Quran Tamil Translation

அத்தியாயம் : 112 இஃக்லாஸ்
மொத்த வசனங்கள் : 4
இஃக்லாஸ் – உளத்தூய்மை
இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையைத் இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

112:1. “அல்லாஹ் ஒரே ஒருவன்” என கூறுவீராக!
قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ

112:2. அல்லாஹ் தேவைகளற்றவன்.485
ٱللَّهُ ٱلصَّمَدُ

112:3. (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

112:4. அவனுக்கு நிகராக யாருமில்லை.
وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ