Quran Tamil Translation

குர்ஆன் அத்தியாயத்திற்குச் செல்

முந்தைய ஸுரா அடுத்த ஸுரா
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 101 அல் காரிஆ
மொத்த வசனங்கள் : 11
அல் காரிஆ – திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல்காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

101:1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி!
ٱلْقَارِعَةُ

101:2. அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?
مَا ٱلْقَارِعَةُ

101:3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்ன வென்று உமக்கு எப்படித் தெரியும்?
وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ

101:4. அந்நாளில்1 மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.
يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ

101:5. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ

101:6.
فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ

101:7. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.26
فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

101:8.
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ

101:9. யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.26
فَأُمُّهُۥ هَاوِيَةٌ

101:10. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ

101:11. (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.
نَارٌ حَامِيَةٌۢ