ஹிஜாமா எனும் மருத்துவம் நபிவழியா?

தற்போது ஹிஜாமா எனும் மருத்துவ முறையை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தி சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இரத்தம் குத்தி எடுக்கும் ஹிஜாமா எனும் சிகிச்சை செய்வது நபிவழியா? இதைச் செய்வதற்கு மறுமையில் நன்மை உண்டா? என்பதை இந்த ஆக்கத்தில் விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தலையிலும், தோள்பட்டையிலும். கழுத்திலும் சிறு துவாரமிட்டு இரத்தத்தை உரிஞ்சி எடுக்கும் முறை இருந்தது. இது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மருத்துவமாக கருதப்பட்டு வந்தது.

அந்த வழக்கப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த சிகிச்சையை எடுத்துள்ளார்கள்.

صحيح البخاري

1939- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، حَدَّثَنَا أَيُّوبُ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ صَائِمٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்த போது ஹிஜாமா செய்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1939, 5694

صحيح البخاري

1835 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: قَالَ لَنَا عَمْرٌو: أَوَّلُ شَيْءٍ سَمِعْتُ عَطَاءً يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ: «احْتَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُحْرِمٌ»، ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: حَدَّثَنِي طَاوُسٌ، عَنْ ابْنِ عَبَّاسٍ، فَقُلْتُ: لَعَلَّهُ سَمِعَهُ مِنْهُمَا

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்த நிலையில் ஹிஜாமா செய்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 1835, 1836, 1938, 5695, 5698, 5700, 5701

صحيح البخاري

5697- حَدَّثَنَا سَعِيدُ بْنُ تَلِيدٍ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ : أَخْبَرَنِي عَمْرٌو وَغَيْرُهُ أَنَّ بُكَيْرًا حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَادَ الْمُقَنَّعَ ثُمَّ قَالَ : لاََ أَبْرَحُ حَتَّى تَحْتَجِمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ فِيهِ شِفَاءً.

ஹிஜாமா செய்வதில் நோய் நிவாரணம் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 5697

صحيح البخاري

2103 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «احْتَجَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَعْطَى الَّذِي حَجَمَهُ» وَلَوْ كَانَ حَرَامًا لَمْ يُعْطِهِ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்தார்கள். ஹிஜாமா செய்தவருக்கான கூலியையும் கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 2103, 2278, 2279, 5691, 5696

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்துள்ளார்கள் என்பதற்கும், அதைத் தொழிலாகச் செய்பவர்கள் அன்று இருந்துள்ளனர் என்பதற்கும் இவை சான்றுகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) ஹிஜாமா செய்ததை மார்க்கத்துடன் தொடர்புபடுத்தலாமா என்பதைப் புரியாமல் இதை சுன்னத் எனக் கூறி மக்களை சிலர் வழிகெடுக்கின்றனர்.

இது பற்றி நாம் விரிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகள் இரு வகைகளில் அமைந்துள்ளன.

ஒன்று வஹி எனும் இறைச் செய்தியின் அடிப்படையில் காட்டிய வழிகாட்டுதல்.

மற்றொன்று வஹி அடிப்படையில் அல்லாமல் அன்றைய சமுதாய வழக்கப்படி செய்தவை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் பயணம் செய்தது, கோதுமை உணவை உட்கொண்டது போன்ற காரியங்கள் இரண்டாம் வகைக்கு உதாரணங்களாகும். மேற்கண்ட காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள் என்பது உண்மை என்றாலும் அவற்றை நாம் செய்வது சுன்னத் என்று ஆகாது. ஏனெனில் இவற்றை வஹி அடிப்படையில் செய்யவில்லை. நபியாக ஆவதற்கு முன்பும் இதைச் செய்துள்ளார்கள்.

இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள தலைமுடி வளர்ப்பதையும், தாடி வைப்பதையும் உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாடியும் வைத்துள்ளனர். தலைமுடியும் வளர்த்துள்ளனர்.

ஆனாலும் தாடி வைப்பதை சுன்னத் என்கிறோம். தலைமுடி வளர்ப்பதை சுன்னத் என்று யாரும் கூறுவதில்லை.

தாடியும், தலைமுடியும் ல்லா மனிதர்களும் செய்யக் கூடிய காரியங்களே. ஆனாலும் தாடி வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் தாடி வளர்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் அது குறித்து மார்க்கக் கட்டளை இட்டதால்  வஹீ செய்தியாக ஆகி  சுன்னத் ஆகிறது. ஆனால் தலைமுடி வளர்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக ஆவதற்கு முன்பும் தலைமுடி வைத்தார்கள். அபூ ஜ்ஹல் உள்ளிட்ட காஃபிர்களும் தாடி வைத்திருந்தார்கள். எனவே இது உலக வழக்கப்படி செய்த செயல் ஆகிறது.

ஹிஜாமா எனும் செயல் வஹியின் அடிப்படையில் செய்த ஒன்றல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதாராக ஆவதற்கு முன்பே இந்த வழக்கம் இருந்ததால் இது இறைவன் புறத்திலிருந்து வந்த வழிகாட்டுதல் அல்ல. மனிதர்கள் தமது அனுபவ அறிவைக் கொண்டு கண்டறிந்த மருத்துவம் தவிர வேறில்லை. இதை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை.

இதில் நன்மை இருப்பதாக நமக்குத் தெரிந்தால் அதைக் கடைப்பிடிக்கலாம். இல்லாவிட்டால் விட்டு விடலாம்.

இதை வேறு ஹதீஸ்களின் துணையுடன் நாம் தெளிவாக விளங்க முடியும்.

صحيح البخاري

243 – حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ: بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»

சஹ்ல் பின் ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி) அவர்களிடம் (உஹுதுப் போரில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காயத்திற்கு எது மருந்தாக இடப்பட்டது? என்று மக்கள் கேட்டார்கள். அப்போது எனக்கும், ஸஹ்ல் (ரலி) அவர்களுக்கும் இடையில் வேறு யாரும் இருக்கவில்லை – அதற்கு ஸஹ்ல் (ரலி) அவர்கள், இதைப் பற்றி என்னை விட அறிந்தவர்கள் தற்போது யாரும் இல்லை. அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் கொண்டு வர, ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து இரத்தத்தைக் கழுவிக் கெண்டிருந்தார்கள். பாய் எடுத்துக் கரிக்கப்பட்டது. அதை நபியவர்களின் காயத்தில் வைத்து அழுத்தப்பட்டது என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹாஸிம்

நூல் :புகாரி 243

அன்றைக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டால் அதில் சாம்பலைப் பூசி இரத்த ஓட்டத்தை நிறுத்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹதுப் போரில் வெட்டப்பட்ட போது செய்தனர். இது அன்றைய மருத்துவ முறை என்ற அடிப்படையில் செய்யப்பட்டதே தவிர மார்க்க அடிப்படையில் செய்யப்பட்டதல்ல. அது போன்றது தான் இரத்தம் குத்தி எடுத்தல் என்பதும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமை உணவையே சாப்பிட்டார்கள் என்பதை நாம் அறிவோம். இறைத்தூதர் என்ற முறையில் தான் இவ்வாறு சாப்பிட்டார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

இறைத்தூதராக ஆவதற்கு முன்பும் அவர்கள் இவ்வுணவையே சாப்பிட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத எதிரிகளும் கூட இதையே சாப்பிட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் ஊரில் இருந்த வழக்கப்படி கோதுமையைச் சாப்பிட்டார்களே தவிர வஹீயின் அடிப்படையில் அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கோதுமையைச் சாப்பிட்டார்கள் என்பதால் நாமும் அதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று நாம் கருதுவதில்லை. அவ்வாறு கருதுவதும் கூடாது.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது பயணம் செய்ததால் நாமும் ஒட்டகத்தில் பயணம் செய்வது சுன்னத் என்று கூற முடியாது.

அவர்கள் அணிந்த ஆடை வகைகளைத் தான் நாமும் அணிய வேண்டும் என்று கூற முடியாது.

அவர்களுக்கு உஹத் போரில் காயம் ஏற்பட்ட போது சாம்பலைப் பூசி இரத்தக் கசிவை நிறுத்தினார்கள். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும் என்று கூறக் கூடாது.

ஏனெனில் அவை யாவும் இறைத்தூதர் என்ற அடிப்படையில் அவர்கள் செய்தவை அல்ல. அவர்களின் காலத்திலும், ஊரிலும் கிடைத்த வசதிகளுக்கேற்ப வாழ்ந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்தவையாகும்.

இந்த வேறுபாட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் விளக்கியுள்ளனர்.

صحيح مسلم

6277 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كِلاَهُمَا عَنِ الأَسْوَدِ بْنِ عَامِرٍ – قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ – حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَعَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ « لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ ». قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ « مَا لِنَخْلِكُمْ ». قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ « أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ ».

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது மதீனாவின் நபித் தோழர்களிடம் ஒரு வழக்கத்தைக் கண்டார்கள். பேரீச்சை மரத்தைப் பயிரிட்டு வந்த மதீனாவின் மக்கள் ஒட்டு முறையில் மரங்களை இணைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்யாதிருக்கலாமே? என்று கூறினார்கள். மதீனாவின் தோழர்கள் உடனே இவ்வழக்கத்தை விட்டு விட்டனர். ஆனால் இதன் பின்னர் முன்பை விட மகசூல் குறைந்து விட்டது. இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சை மரங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நபித் தோழர்கள் நினைவுபடுத்தினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உங்கள் உலக விஷயங்களை நீங்களே நன்கு அறிந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 4358

صحيح مسلم

إِنَّمَا أَنَا بَشَرٌ إِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ دِينِكُمْ فَخُذُوا بِهِ وَإِذَا أَمَرْتُكُمْ بِشَىْءٍ مِنْ رَأْىٍ فَإِنَّمَا أَنَا بَشَرٌ

மற்றொரு அறிவிப்பில் நானும் மனிதன் தான். மார்க்க விஷயமாக நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதைக் கடைப்பிடியுங்கள்! என் சொந்தக் கருத்தைக் கூறினால் நானும் மனிதன் தான் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4357

صحيح مسلم

فَإِنِّى إِنَّمَا ظَنَنْتُ ظَنًّا فَلاَ تُؤَاخِذُونِى بِالظَّنِّ وَلَكِنْ إِذَا حَدَّثْتُكُمْ عَنِ اللَّهِ شَيْئًا فَخُذُوا بِهِ فَإِنِّى لَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ

மற்றொரு அறிவிப்பில் நான் எனது கருத்தைத் தான் கூறினேன். அதற்காக என்னைப் பிடித்து விடாதீர்கள்! எனினும் அல்லாஹ்வின் சார்பாக நான் ஒரு கருத்தைக் கூறினால் அதைக் கடைப்பிடியுங்கள்! ஏனெனில் அல்லாஹ்வின் பெயரால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூல் : முஸ்லிம் 4356

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தும், அவர்களுக்கு வஹீ எனும் இறைச்செய்தி தொடர்ந்து வந்திருந்தும் கூட அவர்களின் நடவடிக்கைகளே இரண்டு வகைகளாகப் பார்க்கப்படுகின்றது என்பதை இந்த ஹதீஸ் மூலம் நாம் அறிகிறோம்.

மனிதர் என்ற முறையில் அவர்கள் செய்தவை.

இறைவனின் செய்தியைப் பெற்று தூதர் என்ற அடிப்படையில் செய்தவை.

இதில் முதல் வகையான அவர்களின் நடவடிக்கைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியமில்லை. இரண்டாவது வகையான அவர்களின் நடவடிக்கைகளைத் தான் பின்பற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். காரணம் இவை தான் வஹீயின் அடிப்படையில் அமைந்தவை.

இரத்தம் குத்தி எடுத்தல் முதல் வகையைச் சேர்ந்ததாகும்.

ஆயினும் ஹிஜாமா செய்யச் சொன்னது வஹீ அடிப்படையில் தான் என்று கருத்தைத் தரும் வகையில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றை ஆதாரமாகக் காட்டி இது மார்க்கத்தின் உள்ள சுன்னத்தான வணக்கம் என்று சிலர் வாதிடக்கூடும்.

ஆனால் அந்த ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மிஃராஜ் பயணத்தின் போது மலக்குமார்களின் கூட்டங்களைக் கடக்கும் போது “முஹம்மதே, ஹிஜாமா செய்யுங்கள்” என்று சொல்லப்படாமல் தவிர கடக்கவில்லை.

மேற்கண்ட ஹதீஸ் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை அனைத்திலும் பலவீனமான அறிவிப்பாளர்களே இடம் பெற்றுள்ளனர்

முதலாவது அறிவிப்பு – அப்பாத் பின் மன்சூர் அறிவிப்பது

مسند احمد

3316 – حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” خَيْرُ يَوْمٍ تَحْتَجِمُونَ فِيهِ سَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى وَعِشْرِينَ ” وَقَالَ: ” وَمَا مَرَرْتُ بِمَلَإٍ مِنَ الْمَلَائِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي، إِلَّا قَالُوا: عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ ” (2)

مصنف ابن أبي شيبة

24151- حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ , قَالَ : أَخْبَرَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ : مَا مَرَرْتُ بِمَلأَ مِنَ الْمَلاَئِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي إِلا َقَالُوا : عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ. (7/442).

عبد بن حميد

574 – أَخبَرنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخبَرنا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلى الله عَلَيه وسَلم، قَالَ: خَيْرُ يَوْمٍ تَحْتَجِمُونَ فِيهِ سَبْعَ عَشْرَةَ، وَتِسْعَ عَشْرَةَ، وَإِحْدَى (1) وَعِشْرِينَ. قَالَ: وَمَا مَرَرْتُ بِمَلإٍ مِنَ الْمَلاَئِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي، إِلاَّ قَالُوا: عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ.

سنن الترمذي

2053 – حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ عِكْرِمَةَ، يَقُولُ: كَانَ لِابْنِ عَبَّاسٍ، غِلْمَةٌ ثَلَاثَةٌ حَجَّامُونَ «فَكَانَ اثْنَانِ مِنْهُمْ يُغِلَّانِ عَلَيْهِ وَعَلَى أَهْلِهِ وَوَاحِدٌ يَحْجُمُهُ وَيَحْجُمُ أَهْلَهُ» قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ العَبْدُ الحَجَّامُ، يُذْهِبُ الدَّمَ، وَيُخِفُّ الصُّلْبَ، وَيَجْلُو عَنِ البَصَرِ» وَقَالَ: ” إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُرِجَ بِهِ مَا مَرَّ عَلَى مَلَإٍ مِنَ المَلَائِكَةِ إِلَّا قَالُوا: عَلَيْكَ بِالحِجَامَةِ ” وَقَالَ: «إِنَّ خَيْرَ مَا تَحْتَجِمُونَ فِيهِ يَوْمَ سَبْعَ عَشْرَةَ وَيَوْمَ تِسْعَ عَشْرَةَ وَيَوْمَ إِحْدَى وَعِشْرِينَ»

المستدرك على الصحيحين للحاكم

7473 – أَخْبَرَنَا مُكْرَمُ بْنُ أَحْمَدَ الْقَاضِي، ثَنَا الْحَسَنُ بْنُ مُكْرَمٍ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ عَبَّادُ بْنُ مَنْصُورٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مَرَرْتُ بِمَلَأٍ مِنَ الْمَلَائِكَةِ لَيْلَةَ أُسْرِيَ بِي إِلَّا قَالُوا عَلَيْكَ بِالْحِجَامَةِ يَا مُحَمَّدُ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ “

திர்மிதீ, முஸ்னத் அப்து பின் ஹுமைத், அஹ்மத், ஹாகிம், முஸன்னப் இப்னு அபீஷைபா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்ட இந்த அறிவிப்பில் அப்பாத் பின் மன்சூர் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், இப்னுல் மதீனி, நஸாயீ, அபூதாவூத் இப்னு ஸஅத், அபூபக்ர் பின் அபீஷைபா ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் அப்பாத் பின் மன்சூர் என்ற இந்த அறிவிப்பாளர் இக்ரிமாவிடம் இதைக் கேட்டதாக கூறுகிறார்.

ஆனால் இவர் இக்ரிமாவிடம் கேட்டதாக பொய்யாக சொல்லி இருக்கிறார் என்று அறிஞர்கள் அவர் வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்துள்ளனர்.

وقد دلسَ هذا الخبرَ فأسقط من إسناده اثنين من الرواة، فروى العقيلى في “الضعفاء” 3/136- ونقله عنه المزي في “تهذيب الكمال” 14/159- من طريق أحمد بن داود الحداد، قال: سمعتُ على ابن المديني يقول: سمعتُ يحيى بنَ سعيد القطان يقولُ: قلتُ لعباد بن منصور الناجي، سمعتَ: ما مررتُ بمل! من الملائكة، والنبي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يكتحل ثلاثاً؟ (يعني من عكرمة) ، فقال: حدثني ابن أبي يحيى، عن داود بن حُصين، عن عكرمةَ، عن ابن عباس. قلنا: وابن أبي يحيى- واسمه إبراهيم بن محمد- متروك، وداود بن حصين ضعيف في عكرمة خاصة.

நீங்கள் இக்ரிமாவிடம் இதைக் கேட்டீர்களா என்று யஹ்யா பின் ஸயீத் அல் கத்தான் அவர்கள் அப்பாத் பின் மன்சூரிடம் கேட்டனர். அதற்கு அவர் இக்ரிமா சொன்னதாக தாவூத் பின் ஹுசைன் என்பார் கூற தாவூத் கூறியதாக எனக்கு இப்னு அபீ யஹ்யா கூறினார் என்று பதிலளித்தார். அதாவது நேரடியாக இக்ரிமாவிடம் இவர் செவியுறவில்லை. இவர் இடையில் விட்டுள்ள இரு அறிவிப்பாளர்களும் பலவீனமானவர்கள் ஆவர்.

இரண்டாவது அறிவிப்பு – முஹம்மத் பின் உமர் மற்றும் இப்னு அபீ துவாலா அறிவிப்பது.

المطالب العالية محققا

2510 – وَقَالَ الْحَارِثُ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا ابْنُ أَبِي طُوَالَةَ، عَنْ [عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ حَزْمٍ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ الله عنه عن النبي -صلى الله عليه وسلم-صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ: لَمَّا عُرج بي إلى السماء أمُرّ بملاءِ مِنَ الْمَلَائِكَةِ إلَّا قَالُوا: عَلَيْكَ يَا مُحَمَّدُ بالحجامة.

2510 – الحكم عليه: هذا إسناد ضعيف جدًا فيه علتان:

الأولى: محمد بن عمر الواقدي فهو متروك.

الثانية: ابن أبي طوالة لم أجد له ترجمة.

முஹம்மத் பின் உமர் என்பார் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் ஆவார்.

இப்னு அபீ துவாலா என்பவர் யார் என அறியப்படாதவர். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

மூன்றாவது அறிவிப்பு – கதாதா அறிவிப்பது

المعجم الأوسط

 2081 – حدثنا أحمد قال نا عبد القدوس بن محمد العطار قال نا عمرو بن عاصم الكلابي قال نا همام قال نا قتادة عن أنس بن مالك  عن مالك بن صعصعة قال قال رسول الله صلى الله عليه و سلم ما مررت ليلة أسري بي على ملإ من الملائكة إلا أمروني بالحجامة لم يروه عن قتادة إلا همام ولا عن همام إلا عمرو بن عاصم تفرد به عبد القدوس

قلت: رجاله رجال الصحيح، لكن في سنده قتادة ولم يصرح بالتحديث، وهو مدلّس. من الثالثة، فالإِسناد ضعيف.

கதாதா என்பவர் தத்லீஸ் செய்பவர் ஆவார். தனக்கு அறிவித்தவரைக் கூறாமல் அவருக்கு முந்திய அறிவிப்பாளரைக் கூறுதல் தத்லீஸ் ஆகும். இது பற்றி அறிய

தத்லீஸ் என்றால் என்ன என்ற ஆக்கத்தை பார்க்கவும்

நான்காவது அறிவிப்பு – அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அறிவிப்பது

 عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ

سنن الترمذي

2052 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ بُدَيْلٍ الكُوفِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَاقَ، عَنْ القَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ  بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: «حَدَّثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لَيْلَةِ أُسْرِيَ بِهِ أَنَّهُ لَمْ يَمُرَّ عَلَى مَلَإٍ مِنَ المَلَائِكَةِ إِلَّا أَمَرُوهُ أَنْ مُرْ أُمَّتَكَ بِالحِجَامَةِ»: وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ

திர்மிதியில் பதிவு செய்யப்பட்ட இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் என்ற அற்விப்பாளார் வருகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.

، ففيه عبد الرحمن بن إسحاق وهو أبو شيبة الواسطي، قال في التقريب (ص 336) ضعيف.

ஐந்தாவது அறிவிப்பு – அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் அறிவிப்பது

مسند البزار

5970 ، حَدَّثنا عُمَر بن الخطاب : حَدَّثنا عَبد الله بن صالح ، حَدَّثنا العطاف ، عَن نافع ، عَن ابن عُمَر ، عَن النبي صلى الله عليه وسلم قال : ما مررت بسماء من السموات إلاَّ قالت الملائكة : يا محمد مر أمتك بالحجامة فإنه خير ما تداووا به الحجامة والكست والشونيز.

பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் இடம்பெறுகிறார்.

وهذا إسناد فيه ضعف من أجل عبد الله بن صالح المصري كاتب الليث قال في  التقريب (ص 308): صدوق كثير الغلط، ثبت في كتابه وكانت فيه غفلة.

இவர் உண்மையாளர் ஆனாலும் அதிகம் தவறாக அறிவிப்பவர். இவரிடம் கவனமின்மை உள்ளது.

ஆறாவது அறிவிப்பு – அபூ ஹுர்முஸ் என்ற நாஃபிவு அறிவிப்பது

المعجم الكبير للطبراني

11204 – حَدَّثَنَا يَحْيَى بن مُحَمَّدٍ الْحِنَّائِيُّ، حَدَّثَنَا شَيْبَانُ بن فَرُّوخٍ، حَدَّثَنَا نَافِعٌ أَبُو هُرْمُزٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِي اللَّهُ تَعَالَى عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:لَيْلَةَ أُسْرِيَ بِي مَا مَرَرْتُ عَلَى مَلأٍ مِنَ الْمَلائِكَةِ إِلا أَمَرُونِي بِالْحِجَامَةِ.

தப்ரானியின் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸ் அபூ ஹுர்முஸ் எனும் நாஃபிவு என்பார் வழியாக அறிவிக்கப்படுள்ளது.

قَالَ أَحْمَدُ: ضَعِيفُ الْحَدِيثِ. وَقَالَ ابْنُ مَعِينٍ: ضَعِيفٌ، لا يُكْتَبُ حَدِيثُهُ.

وَقَالَ ابْنُ حِبَّانَ: رَوَى عَنْ عَطَاءٍ نُسْخَةً مَوْضُوعَةً. وَقَالَ النَّسَائِيُّ: لَيْسَ بِثِقَةٍ.

இவர் பலவீனமானவர் என அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். இவரது ஹதீஸை பதிவு செய்யக் கூடாது என்று இப்னு மயீன் கூறுகிறார்.

அதா என்பார் வழியாக அறிவிக்கப்பட்டவை என்ற ஏடு ஒன்று இவரிடம் இருந்த்து. அவை அதா அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவை. அதிலிருந்து தான் இவர் அறிவிப்பார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ கூறுகிறார்.

ஏழாவது அறிவிப்பு – ஸஅது பின் தரீஃப் மற்றும் இஸ்பஃ பின் நபாத்தா ஆகியோர் அறிவிப்பது

الكامل في ضعفاء الرجال – ابن عدي

 ثنا الساجي ثنا إبراهيم بن سليمان الكوفي ثنا عبيد بن عبد الرحمن ثنا سعد بن طريف عن الأصبغ بن نباتة عن علي قال رسول الله صلى الله عليه و سلم ما مررت ليلة أسري بي في السماء إلا قالت الملائكة مر أمتك بالحجامة

இந்த ஹதீஸ் அல்காமில் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 – سعد بن طريف، قال ابن معين: لا يحل لأحد أن يروي عنه، وقال ابن حبّان: كان يضع الحديث. الميزان (2/ 123).

2 – الأصبع بن نباته قال في التقريب (ص 113): متروك، رُمي بالرفض.

இதன் அறிவிப்பாளர்களில்  ஸஅது பின் தரீஃப் இடம் பெற்றுள்ளார்.

இவர் வழியாக அறிவிப்பது ஹலால் இல்லை என்று இப்னு மயீன் கூறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி அறிவிப்பவராக இருந்தார் என இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான இஸ்பஃ என்பார் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

எட்டாவது அறிவிப்பு – ஈஸா பின் அப்துல்லாஹ் அறிவிப்பது

الكامل في ضعفاء الرجال – ابن عدي

أخبرنا محمد بن الحسن بن حفص ثنا عباد بن يعقوب أخبرنا عيسى بن عبد الله قال حدثني أبي عن أبيه عن جده عن علي قال نزل جبريل عليه السلام باليمين مع الشاهد والحجامة ويوم الأربعاء يوم نحس مستمر

இது அல்காமில் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

وهذا إسناد ضعيف جدًا من أجل عيسى بن عبد الله، وهو ابن محمد بن عمر الكوفي قال الدارقطني: متروك كما في اللسان (4/ 399).

இதன் அறிவிப்பாளரான ஈஸா பின் அப்துல்லாஹ் மிக பலவீனமானவர். இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்று தாரகுத்னீ கூறுகிறார்.

ஒன்பதாவது அறிவிப்பு – கஸீர் பின் ஸலீம் அறிவிப்பது

الكامل في ضعفاء الرجال – ابن عدي

حدثنا محمد بن علي قال ثنا قتيبة بن سعيد وحدثنا بن ذريح ثنا جبارة قالا ثنا كثير بن سليم عن أنس عن النبي صلى الله عليه و سلم قال جبارة سمعت النبي  صلى الله عليه و سلم يقول ما مررت ليلة أسري بي على ملأ من الملائكة إلا قالوا يا محمد مر أمتك بالحجامة

இது அல்காமில் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ضَعَّفَهُ ابْنُ الْمَدِينِيِّ، وَالنَّاسُ. وَقَالَ الْنَّسَائِيُّ، وَغَيْرُهُ: مَتْرُوكٌ. وَقَالَ أَبُو حَاتِمٍ. ضَعِيفُ الْحَدِيثِ.

இதன் அறிவிப்பாளரான கஸீர் பின் ஸலீம் என்பார் பலவீனமானவர் என இப்னுல் மதீனீ கூறுகிறார். இவர் பொய்யரெஅன சந்தேகிக்கப்பட்டவர் என நஸாயீ மற்றும் சிலர் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என அபூ ஹாதம் அவர்கள் கூறியுள்ளனர்.

ஹிஜாமா செய்ய வானவர்கள் கூறியது சரியான அறிவிப்பாக இருந்தால் இது மார்க்கத்தில் சுன்னத்தாக ஆகிவிடும். ஆனால் இந்தக் கருத்தில் ஒரு அறிவிப்பு கூட சரியான அறிவிப்பு அல்ல. எனவே ஹிஜாமா செய்வதற்கும் மார்க்கத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.

அன்றைக்கு இருந்த பழங்கால மருத்துவம் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்துள்ளனர்.