Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 95 அத்தீன்
மொத்த வசனங்கள் : 8
அத்தீன் – அத்தி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

95:1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!379
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ

95:2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!379
وَطُورِ سِينِينَ

95:3. அபயமளிக்கும் இவ்வூர்34 மீதும் சத்தியமாக!379
وَهَـٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ

95:4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.368
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ

95:5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.
ثُمَّ رَدَدْنَـٰهُ أَسْفَلَ سَـٰفِلِينَ

95:6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

95:7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ

95:8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَـٰكِمِينَ