Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 102 அத்தகாஸுர்
மொத்த வசனங்கள் : 8
அத்தகாஸுர் – அதிகம் தேடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

102:1.
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ

102:2. மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.26
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ

102:3.
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

102:4. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள்.
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

102:5.
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ

102:6. அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.26
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ

102:7. பின்னர் மிக உறுதியாக அதை அறிவீர்கள்.
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ

102:8. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ