمْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَرِّكُهُمَا، وَقَالَ سَعِيدٌ: أَنَا أُحَرِّكُهُمَا كَمَا رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا، فَحَرَّكَ شَفَتَيْهِ – فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17] قَالَ: جَمْعُهُ لَكَ فِي صَدْرِكَ وَتَقْرَأَهُ: {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 18] قَالَ: فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ: {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19] ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا قَرَأَهُ

பாடம் : 4

5. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர் எனும் (75:16ஆவது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இறைச்செய்தி) அருளப்படும் போது தம்மை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார்கள்; தம் உதடுகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று நானும் உங்களுக்கு அசைத்துக் காட்டுகிறேன் (என்று இப்னு அப்பாஸ் (ரலி) அசைத்துக் காட்டினார்கள்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் உதடுகளை அசைத்துக் காட்டியதைப் போன்று நானும் உங்களுக்கு அசைத்துக் காட்டுகிறேன் (என்று சயீத் பின் ஜுபைர் கூறி அசைத்துக் காட்டினார்).

(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது எனும் (75:16-19) வசனங்களை அப்போதுதான் அல்லாஹ் அருளினான்.

இதன் பின்னர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செவிதாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்றதும் அவர் ஓதியதைப் போன்றே அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓதிவிடுவார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

6 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، ح وحَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، نَحْوَهُ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدُ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ فَيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَجْوَدُ بِالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ»

பாடம் : 5

6. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானில் தம்மைச் சந்திக்கும் வேளையில் இன்னும் அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள் ரமளானின் ஒவ்வோர் இரவிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பெற்ற) குர்ஆனை அவர்களுக்கு நினைவுபடுத்துவார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து வீசும் மழைக் காற்றைவிட நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

7 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ الحَكَمُ بْنُ نَافِعٍ قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّ أَبَا سُفْيَانَ بْنَ حَرْبٍ أَخْبَرَهُ: أَنَّ هِرَقْلَ أَرْسَلَ إِلَيْهِ فِي رَكْبٍ مِنْ قُرَيْشٍ، وَكَانُوا تُجَّارًا بِالشَّأْمِ فِي المُدَّةِ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَادَّ فِيهَا أَبَا سُفْيَانَ وَكُفَّارَ قُرَيْشٍ، فَأَتَوْهُ وَهُمْ بِإِيلِيَاءَ، فَدَعَاهُمْ فِي مَجْلِسِهِ، وَحَوْلَهُ عُظَمَاءُ الرُّومِ، ثُمَّ دَعَاهُمْ وَدَعَا بِتَرْجُمَانِهِ، فَقَالَ: أَيُّكُمْ أَقْرَبُ نَسَبًا بِهَذَا الرَّجُلِ الَّذِي يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ؟ فَقَالَ أَبُو سُفْيَانَ: فَقُلْتُ أَنَا أَقْرَبُهُمْ نَسَبًا، فَقَالَ: أَدْنُوهُ مِنِّي، وَقَرِّبُوا أَصْحَابَهُ فَاجْعَلُوهُمْ عِنْدَ ظَهْرِهِ، ثُمَّ قَالَ لِتَرْجُمَانِهِ: قُلْ لَهُمْ إِنِّي سَائِلٌ هَذَا عَنْ هَذَا الرَّجُلِ، فَإِنْ كَذَبَنِي فَكَذِّبُوهُ. فَوَاللَّهِ لَوْلاَ الحَيَاءُ مِنْ أَنْ يَأْثِرُوا عَلَيَّ كَذِبًا لَكَذَبْتُ عَنْهُ. ثُمَّ كَانَ أَوَّلَ مَا سَأَلَنِي عَنْهُ أَنْ قَالَ: كَيْفَ نَسَبُهُ فِيكُمْ؟ قُلْتُ: هُوَ فِينَا ذُو نَسَبٍ، قَالَ: فَهَلْ قَالَ هَذَا القَوْلَ مِنْكُمْ أَحَدٌ قَطُّ قَبْلَهُ؟ قُلْتُ: لاَ. قَالَ: فَهَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ؟ قُلْتُ: لاَ قَالَ: فَأَشْرَافُ النَّاسِ يَتَّبِعُونَهُ أَمْ ضُعَفَاؤُهُمْ؟ فَقُلْتُ بَلْ ضُعَفَاؤُهُمْ. قَالَ: أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ؟ قُلْتُ: بَلْ يَزِيدُونَ. قَالَ: فَهَلْ يَرْتَدُّ أَحَدٌ مِنْهُمْ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ؟ قُلْتُ: لاَ. قَالَ: فَهَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ؟ قُلْتُ: لاَ. قَالَ: فَهَلْ يَغْدِرُ؟ قُلْتُ: لاَ، وَنَحْنُ مِنْهُ فِي مُدَّةٍ لاَ نَدْرِي مَا هُوَ فَاعِلٌ فِيهَا، قَالَ: وَلَمْ تُمْكِنِّي كَلِمَةٌ أُدْخِلُ فِيهَا شَيْئًا غَيْرُ هَذِهِ الكَلِمَةِ، قَالَ: فَهَلْ قَاتَلْتُمُوهُ؟ قُلْتُ: نَعَمْ. قَالَ: فَكَيْفَ كَانَ قِتَالُكُمْ إِيَّاهُ؟ قُلْتُ: الحَرْبُ بَيْنَنَا وَبَيْنَهُ سِجَالٌ، يَنَالُ مِنَّا وَنَنَالُ مِنْهُ. قَالَ: مَاذَا يَأْمُرُكُمْ؟ قُلْتُ: يَقُولُ: اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ، وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالزَّكَاةِ وَالصِّدْقِ وَالعَفَافِ وَالصِّلَةِ. فَقَالَ لِلتَّرْجُمَانِ: قُلْ لَهُ: سَأَلْتُكَ عَنْ نَسَبِهِ فَذَكَرْتَ أَنَّهُ فِيكُمْ ذُو نَسَبٍ، فَكَذَلِكَ الرُّسُلُ تُبْعَثُ فِي نَسَبِ قَوْمِهَا. وَسَأَلْتُكَ هَلْ قَالَ أَحَدٌ مِنْكُمْ هَذَا القَوْلَ، فَذَكَرْتَ أَنْ لاَ، فَقُلْتُ: لَوْ كَانَ أَحَدٌ قَالَ هَذَا القَوْلَ قَبْلَهُ، لَقُلْتُ رَجُلٌ يَأْتَسِي بِقَوْلٍ قِيلَ قَبْلَهُ. وَسَأَلْتُكَ هَلْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ، فَذَكَرْتَ أَنْ لاَ، قُلْتُ فَلَوْ كَانَ مِنْ آبَائِهِ مِنْ مَلِكٍ، قُلْتُ رَجُلٌ يَطْلُبُ مُلْكَ أَبِيهِ، وَسَأَلْتُكَ، هَلْ كُنْتُمْ تَتَّهِمُونَهُ بِالكَذِبِ قَبْلَ أَنْ يَقُولَ مَا قَالَ، فَذَكَرْتَ أَنْ لاَ، فَقَدْ أَعْرِفُ أَنَّهُ لَمْ يَكُنْ لِيَذَرَ الكَذِبَ عَلَى النَّاسِ وَيَكْذِبَ عَلَى اللَّهِ. وَسَأَلْتُكَ أَشْرَافُ النَّاسِ اتَّبَعُوهُ أَمْ ضُعَفَاؤُهُمْ، فَذَكَرْتَ أَنَّ ضُعَفَاءَهُمُ اتَّبَعُوهُ، وَهُمْ أَتْبَاعُ الرُّسُلِ. وَسَأَلْتُكَ أَيَزِيدُونَ أَمْ يَنْقُصُونَ، فَذَكَرْتَ أَنَّهُمْ يَزِيدُونَ، وَكَذَلِكَ أَمْرُ الإِيمَانِ حَتَّى يَتِمَّ. وَسَأَلْتُكَ أَيَرْتَدُّ أَحَدٌ سَخْطَةً لِدِينِهِ بَعْدَ أَنْ يَدْخُلَ فِيهِ، فَذَكَرْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الإِيمَانُ حِينَ تُخَالِطُ بَشَاشَتُهُ القُلُوبَ. وَسَأَلْتُكَ هَلْ يَغْدِرُ، فَذَكَرْتَ أَنْ لاَ، وَكَذَلِكَ الرُّسُلُ لاَ تَغْدِرُ. وَسَأَلْتُكَ بِمَا يَأْمُرُكُمْ، فَذَكَرْتَ أَنَّهُ يَأْمُرُكُمْ أَنْ تَعْبُدُوا اللَّهَ وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَيَنْهَاكُمْ عَنْ عِبَادَةِ الأَوْثَانِ، وَيَأْمُرُكُمْ بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالعَفَافِ، فَإِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَيَّ هَاتَيْنِ، وَقَدْ كُنْتُ أَعْلَمُ أَنَّهُ خَارِجٌ، لَمْ أَكُنْ أَظُنُّ أَنَّهُ مِنْكُمْ، فَلَوْ أَنِّي أَعْلَمُ أَنِّي أَخْلُصُ إِلَيْهِ لَتَجَشَّمْتُ لِقَاءَهُ، وَلَوْ كُنْتُ عِنْدَهُ لَغَسَلْتُ عَنْ قَدَمِهِ. ثُمَّ دَعَا بِكِتَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي بَعَثَ بِهِ دِحْيَةُ إِلَى عَظِيمِ بُصْرَى، فَدَفَعَهُ إِلَى هِرَقْلَ، فَقَرَأَهُ فَإِذَا فِيهِ ” بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، مِنْ مُحَمَّدٍ عَبْدِ اللَّهِ وَرَسُولِهِ إِلَى هِرَقْلَ عَظِيمِ الرُّومِ: سَلاَمٌ عَلَى مَنِ اتَّبَعَ الهُدَى، أَمَّا بَعْدُ، فَإِنِّي أَدْعُوكَ بِدِعَايَةِ الإِسْلاَمِ، أَسْلِمْ تَسْلَمْ، يُؤْتِكَ اللَّهُ أَجْرَكَ مَرَّتَيْنِ، فَإِنْ تَوَلَّيْتَ فَإِنَّ عَلَيْكَ إِثْمَ الأَرِيسِيِّينَ ” وَ {يَا أَهْلَ الكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَنْ لاَ نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلاَ نُشْرِكَ بِهِ شَيْئًا وَلاَ يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ} قَالَ أَبُو سُفْيَانَ: فَلَمَّا قَالَ مَا قَالَ، وَفَرَغَ مِنْ قِرَاءَةِ الكِتَابِ، كَثُرَ عِنْدَهُ الصَّخَبُ وَارْتَفَعَتِ الأَصْوَاتُ وَأُخْرِجْنَا، فَقُلْتُ لِأَصْحَابِي حِينَ أُخْرِجْنَا: لَقَدْ أَمِرَ أَمْرُ ابْنِ أَبِي كَبْشَةَ، إِنَّهُ يَخَافُهُ مَلِكُ بَنِي الأَصْفَرِ. فَمَا زِلْتُ مُوقِنًا أَنَّهُ سَيَظْهَرُ حَتَّى أَدْخَلَ اللَّهُ عَلَيَّ الإِسْلاَمَ. وَكَانَ ابْنُ النَّاظُورِ، صَاحِبُ إِيلِيَاءَ وَهِرَقْلَ، سُقُفًّا عَلَى نَصَارَى الشَّأْمِ يُحَدِّثُ أَنَّ هِرَقْلَ حِينَ قَدِمَ إِيلِيَاءَ، أَصْبَحَ يَوْمًا خَبِيثَ النَّفْسِ، فَقَالَ بَعْضُ بَطَارِقَتِهِ: قَدِ اسْتَنْكَرْنَا هَيْئَتَكَ، قَالَ ابْنُ النَّاظُورِ: وَكَانَ هِرَقْلُ حَزَّاءً يَنْظُرُ فِي النُّجُومِ، فَقَالَ لَهُمْ حِينَ سَأَلُوهُ: إِنِّي رَأَيْتُ اللَّيْلَةَ حِينَ نَظَرْتُ فِي النُّجُومِ مَلِكَ الخِتَانِ قَدْ ظَهَرَ، فَمَنْ يَخْتَتِنُ مِنْ هَذِهِ الأُمَّةِ؟ قَالُوا: لَيْسَ يَخْتَتِنُ إِلَّا اليَهُودُ، فَلاَ يُهِمَّنَّكَ شَأْنُهُمْ، وَاكْتُبْ إِلَى مَدَايِنِ مُلْكِكَ، فَيَقْتُلُوا مَنْ فِيهِمْ مِنَ اليَهُودِ. فَبَيْنَمَا هُمْ عَلَى أَمْرِهِمْ، أُتِيَ هِرَقْلُ بِرَجُلٍ أَرْسَلَ بِهِ مَلِكُ غَسَّانَ يُخْبِرُ عَنْ خَبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا اسْتَخْبَرَهُ هِرَقْلُ قَالَ: اذْهَبُوا فَانْظُرُوا أَمُخْتَتِنٌ هُوَ أَمْ لاَ، فَنَظَرُوا إِلَيْهِ، فَحَدَّثُوهُ أَنَّهُ مُخْتَتِنٌ، وَسَأَلَهُ عَنِ العَرَبِ، فَقَالَ: هُمْ يَخْتَتِنُونَ، فَقَالَ هِرَقْلُ: هَذَا مُلْكُ هَذِهِ الأُمَّةِ قَدْ ظَهَرَ. ثُمَّ كَتَبَ هِرَقْلُ إِلَى صَاحِبٍ لَهُ بِرُومِيَةَ، وَكَانَ نَظِيرَهُ فِي العِلْمِ، وَسَارَ هِرَقْلُ إِلَى حِمْصَ، فَلَمْ يَرِمْ حِمْصَ حَتَّى أَتَاهُ كِتَابٌ مِنْ صَاحِبِهِ يُوَافِقُ رَأْيَ هِرَقْلَ عَلَى خُرُوجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهُ نَبِيٌّ، فَأَذِنَ هِرَقْلُ لِعُظَمَاءِ الرُّومِ فِي دَسْكَرَةٍ لَهُ بِحِمْصَ، ثُمَّ أَمَرَ بِأَبْوَابِهَا فَغُلِّقَتْ، ثُمَّ اطَّلَعَ فَقَالَ: يَا مَعْشَرَ الرُّومِ، هَلْ لَكُمْ فِي الفَلاَحِ وَالرُّشْدِ، وَأَنْ يَثْبُتَ مُلْكُكُمْ، فَتُبَايِعُوا هَذَا النَّبِيَّ؟ فَحَاصُوا حَيْصَةَ حُمُرِ الوَحْشِ إِلَى الأَبْوَابِ، فَوَجَدُوهَا قَدْ غُلِّقَتْ، فَلَمَّا رَأَى هِرَقْلُ نَفْرَتَهُمْ، وَأَيِسَ مِنَ الإِيمَانِ، قَالَ: رُدُّوهُمْ عَلَيَّ، وَقَالَ: إِنِّي قُلْتُ مَقَالَتِي آنِفًا أَخْتَبِرُ بِهَا شِدَّتَكُمْ عَلَى دِينِكُمْ، فَقَدْ رَأَيْتُ، فَسَجَدُوا لَهُ وَرَضُوا عَنْهُ، فَكَانَ ذَلِكَ آخِرَ شَأْنِ هِرَقْلَ رَوَاهُ صَالِحُ بْنُ كَيْسَانَ، وَيُونُسُ، وَمَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ

பாடம் : 6

7. அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) தனக்குத் தெரிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்.

என்னிடமும், குரைஷ் குலத்து இறைமறுப்பாளர்களுடனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் குறைஷி வணிகக் குழுவில் இருந்த என்னை அழைத்து வரும்படி ஹெர்குலிஸ் மன்னர் ஆளனுப்பினார்.

அப்போது குறைஷியரின் வணிகக் குழுவினர் ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர்.

நாங்கள் அவரிடம் வந்தோம். அவரும், அவருடைய ஆட்களும் ஈலியாவில் (பைத்துல் முகத்தஸில்) இருந்தார்கள். அவரைச் சுற்றி ரோமபுரி பிரமுகர்கள் இருந்த போது அங்கே எங்களை அழைத்தார். பிறகு மீண்டும் எங்களை அருகில் அழைத்தார். தமது மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.

தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்? என்று கேட்டார். நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய உறவினன் என்று நான் பதிலளித்தேன். அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள்’ என்று ஹெர்குலிஸ் கட்டளையிட்டார்.

நான் அந்த மனிதரைப் பற்றி (முஹம்மதைப் பற்றி) இவரிடம் விசாரிப்பேன். இவர் பொய் சொன்னால் இவர் பொய் சொல்கிறார்’ என்று கூறுங்கள் என இவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று தனது மொழிபெயர்ப்பாளரிடம் சொன்னார்.

நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்து விடுவார்களோ என்ற வெட்கம் இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அவரைப் பற்றி பொய் சொல்லியிருப்பேன்.

பிறகு ஹெர்குலிஸ் என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி உங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப்பட்டது? என்பதே முதல் கேள்வியாக இருந்தது. அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர் என்று நான் கூறினேன். உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படி எப்போதாவது வாதித்ததுண்டா? என்று அவர் கேட்டார். இல்லை’ என்று நான் பதிலளித்தேன். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா? என்று கேட்டார். நான் இல்லை’ என்றேன்.

அவரைப் பின்பற்றுவோர் மக்களில் உயர் குலத்தவரா? பலவீனர்களா? என்று கேட்டார். இல்லை; பலவீனர்கள் தாம் என்று நான் சொன்னேன். அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றார்களா? குறைகின்றார்களா? என்று கேட்டார். இல்லை; அவர்கள் அதிகரிக்கின்றனர் என்று கூறினேன். அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு அதில் அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்களா? என்று அவர் கேட்டார். நான் இல்லை’ என்று சொன்னேன். அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்பவர் என்று நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களா? என்று அவர் கேட்டார். நான் இல்லை’ என்றேன்.

அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா? என்று அவர் கேட்டார். மீறியதில்லை; இப்போது செய்துள்ள ஒப்பந்தத்தில் அவர் என்ன செய்வார் என்று எங்களுக்குத் தெரியாது என்று சொன்னேன். (நபியைக் குறை கூற) இதைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு இயலவில்லை.

அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டா? என்று அவர் கேட்டார். நான் ஆம்’ என்று சொன்னேன். அவருடன் நீங்கள் நடத்திய போர்கள் எப்படி அமைந்தன? என்று கேட்டார். எங்களுக்கிடையேயான போர் (கீழே போய் மேலே வரும் கிணற்று) வாளிகள் தாம்; அவரும் எங்களை வெல்வார். நாங்களும் அவரை வெல்வோம் என்றேன்.

உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்? என்று அவர் கேட்டார். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர் கூறியவற்றை விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார். தொழுகை, ஜகாத், உண்மை, தன்மானம், உறவுகளைப் பேணுதல் ஆகியவற்றை எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.

நான் அவருடைய குலத்தைப் பற்றி உம்மிடம் கேட்டேன். அவர் எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர் என்று நீர் பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் பாரம்பர்யமுள்ள குலத்திலிருந்து தான் அனுப்படுவார்கள்.

உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?’ என்று உம்மிடம் கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்தால், தமக்கு முன்னர் கூறப்பட்டதைப் பின்பற்றிச் சொல்லும் மனிதரே இவர் என்று நான் சொல்லியிருப்பேன்.

அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாரா என்று உம்மிடம் கேட்டேன். இல்லை’ என்று பதிலளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருந்தால், தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை அடைய விரும்பும் மனிதரே இவர் என்று நான் கூறியிருப்பேன்.

இவ்வாறு வாதிப்பதற்கு முன்பு பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டா என்று உம்மிடம் கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். மக்களிடம் பொய் பேசாத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார் என்று நான் புரிந்து கொண்டேன்.

அவரைப் பின்பற்றுவோர் உயர் குலத்தவரா? பலவீனர்களா? என்று உம்மிடம் கேட்டேன். ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர் என்று பதிலளித்தீர். அவர்கள் தாம் (பெரும்பாலும்) இறைத் தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.

அவர்கள் அதிகரிக்கின்றனரா? குறைகின்றனரா?’ என்ற கேட்டேன். அவர்கள் அதிகரிக்கின்றனர் என்று பதிலளித்தீர். (ஈமான்) எனும் நம்பிக்கை விவகாரம் அப்படித்தான் இருக்கும்.

அவரது மார்க்கத்தில் இணைந்தபின் எவரேனும் தமது மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் சென்றதுண்டா?’ என்று கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். நம்பிக்கையின் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும் போது இப்படித்தான் இருக்கும்.

அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா? என்று கேட்டேன். இல்லை என்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இப்படித்தான் இருப்பர். அவர்கள் வாக்குமீற மாட்டார்கள்.

அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்?’ என்று கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணை கற்பிக்கக் கூடாது என்று அவர் கட்டளையிடுவதாகவும், சிலைகளை வணங்கக் கூடாது என்று உங்களைத் தடுப்பதாகவும், தொழுகை, உண்மை, தன்மானம் ஆகியவற்றை அவர் கட்டளையிடுவதாகவும் நீர் பதிலளித்தீர்.

நீர் சொல்வது உண்மையாயிருப்பின் அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்தை ஆள்வார். இறைத்தூதரான ஒருவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால், அவர் உங்களிலிருந்து வருவார் என்று நான் நினத்திருக்கவில்லை. நான் அவரை அடைய முடியும் என அறிந்தால் அவரைச் சந்திக்க பெரு முயற்சி எடுப்பேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரது கால்களைக் கழுவியிருப்பேன் என்று கூறினார்.

இவ்வாறு என்னிடம் கூறுமாறு தமது மொழி பெயர்ப்பாளரிடம் கூறினார்.

பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவருமாறு ஹெர்குலிஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) மூலம் புஸ்ரா நகர ஆட்சியருக்கு அனுப்பி இருந்தார்கள். அவர் அதை ஹெர்குலிஸிடம் ஒப்படைத்தார். ஹெர்குலிஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

இது அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமாபுரியின் அதிபர் ஹெர்குலிஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின்பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

அடுத்து, இஸ்லாமை ஏற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். நன்மையை இருமடங்காக அல்லாஹ் உங்களுக்குத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், குடிமக்களின் பாவமும் உங்களையே சாரும்.

வேதமுடையோரே! நாம் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்கக் கூடாது; அவனுக்கு இணையாக எதையும் கருதக் கூடாது; அல்லாஹ்வையன்றி நம்மில் ஒருவர் மற்றவரைக் கடவுள்களாக ஆக்கக் கூடாது என்ற எங்களுக்கும், உங்களுக்கும் பொதுவான கொள்கைக்கு வாருங்கள்!” என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் “நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருங்கள்!” எனக் கூறி விடுங்கள்! (திருக்குர்ஆன் 3:67)

ஹெர்குலிஸ் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி, அந்தக் கடிதத்தைப் படித்து முடித்த போது அவர் முன்னே கூச்சலும், இரைச்சலும் அதிகரித்தன; குரல்கள் உயர்ந்தன. உடனே நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.

நாங்கள் வெளியேற்றப்பட்ட போது இப்னு அபீகப்ஷா (முஹம்மது)வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிறத்தாரின் மன்னரே இவருக்கு அஞ்சுகிறாரே என்று நான் என் நண்பர்களிடம் சொன்னேன்.

இவர் வெற்றி பெறுவார் என்று நான் உறுதி கொண்டவனாக இருந்தேன். முடிவில் இஸ்லாமை அல்லாஹ் எனக்குள் புகுத்தினான்.

(இதன் பின்னே வரும் செய்தி அபூ சுஃப்யான் கூறியதல்ல. ஒரு அறிவிப்பாளர் தான் கேள்விப்பட்டதை இடையில் நுழைத்துள்ளார். ஏனெனில் பின்னால் கூறப்படும் விஷயத்தைக் கவனித்தால் அபூ சுஃப்யான் முன்னிலையில் நடந்ததல்ல என்பது விளங்கும் – மொழிபெயர்ப்பாளன்)

ஈலியா நிர்வாகியும், ஹெர்குலிஸின் நண்பருமான இப்னு நாத்தூர் என்பார் ஷாம் நாட்டுக் கிறித்தவர்களின் தலைமைக் குருவாக இருந்தவர் ஆவார். அவர் கூறுகிறார்:

ஹெர்குலிஸ், ஈலியா வந்த போது மனக்கவலையுடன் காணப்பட்டார். அப்போது அவருடைய அரசவைப் பிரதானிகளில் சிலர் தங்களின் இந்தத் தோற்றம் எங்களுக்குக் கவலை அளிக்கிறது என்று கூறினார்கள்.

– ஹெர்குலிஸ், கிரகங்களைப் பார்த்து பலன் சொல்லும் திறமை பெற்றவராக இருந்தார்.-

இன்றிரவு நான் நட்சத்திரங்களைப் பார்த்த போது விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களின் அரசர் தோன்றிவிட்டதைப் பார்த்தேன் என்று ஹெர்குலிஸ் கூறிவிட்டு, இக்கால சமுதாயத்தில் விருத்தசேதனம் செய்வோர் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் யூதர்களைத் தவிர யாரும் விருத்தசேதனம் செய்வதில்லை; அவர்கள் விஷயம் உங்களைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம்; யூதர்களைக் கொன்றுவிடுமாறு உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கு எழுதுங்கள் என்றனர்.

(நட்சத்திரங்களைப் பார்த்து ஹெர்குலிஸ் பலன் கூறிய செய்தி ஒரு பாதிரியார் கூறியதாக நுழைக்கப்பட்டதாகும். அப்படி ஒரு கலை உலகில் இல்லை. ஹெர்குலிஸ் மன்னர் நபிகள் நாயகத்தின் கடிதத்தைப் பெற்ற பின்னர் தான் இது பற்றி அறிந்தார் என்பது தான் சரியானது – மொழிபெயர்ப்பாளன்)

இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு மனிதரை கஸ்ஸான் குலத்தின் (குறுநில) மன்னர், ஹெர்குலிஸிடம் அனுப்பியிருந்தார்; அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொண்ட ஹெர்குலிஸ், இவரை அழைத்துச் சென்று இவர் விருத்தசேதனம் செய்திருக்கிறாரா? அல்லவா? என்று சோதியுங்கள் என்று ஆணையிட்டார். அவ்வாறே அவரைப் பார்வையிட்டனர்; அவர் விருத்தசேதனம் செய்திருப்பதாக ஹெர்குலிஸிடம் கூறினார்கள். மேலும், அந்த மனிதரிடம் ஹெர்குலிஸ் அரபுகள் குறித்து விசாரித்த போது, அவர்கள் விருத்த சேதனம் செய்து கொள்ளும் வழக்கமுடையவர்கள் என்று குறிப்பிட்டார். உடனே ஹெர்குலிஸ், இதோ இந்தத் தலைமுறையின் அரசர் தோன்றிவிட்டார் என்று கூறினார்.

பின்னர் ரூமியாவில் இருந்த தன்னைப்போல் கல்வியறிவுள்ள தம் நண்பருக்கு இது குறித்து விபரம் கேட்டு கடிதம் எழுதிவிட்டு ஹெர்குலிஸ் ஹிம்ஸ் நகருக்குச் சென்றார். அவர் ஹிம்ஸ் சென்றடைவதற்குள் நண்பரிடமிருந்து (பதில்) கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், ஹெர்குலிஸ் கணித்தவாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும், அவர் இறைத்தூதர் தாம் என்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.

பின்னர் ஹெர்குலிஸ் ஹிம்ஸ் நகரிலிருந்த தமது கோட்டைக்கு வருமாறு ரோமாபுரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். அந்தக் கோட்டையின் கதவுகளைப் பூட்டுமாறு உத்தரவிட்டார். அவ்வாறே அவை பூட்டப்பட்டன. பின்னர் ஹெர்குலிஸ் தோன்றி, ரோமானியரே! உங்களுக்கு வெற்றியும், நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும், உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டா? இந்த இறைத்தூதரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதைக் கேட்டதும் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடினர். கதவுகளை நெருங்கியதும் அவை பூட்டப்பட்டிருக்கக் கண்டனர். அவர்கள் வெருண்டோடுவதைப் பார்த்த ஹெர்குலிஸ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது இந்த மக்கள் விசுவாசம் கொள்ள மாட்டார்கள் என்று நிராசையான போது, அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள் என்று சொன்னார். நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன். இப்போது ஐயமற அறிந்து கொண்டேன் என்று கூறினார். உடனே அனைவரும் அவருக்குச் சிரம்பணிந்தனர். அவரைக் குறித்து திருப்தியும் அடைந்தனர். இதுவே (மன்னர்) ஹெர்குலிஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது.