Chapter number not found in the title!
அறிவியல் சான்றுகள்
1400 ஆண்டுகளுக்கு முன்னால் எந்த மனிதனுக்கும் தெரியாத பல விஷயங்கள், இறைவனுக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும் என்று சொல்லத்தக்க பல விஷயங்கள் திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன.
எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் இதைச் சொல்லி இருக்கவே முடியாது என்பதையும், இறைவன் தான் சொல்லி இருக்க முடியும் என்பதையும் நேர்மையான பார்வையுடையவர்களால் அறிந்து கொள்ள இயலும். அது போன்ற வசனங்களைக் கீழே தந்துள்ளோம்.
இவ்வசனங்களை வாசியுங்கள். அத்துடன் இந்த வசனங்களின் குறிப்பு எண்ணுக்கான விளக்கத்தையும் வாசித்தால் இன்னும் நன்றாக அறிந்து கொள்ள இயலும்.
பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது – 2:22, 21:32, 40:64, 52:5
(பார்க்க : 288வது குறிப்பு)
பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு – 86:11
(பார்க்க : 149வது குறிப்பு)
மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன – 4:56
(பார்க்க : 119வது குறிப்பு)
விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் – 6:125
(பார்க்க : 172வது குறிப்பு)
பூமியில் மட்டும் தான் மனிதன் வாழ முடியும் – 2:36, 7:24, 7:25
(பார்க்க : 175வது குறிப்பு)
ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவிஈர்ப்பு விசையே காரணம் – 16:79, 67:19
(பார்க்க : 260வது குறிப்பு)
விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது – 17:37
(பார்க்க : 266வது குறிப்பு)
பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்னைன் என்பவரின் பயணம் – 18:90
(பார்க்க : 274வது குறிப்பு)
பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் – 20:53, 43:10, 78:6
(பார்க்க : 284வது குறிப்பு)
பெருவெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு – 21:30
(பார்க்க : 287வது குறிப்பு)
கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் – 23:14
(பார்க்க : 296வது குறிப்பு)
நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது – 23:18
(பார்க்க : 297வது குறிப்பு)
கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது – 25:53, 27:61, 35:12 55:19,20
(பார்க்க : 305வது குறிப்பு)
காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் – 34:12
(பார்க்க : 325வது குறிப்பு)
வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி உள்ளது – 35:41, 13:2, 31:10, 22:65
(பார்க்க : 328வது குறிப்பு)
பல கிழக்குகள், பல மேற்குகள் உள்ளன என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் – 37:5, 55:17, 70:40
(பார்க்க : 335வது குறிப்பு)
பெருவெடிப்புக்குப் பின் தூசுப்படலத்திலிருந்து கோள்கள் உருவாயின – 41:11
(பார்க்க : 353வது குறிப்பு)
மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தமது எடைகளை எடுத்துக் கொள்கின்றன – 6:98, 50:4, 71:17
(பார்க்க : 167வது குறிப்பு)
விண்வெளிப் பயணம் சாத்தியமே – 55:33-35
(பார்க்க : 304வது குறிப்பு)
விரல்ரேகை மனிதனின் முக்கிய அடையாளம் – 75:4
(பார்க்க : 208வது குறிப்பு)
உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு – 76:2
(பார்க்க : 207வது குறிப்பு)
தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, தேனீக்களின் வயிற்றிலிருந்து தான் வெளியாகின்றது – 16:69
(பார்க்க : 259வது குறிப்பு)
கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடலின் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன – 24:40
(பார்க்க : 303,429வது குறிப்புகள்)
அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும் குறிப்பிட்ட காலம்வரை ஏற்றுக் கொள்ளும் – 13:8
(பார்க்க : 144வது குறிப்பு)
பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன – 96:15
(பார்க்க : 426வது குறிப்பு)
காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும் – 51:41,42
(பார்க்க : 366வது குறிப்பு)
கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை – 28:32
(பார்க்க : 367வது குறிப்பு)
விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை – 86:7
(பார்க்க : 231வது குறிப்பு)
வான்வெளியிலும் பாதைகள் உண்டு – 51:7
(பார்க்க : 323வது குறிப்பு)
பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது – 13:2, 31:10
(பார்க்க : 240வது குறிப்பு)
சூரியனும், கோள்களும் ஓடுகின்றன – 13:2, 31:29, 35:13, 36:38, 39:5
(பார்க்க : 241வது குறிப்பு)
சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது பற்றியும் அறிவித்திருப்பது – 54:1
(பார்க்க : 422வது குறிப்பு)
வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது – 51:47
(பார்க்க : 421வது குறிப்பு)
உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு – 13:3, 20:53, 36:36, 43:12, 51:49
(பார்க்க : 242வது குறிப்பு)
உலக வெப்பமயமாதலால் பனிப் பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பரப்பு குறையும் – 13:41, 21:44
(பார்க்க : 243வது குறிப்பு)
வான்மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் – 24:43
(பார்க்க : 419வது குறிப்பு)
அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் – 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32
(பார்க்க : 412வது குறிப்பு)
“இருள்கள்’ என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலைநீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலைநீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ள அதிசயம். – 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11
(பார்க்க : 429வது குறிப்பு)
பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றி ஆராயத் தூண்டுதல் – 2:259
(பார்க்க : 406வது குறிப்பு)
குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறி ஆராயத் தூண்டுதல் – 19:21, 19:29,30, 21:91, 23:50
(பார்க்க : 415வது குறிப்பு)
ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் – 88:17, 36:41,42
(பார்க்க : 399வது குறிப்பு)
இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது – 57:25
(பார்க்க : 423வது குறிப்பு)
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன – 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32
(பார்க்க : 248வது குறிப்பு)
பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துதல். – 41:9,10
(பார்க்க : 248வது குறிப்பு)
நவீனக் கருவிகளும், ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை – 16:66
(பார்க்க : 257வது குறிப்பு)
மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை – 22:31
(பார்க்க : 416வது குறிப்பு)
கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் – 3:153
(பார்க்க : 102வது குறிப்பு)
மரபணுக்கள் வழிவழியாகத் தொடரும் – 7:172, 2:38
(பார்க்க : 189வது குறிப்பு)
சென்ற நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ரிலேடிவிடி (relativity) எனும் சார்பியல் கோட்பாடு – 22:47, 32:5
(பார்க்க : 293வது குறிப்பு)
மனிதன் குரங்கிலிருந்து படைக்கப்படவில்லை – 3:59, 4:1, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 22:5, 23:12, 30:20, 32:7, 35:11, 37:11, 38:71, 39:6, 40:67, 49:13, 55:14
(பார்க்க : 368வது குறிப்பு)
மனிதர்களை மூக்கு சரியாக அடையாளம் காட்டும் – 68:16
(பார்க்க : 371வது குறிப்பு)
பூமி பல அடுக்குகளைக் கொண்டது என்பதை துரப்பணக் கருவிகள் இல்லாத காலத்தில் கூறிய திருக்குர்ஆன் – 65:12
(பார்க்க : 425வது குறிப்பு)
தண்ணீருக்குள் பிரசவம் நடப்பது தாய்க்கும், சேய்க்கும் நல்லது – 19:24
(பார்க்க : 436வது குறிப்பு)
குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே – 75:39
(பார்க்க : 437வது குறிப்பு)
மன அழுத்தம் நீக்கும் மருந்தை அன்றே சொன்னது – 13:28
(பார்க்க : 477வது குறிப்பு)
தேனீக்களின் வழி அறியும் திறன் – 16:68
(பார்க்க : 474வது குறிப்பு)
அதிர்வுகளை அறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளது 27:18
(பார்க்க : 470வது குறிப்பு)
நோன்பின் நன்மைகள் – 2:184
(பார்க்க : 475வது குறிப்பு)
தாய்ப்பால் ஊட்டுவதன் நன்மை – 2:233
(பார்க்க : 478வது குறிப்பு)
யஹ்யா என்ற பெயரில் இதற்கு முன் ஒருவரும் இருந்ததில்லை என்ற பிரகடனம் மூலம் இறைவேதம் என நிரூபித்தல் – 19:7
(பார்க்க : 467வது குறிப்பு)
முன்னறிவிப்புகள்
கஅபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு – 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4
(பார்க்க : 34வது குறிப்பு)
மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு – 9:28
(பார்க்க : 410வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் – 5:67
(பார்க்க : 145வது குறிப்பு)
குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு – 16:8
(பார்க்க : 253வது குறிப்பு)
மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு – 73:20
(பார்க்க : 118வது குறிப்பு)
முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு – 17:76, 54:45
(பார்க்க : 268வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை செய்ய முடியாத நேரத்தில், “சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்” என்ற முன்னறிவிப்பு – 30:2,3,4
(பார்க்க : 313வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு – 28:85
(பார்க்க : 311வது குறிப்பு)
பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு – 14:37, 28:57
(பார்க்க : 246வது குறிப்பு)
ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு – 18:9
(பார்க்க : 271வது குறிப்பு)
முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு – 111:1,2
(பார்க்க : 356வது குறிப்பு)
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின்போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு – 11:44, 29:15, 54:15
(பார்க்க : 222வது குறிப்பு)
மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு – 33:60
(பார்க்க : 185வது குறிப்பு)
திருக்குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு – 15:9
(பார்க்க : 143வது குறிப்பு)
பல்லாயிரம் ஆண்டுகளாக வற்றாது வாரி வழங்கும் ஜம்ஜம் கிணறு 3:97
(பார்க்க : 438வது குறிப்பு)
வறுமையில் உழன்று கொண்டிருந்த மக்காவாசிகள் செல்வந்தர்களாக ஆவார்கள் என்ற முன்னறிவிப்பின் படி செல்வச்செழிப்புடன் திகழ்வது 9:28
(பார்க்க : 410வது குறிப்பு)
தர்க்கரீதியான சான்றுகள்
திருக்குர்ஆனைப் போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் – 2:23,24, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34
(பார்க்க : 7வது குறிப்பு)
திருக்குர்ஆனில் முரண்பாட்டைக் காட்ட முடியாது என்ற அறைகூவல் – 4:82, 41:42
(பார்க்க : 123வது குறிப்பு)
முந்தைய வேதங்களில் மத குருமார்கள் மறைத்தவற்றை எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலம் திருக்குர்ஆன் வெளிப்படுத்தியது – 3:93, 7:157, 48:29
(பார்க்க : 97வது குறிப்பு)
இறைத் தீர்ப்பு பெறுவதற்காகப் பிற மதத்தவர்களுக்கு அறைகூவல் விட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆன்மிக பலம் – 3:61
(பார்க்க : 94வது குறிப்பு)
இறை அதிகாரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் இதை முஹம்மது நபி உருவாக்கவில்லை என்று தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் – 3:128
(பார்க்க : 100வது குறிப்பு)
குருடரைப் புறக்கணித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கடுமையாகக் கண்டிக்கும் வசனத்தையும் மக்களுக்கு ஓதிக் காட்டி, இதை முஹம்மது நபி உருவாக்கவில்லை என்று தர்க்கரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் – 80:1-8
(பார்க்க : 168வது குறிப்பு)
நபிகள் நாயகம், தமது தூய வாழ்க்கையைத் தமது நம்பகத் தன்மைக்குச் சான்றாக ஆக்கி, அதன் மூலம் தாம் கொண்டு வந்த வேதம் உண்மையானது என்று நிறுவுதல் – 10:16
(பார்க்க : 212வது குறிப்பு)
நபிகள் நாயகம் அவர்களைப் பைத்தியக்காரர் என்று எதிரிகள் சொன்னபோது யார் வேண்டுமானாலும் என்னைப் பரிசோதனை செய்யலாம் என்று அறைகூவல் விட்டு அதை முறியடித்தது – 7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22
(பார்க்க : 468வது குறிப்பு)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி மீது களங்கம் சுமத்திய ஒருவருக்கு, மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்ட போது அதைக் திருக்குர்ஆன் கண்டிப்பதன் மூலம் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொந்தக் கருத்து அல்ல, இறைவேதம் தான் என்று தர்க்க ரீதியாக நிரூபித்தல் – 24:22
(பார்க்க : 364வது குறிப்பு)
குரைஷ் குலத்துக்கும், மற்றவர்களுக்கும் ஹஜ் வழிபாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமையை நபிகள் நாயகம் (ஸல்) தமது சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து இறைத்துதர் என்று நிரூபித்துக்காட்டியது – 2:199
பார்க்க : 59 வது குறிப்பு
பெண்களுக்கு ஆன்மா உண்டா என்று விவாதிக்கப்பட் காலத்தில் அவர்களின் சொத்துரிமையையும், மறுமண உரிமையையும் மீட்டுத்த வேதம்.- 2:240
பார்க்க : 405 வது குறிப்பு
குலப்பெருமைக்கு சமாதி காட்டிய வேதம் – 49:13, 53:32
பார்க்க : 508 வது குறிப்பு
மனிதனை மனிதன் வணங்குவதை ஒழித்துக் கட்டிய வேதம் – 2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72
பார்க்க : 11வது குறிப்பு
கடவுளைக் கண்டதாக ஆன்மிகவாதிகள் மக்களை ஏமாற்றி வரும் நிலையில் கடவுளை எவரும் பார்க்கவில்லை; பார்க்க முடியாது எனக் கூறி ஆன்மிகத்தின் பெயரால் சுரண்டுவதை ஒழித்துக்கட்டிய வேதம். – 2:55, 4:153, 6:103, 7:143, 25:21
பார்க்க : 21 வது குறிப்பு
பில்லி, சூனியம் உண்மை என நம்பி கொள்கையையும், மானத்தையும், பொருளாதாரத்தையும் இழக்காதீர்கள் சூனியம் என்பது பித்தலாட்டம் என எச்சரிக்கும் வேதம். – 2:102, 7:116, 20:66, 20:69, 52:13-15
பார்க்க : 28, 285, 357, 495, 499 ஆகிய குறிப்புகள்
வழிபாட்டுத் தலங்களுக்கு மனிதர்கள் உரிமையாளர்கள் அல்லர். அது இறைவனின் ஆலயம் என்பதால் யாரையும் தடுக்கக் கூடாது என்று கூறி தீண்டாமைக்கு சமாதி கட்டிய வேதம். – 2:114, 96:8-18
பார்க்க : 32 வது குறிப்பு
குற்றங்களைக் குறைக்க சரியான தீர்வைச் சொல்லும் வேதம் – 2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4
பார்க்க : 43 வது குறிப்பு
கடவுளுடன் மக்கள் நேரடித் தொடர்பு கொள்வதைத் தடுத்து இடைத் தரகர்களை ஆதரிக்கும் போலி ஆன்மிகத்தை உடைத்து எறிந்து கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இடைத் தரகர்கள் இல்லை என்று பறை சாற்றிய வேதம். – 2:186, 4:108, 7:56, 11:61, 20:46, 34:50, 40:60, 50:16, 56:85, 57:4, 58:7
பார்க்க : 49 வது குறிப்பு
தீண்டாமையை வேரறுக்கும் வேதம். – 80:1-12
பார்க்க :168 வது குறிப்பு
அனைத்து எதிர்வாதங்களையும் முறியடிக்கும் வேதம்
பிற மதத்தினரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா? – 2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9
பார்க்க : 53 வது குறிப்பு
இஸ்லாம் பயங்கரவாதத்தை ஆதரிக்கிறதா? – 2:247, 248
பார்க்க : 76 வது குறிப்பு
கட்டாய மதமாற்றம் செய்வதை இஸ்லாம் ஆதரிக்கிறதா? – 2:193, 8:39
பார்க்க : 54 வது குறிப்பு
விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சத்தை இஸ்லாம் மறுக்கலாமா? – 2:236, 2:241, 33:49, 65:6,7
பார்க்க : 74 வது குறிப்பு
கடவுளுக்காக இஸ்லாம் சிரமத்தைச் சுமக்கச் சொல்கிறதா? – 2:185, 2:220, 2:233, 2:286, 4:28, 5:6, 6:152, 7:42, 23:62, 65:7
பார்க்க : 68 வது குறிப்பு
விவாகரத்து மூலம் பெண்களை இஸ்லாம் கொடுமைப்படுத்துகிறதா? – 2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49
பார்க்க : 66 வது குறிப்பு
சாட்சி சொல்லும் சட்டத்தில் ஆண் பெண் பாரபட்சம் ஏன்? – 2:285
பார்க்க : 85 வது குறிப்பு
பிற மதத்தவர்களிடன் நட்பு பாராட்ட இஸ்லாம் தடுக்கிறதா? – 3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13
பார்க்கம் : 89 வது குறிப்பு
பிற மதத்தவரை திருமணம் செய்ய இஸ்லாம் தடுப்பது ஏன்? – 2:221, 60:10
பார்க்க : 91 வது குறிப்பு
ஆண்களுக்கு பலாதார மணத்தை இஸ்லாம் அனுமதித்து இருப்பது சரியா? – 4:3
பார்க்க : 106 வது குறிப்பு
அடிமைப் பெளை அனுபவித்துக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறதா? – 4:3, 4:24,25, 4:36, 16:71, 23:6, 24:31, 33:50, 33:52, 33:55, 70:30
பார்க்க : 107 வது குறிப்பு
வாரிசுரிமையில்ஆண் பெண் பாரபட்சம் ஏன்? – 4:16, 4:176
பார்க்க : 109 வது குறிப்பு
பிற மதக்கடவுள்கள ஏசலாமா ? – 6:108
பார்க்க : 170 வது குறிப்பு
உயிர்களைக் கொன்று தின்பது சரியா? – 2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27
பார்க்க : 171 வது குறிப்பு
முஸ்லிமல்லாதவர்கள் கஅபா வர தடை ஏன்? – 9:28
பார்க்க : 200 வது குறிப்பு
முஸ்லிம் ஆட்சியில் முஸ்லிமல்லாதவருக்கு ஜிஸ்யா வரி ஏன் ? – 9:29
பார்க்க : 201 வது குறிப்பு
திருக்குர்ஆன் அரபு மொழியில் இருப்பது ஏன்? – 12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12
பார்க்க : 227 வது குறிப்பு
ஜனநாயகத்தை இஸ்லாம் மறுக்கிறதா? – 4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12
பார்க்க : 234 வது குறிப்பு
முஸ்லிமல்லாதவர்களின் ஆட்சிக்குக் கட்டுப்படலாமா? – 12:74-76
பார்க்க : 237 வது குறிப்பு
பெண்களில் ஏன் இறைத்தூதர்ரகள் இல்லை? – 12:109, 16:43, 21:7
பார்க்க : 239 வது குறிப்பு
விதியை நம்புதல் மூட நம்பிக்கையா? – 57:23
பார்க்க : 289 வது குறிப்பு
கஅபா ஆலயத்தில் மக்காவாசிகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் சமமான உரிமை உண்டு – 22:25
பார்க்க 290 வது குறிப்பு
இஸ்லாம் கடைசியில் வந்த மதமா? – 2:132, 3:52, 3:64, 3:67, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 10:90, 12:101, 22:78, 27:42, 43:69, 46:15, 51:36
பார்க்க : 295 வது குறிப்பு
பெண்களுக்கு புர்கா ஏன்? – 24:31, 33:59
பார்க்க : 300 வது குறிப்பு
தத்தெடுப்பதை இஸ்லாம் தடுப்பது ஏன்? – 33:4, 58:2
பார்க்க : 317 வது குறிப்பு
நபிகள் நாயகம் அவர்கள் வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் செய்தது சரியா? – 33:37
பார்க்க : 319 வது குறிப்பு
பெண்களுக்கு இத்தா ஏன்? – 2:228, 2:231, 2:232, 2:234, 2:235, 33:49, 65:1, 65:4
பார்க்க : 69, 360, வது குறிப்பு
டார்வின் தியரியை இஸ்லாம் மறுக்கிறதா? – 2:21, 3:59, 4:1, 5:18, 6:2, 6:98, 7:189, 15:26, 15:28, 16:4, 18:37, 18:51, 19:67, 21:37, 22:5, 23:12, 25:54, 30:20, 32:7, 35:11, 36:77, 37:11, 38:71, 39:6, 40:57, 40:67, 49:13, 50:16, 51:56, 53:45, 55:3, 55:14, 70:19, 76:2, 86:5, 87:2, 90:4, 92:3, 95:4, 96:1
பார்க்க : 368 வது குறிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? – 33:50
பார்க்க : 378 வது குறிப்பு
ஆண்களுக்கு பல திருமணத்தை அனுமதித்தது ஏன்? – 4:3
பார்க்க : 393 வது குறிப்பு
பெண்களுக்கு விவாகரத்து உரிமை உண்டா? – 2:229
பார்க்க : 402 வது குறிப்பு
பெண்கள் தாம் விரும்பியவரைத் திருமனம் செய்யலாமா – 2:234, 4:19, 2:240
பார்க்க : 403, 405 வது குறிப்புகள்
பிற மதத்தினரின் வழிபாட்டுதலங்கள் – 22:40
பார்க்க : 433 வது குறிப்பு
பாவிகளும் இறைவனை நெருங்கலாம் – 12:87, 15:56, 29:23, 39:53
பார்க்க : 471 வது குறிப்பு
பெண்கள் முத்தை மறைக்கச் சொல்வது சரியா – 24:31, 33:59
பார்க்க : 472 வது குறிப்பு
தேவைகள் அற்ற இறைவனுக்கு வணக்கங்கள் ஏன் – 2:263, 2:267, 3:97, 3:182, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2
பார்க்க : 485 வது குறிப்பு
இப்படி ஏராளமான வசனங்கள் திருக்குர்ஆனை முஹம்மது நபி சுயமாக இயற்றிக் கூறவில்லை. அவரைப் படைத்த இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கின்றன.