அத்தியாயம் : 70 அல் மஆரிஜ்
மொத்த வசனங்கள் : 44
அல் மஆரிஜ் – தகுதிகள்
இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
70:1.
سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ
70:2.
لِّلْكَـٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ
70:3. தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏகஇறைவனை) மறுப்போருக்கு நிகழவுள்ள வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவர் யாருமில்லை.26
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ
70:4. வானவர்களும், ரூஹும்444 ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு நிகரான ஒரு நாளில் அவனிடம் ஏறிச் செல்வர்.293
تَعْرُجُ ٱلْمَلَـٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
70:5. எனவே அழகிய பொறுமையைக் கடைப்பிடிப்பீராக!
فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا
70:6. அவர்கள் அதைத் தொலைவாகக் காண்கின்றனர்.
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا
70:7. நாமோ அருகில் உள்ளதாகக் காண்கிறோம்.
وَنَرَىٰهُ قَرِيبًا
70:8. அந்நாளில் வானம்507 உருக்கிய செம்பு போல் ஆகும்.
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ
70:9. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ
70:10. எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான்.
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا
70:11.
يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ
70:12.
وَصَـٰحِبَتِهِۦ وَأَخِيهِ
70:13.
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ
70:14. அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின்1 வேதனைக்கு ஈடாகத் தனது சந்ததிகளையும், மனைவியையும், சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான்.26
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
70:15. அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும்.
كَلَّآ ۖ إِنَّهَا لَظَىٰ
70:16. அது தோலை உரிக்கும்.
نَزَّاعَةً لِّلشَّوَىٰ
70:17.
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
70:18. பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும்.26
وَجَمَعَ فَأَوْعَىٰٓ
70:19. மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்.368
۞ إِنَّ ٱلْإِنسَـٰنَ خُلِقَ هَلُوعًا
70:20. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا
70:21. அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.
وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا
70:22. தொழுகையாளிகளைத் தவிர.
إِلَّا ٱلْمُصَلِّينَ
70:23. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள்.
ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ
70:24.
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ
70:25. யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் அறியப்பட்ட உரிமை இருக்கும்.26
لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
70:26. அவர்கள் தீர்ப்பு நாளை1 நம்புவார்கள்.
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ
70:27. அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.
وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ
70:28. அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ
70:29.
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَـٰفِظُونَ
70:30. தமது மனைவியர் அல்லது அடிமைப் பெண்கள்107 மீதே தவிர அவர்கள் தமது கற்புகளைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் இழிவுபடுத்தப்பட்டோர் அல்லர்.26
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
70:31. இதற்கு அப்பால் தேடுவோரே வரம்பு மீறியவர்கள்.
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ
70:32. அவர்கள் தமது அமானிதங்களையும், ஒப்பந்தத்தையும் பேணுவார்கள்.
وَٱلَّذِينَ هُمْ لِأَمَـٰنَـٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ
70:33. அவர்கள் தமது சாட்சியங்களை நிலைநிறுத்துவார்கள்.
وَٱلَّذِينَ هُم بِشَهَـٰدَٰتِهِمْ قَآئِمُونَ
70:34. அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள்.
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
70:35. அவர்களே சொர்க்கச் சோலைகளில் மரியாதை செய்யப்படுபவர்கள்.
أُو۟لَـٰٓئِكَ فِى جَنَّـٰتٍ مُّكْرَمُونَ
70:36.
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ
70:37. (முஹம்மதே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக அவர்கள் உமக்கு முன்னே சுற்றி வருகின்றனர்.26
عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
70:38. அவர்களில் ஒவ்வொரு மனிதனும் இன்பமான சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவதை விரும்புகிறானா?
أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ
70:39. அது நடக்காது. அவர்களுக்குத் தெரிந்த(மூலத்)திலிருந்து அவர்களை நாம் படைத்தோம்.
كَلَّآ ۖ إِنَّا خَلَقْنَـٰهُم مِّمَّا يَعْلَمُونَ
70:40.
فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ
70:41. கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய335 இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.379 அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.26
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
70:42. அவர்களுக்கு எச்சரிக்கப்பட்ட நாளை1 அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீணிலும், விளையாட்டிலும் மூழ்கிக் கிடக்க விட்டுவிடுவீராக!
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَـٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ
70:43. பலி பீடங்களை135 நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் அவர்கள் மண்ணறைகளில் இருந்து வேகமாக வெளியேறுவார்கள்.238
يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ
70:44. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். இதுவே அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாள்1.
خَـٰشِعَةً أَبْصَـٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ