Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 83 அல்முதஃப்பிபீன்
மொத்த வசனங்கள் : 36
அல்முதஃப்பிபீன் – அளவு நிறுவையில் குறைவு செய்வோர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

83:1. அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!
وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ

83:2. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர்.
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ

83:3. மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர்.
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ

83:4.
أَلَا يَظُنُّ أُو۟لَـٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ

83:5. மகத்தான நாளில் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?26
لِيَوْمٍ عَظِيمٍ

83:6. அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

83:7. அவ்வாறில்லை! குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில்434 உள்ளது.
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ

83:8. ஸிஜ்ஜீன்434 என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ

83:9. அது எழுதப்பட்ட ஏடாகும்.
كِتَـٰبٌ مَّرْقُومٌ

83:10. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

83:11. அவர்கள் தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதினர்.
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ

83:12. வரம்பு மீறும் ஒவ்வொரு பாவியையும் தவிர வேறு எவரும் அதைப் பொய்யெனக் கருத மாட்டார்கள்.
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ

83:13. நமது வசனங்கள் அவனுக்குக் கூறப்பட்டால் “இது முன்னோர்களின் கட்டுக் கதைகள்” எனக் கூறுகிறான்.
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَـٰتُنَا قَالَ أَسَـٰطِيرُ ٱلْأَوَّلِينَ

83:14. அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது.
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

83:15. அவ்வாறில்லை! அந்நாளில்1 அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப்படுவார்கள்.488
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ

83:16. பின்னர் அவர்கள் நரகில் எரிவார்கள்.
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ

83:17. “நீங்கள் பொய்யெனக் கருதியது இதுவே” என்று பின்னர் கூறப்படும்.
ثُمَّ يُقَالُ هَـٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

83:18. அவ்வாறில்லை! நல்லோரின் ஏடு இல்லிய்யீனில்434 இருக்கும்.
كَلَّآ إِنَّ كِتَـٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ

83:19. இல்லிய்யீன்434 என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ

83:20. அது எழுதப்பட்ட ஏடாகும்.
كِتَـٰبٌ مَّرْقُومٌ

83:21. நெருக்கமான(வான)வர்கள் அதைப் பார்ப்பார்கள்.
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ

83:22. நல்லோர் இன்பத்தில் இருப்பார்கள்.
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ

83:23. உயர்ந்த இருக்கைகள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

83:24. அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை நீர் அறிந்து கொள்வீர்.
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ

83:25. முத்திரையிடப்பட்ட மது புகட்டப்படுவார்கள்.
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ

83:26. அதன் முத்திரை கஸ்தூரியாகும். போட்டியிடுவோர் இதில் தான் போட்டியிட வேண்டும்.
خِتَـٰمُهُۥ مِسْكٌ ۚ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَـٰفِسُونَ

83:27. அதன் கலவை தஸ்னீம் எனும் நீராகும்.
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ

83:28. அது நெருக்கமானோர் அருந்துகிற நீரூற்று!
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ

83:29. குற்றம் புரிந்தோர் நம்பிக்கை கொண்டோரைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தனர்.
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ

83:30. அவர்களைக் கடந்து செல்லும்போது கண் சாடையால் கேலி செய்து கொண்டிருந்தனர்.
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ

83:31. தமது குடும்பத்தாரிடம் செல்லும்போது மகிழ்ச்சியடைந்து சென்றார்கள்.
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ

83:32. (நல்லோரான) அவர்களைக் காணும் போது “இவர்கள் வழிகெட்டவர்கள்” எனக் கூறினர்.
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَـٰٓؤُلَآءِ لَضَآلُّونَ

83:33. இவர்களைக் கண்காணிப்போராக அவர்கள் அனுப்பப்படவில்லை.
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَـٰفِظِينَ

83:34. அந்நாளில்1 (ஏகஇறைவனை) மறுப்போரைக் கண்டு நம்பிக்கை கொண்டோர் சிரிப்பார்கள்.
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ

83:35. உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்து) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ

83:36. (ஏகஇறைவனை) மறுப்போர் அவர்கள் செய்தவற்றுக்கேற்ப கூலி கொடுக்கப்பட்டார்களா? (எனக் கேட்கப்படும்.)
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ