அத்தியாயம் : 88 அல்காஷியா
மொத்த வசனங்கள் : 26
அல்காஷியா – சுற்றி வளைப்பது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
88:1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ
88:2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ
88:3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.
عَامِلَةٌ نَّاصِبَةٌ
88:4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை எரியும்.
تَصْلَىٰ نَارًا حَامِيَةً
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
88:6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
88:7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ
88:8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
88:9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.
لِّسَعْيِهَا رَاضِيَةٌ
88:10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
فِى جَنَّةٍ عَالِيَةٍ
88:11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً
88:12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
88:13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.
فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
88:14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.
وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
88:15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.
وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
88:16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ
88:17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?399
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
88:18. வானம்507 எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
88:19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
88:20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
88:21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.81
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ
88:22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.81
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
88:23.
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
88:24. எனினும், புறக்கணித்து (ஏகஇறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.26
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ
88:25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ
88:26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم