அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத்
மொத்த வசனங்கள் : 50
அல்முர்ஸலாத் – அனுப்பப்படும் காற்று!
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
77:1.
وَٱلْمُرْسَلَـٰتِ عُرْفًا
77:3.
وَٱلنَّـٰشِرَٰتِ نَشْرًا
77:5.
فَٱلْمُلْقِيَـٰتِ ذِكْرًا
77:7. உங்களுக்கு எச்சரிக்கப்படுவது நடந்தேறும்.
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ
77:8. நட்சத்திரங்கள் ஒளியிழக்கும்போது,
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ
77:9. வானம்507 பிளக்கப்படும்போது,
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ
77:10. மலைகள் சிதறடிக்கப்படும்போது,
وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ
77:11. தூதர்களுக்கு நேரம் குறிக்கப்படும்போது (அது நடந்தேறும்)
وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ
77:12. (இவை) எந்த நாளுக்காகத் தாமதப்படுத்தப்பட்டுள்ளது?
لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ
77:13. தீர்ப்பு நாளுக்காகவே!
لِيَوْمِ ٱلْفَصْلِ
77:14. தீர்ப்பு நாள்1 என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ
77:15. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:16. முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?
أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ
77:17. பின்னோரை அவர்களைத் தொடர்ந்து வரச் செய்யவில்லையா?
ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ
77:18. இவ்வாறே குற்றவாளிகளை நடத்துவோம்.
كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ
77:19. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:20. உங்களை அற்பமான நீரிலிருந்து நாம் படைக்கவில்லையா?
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ
77:21.
فَجَعَلْنَـٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ
77:23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயம் செய்வோரில் நாமே சிறந்தவர்கள்.
فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ
77:24. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:25.
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا
77:26. உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்வதாக பூமியை ஆக்கவில்லையா?26
أَحْيَآءً وَأَمْوَٰتًا
77:27. அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம்.248 இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.
وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَـٰمِخَـٰتٍ وَأَسْقَيْنَـٰكُم مَّآءً فُرَاتًا
77:28. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:29.
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
77:30. நீங்கள் எதைப் பொய்யெனக் கருதினீர்களோ அதை நோக்கி மூன்று கிளைகளைக் கொண்ட நிழலை நோக்கி நடங்கள்!26
ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَـٰثِ شُعَبٍ
77:31. அது நிழல் தருவது அல்ல. அது தீயிலிருந்து பாதுகாக்காது.
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ
77:32. அது மாளிகையைப் போன்ற நெருப்புப் பந்தங்களை வீசியெறியும்.
إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ
77:33. அது நிறத்தில் மஞ்சள் நிற ஒட்டகங்கள் போல் இருக்கும்.
كَأَنَّهُۥ جِمَـٰلَتٌ صُفْرٌ
77:34. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:35. இது அவர்கள் பேச முடியாத நாள்!1
هَـٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ
77:36. சமாதானம் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்படாது.
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ
77:37. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:38. இதுவே நியாயத் தீர்ப்பு நாள்!1 உங்களையும், முன்னோரையும் ஒன்று திரட்டினோம்.
هَـٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ۖ جَمَعْنَـٰكُمْ وَٱلْأَوَّلِينَ
77:39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ
77:40. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:41. (இறைவனை) அஞ்சியோர் நிழல்களிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள்.
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ
77:42. அவர்கள் விரும்புகிற கனிகளுடனும் இருப்பார்கள்.
وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ
77:43. “நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்!” (எனக் கூறப்படும்.)
كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ
77:44. இவ்வாறே நன்மை செய்தோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
77:45. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:46. சிறிது காலம் உண்ணுங்கள்! அனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகள்.
كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ
77:47. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:48. ருகூவு செய்யுங்கள்! என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.
وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ
77:49. பொய்யெனக் கருதியோருக்கு அந்நாளில் கேடு தான்.
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
77:50. இதன் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்புவார்கள்?
فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ