அத்தியாயம் : 107 அல் மாவூன்
மொத்த வசனங்கள் : 7
அல் மாவூன் – அற்பப் பொருள்
இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல்மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
107:1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா?
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ 
107:2. அவன் அனாதையை விரட்டுகிறான்.
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ 
107:3. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ 
107:4.
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ 
107:5. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.26
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ 
107:6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ 
107:7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ 
 
    