அத்தியாயம் : 55 அர்ரஹ்மான்
மொத்த வசனங்கள் : 78
அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
55:1.
ٱلرَّحْمَـٰنُ
55:2. அளவற்ற அருளாளன், குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.26
عَلَّمَ ٱلْقُرْءَانَ
55:3. மனிதனைப் படைத்தான்.368
خَلَقَ ٱلْإِنسَـٰنَ
55:4. விளக்கும் திறனை அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்.
عَلَّمَهُ ٱلْبَيَانَ
55:5. சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன.
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ
55:6. மரங்களும், செடி கொடிகளும் (அவனுக்கு) பணிகின்றன.
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
55:7.
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
55:8.
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
55:9. அவன் வானத்தை507 உயர்த்தினான். நிறுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதிருக்கவும், நியாயமாக எடையை நிலைநாட்டவும், எடையில் குறைத்து விடாதிருக்கவும் தராசை நிறுவினான்.26
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ
55:10. பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
55:11.
فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ
55:12. அதில் கனிகளும், பாளைகளுடைய பேரீச்சை மரங்களும், தோல் மூடிய தானியமும், மணம் வீசும் மலர்களும் உள்ளன.26
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ
55:13. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:15. தீப்பிழம்பிலிருந்து ஜின்னைப் படைத்தான்.
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
55:16. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:17. (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.335
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
55:18. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:19. இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான்.
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
55:20. இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.305
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
55:21. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:22. அவ்விரண்டிலிருந்தும் முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.
يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ
55:23. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:24. கடலில் மலைகளைப் போல் ஓங்கி உயர்ந்து ஓடும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ
55:25. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:26. இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள்.225
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
55:27. மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.225
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
55:28. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:29. வானங்களிலும்,507 பூமியிலும் இருப்போர் அவனிடம் யாசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவன் அலுவலில் இருக்கிறான்.
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ
55:30. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:31. மதிப்பு மிக்க (மனித, ஜின் ஆகிய) இரு இனத்தவர்களே! உங்களுக்காக (விசாரிக்க) நேரம் ஒதுக்குவோம்.
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ
55:32. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:33. மனித ஜின் கூட்டமே! வானங்கள்507 மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.304
يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ
55:34. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:35. (யுகமுடிவு நாளில்) உங்களுக்கு நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது உதவி பெற மாட்டீர்கள்.
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
55:36. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:37. வானம்507 பிளக்கும்போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ
55:38. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:39. அந்நாளில் எந்த மனிதனிடமும், ஜின்னிடமும் அவரது குற்றம் குறித்து விசாரிக்கத் தேவை இருக்காது.
فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ
55:40. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:41. குற்றவாளிகள் அவர்களின் அடையாளத்தால் அறியப்படுவார்கள். முன் நெற்றிகளும், பாதங்களும் பிடிக்கப்படும்.
يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ
55:42. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:43. குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகம் இதுவே.
هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ
55:44. அதற்கும், கொதிநீருக்குமிடையே அவர்கள் உழல்வார்கள்.
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ
55:45. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:46. தமது இறைவன் முன் நிற்பதை அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச் சோலைகள் உள்ளன.
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
55:47. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:48. அவை அடர்த்தியான கிளைகளைக் கொண்டவை.
ذَوَاتَآ أَفْنَانٍ
55:49. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:50. அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் பீறிட்டு ஓடும்.
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
55:51. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:52. ஒவ்வொரு கனியிலும் இரண்டு வகைகள் அவ்விரண்டிலும் உள்ளன.
فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ
55:53. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:54. அவர்கள் விரிப்புகளில் சாய்ந்திருப்பார்கள். அதன் உட்புறம் இஸ்தப்ரக் எனும் பட்டுவகையைச் சேர்ந்தது. அவ்விரு சொர்க்கச் சோலைகளின் கனிகள் தாழ்ந்திருக்கும்.
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ
55:55. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:56. அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள்.8 இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.
فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
55:57. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:58. அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.
كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ
55:59. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:60. நன்மைக்கு நன்மை தவிர வேறு கூலி உண்டா?
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ
55:61. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:62. அவ்விரண்டும் அல்லாத வேறு இரு சோலைகளும் உள்ளன.
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
55:63. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:64. (அவை) கரும்பச்சை நிறமுடையவை.
مُدْهَآمَّتَانِ
55:65. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:66. அவ்விரண்டிலும் பொங்கி வழியும் இரண்டு ஊற்றுகள் உள்ளன.
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
55:67. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:68. அவ்விரண்டிலும் கனியும், பேரீச்சையும், மாதுளையும் உள்ளன.
فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
55:69. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:70. அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.
فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ
55:71. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:72. கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர்8 எனும் கன்னியராவர்.
حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ
55:73. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:74. இவர்களுக்கு முன் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
55:75. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:76. பச்சை நிறத்து இரத்தினக் கம்பளத்தின் மீதும், அழகிய சாய்மானத்தின் மீதும் சாய்ந்து கொண்டிருப்பார்கள்.
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ
55:77. உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:78. கண்ணியமும், மகத்துவமும் மிக்க உமது இறைவனின் பெயர் பாக்கியம் மிக்கது.
تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ