அத்தியாயம் : 87 அல்அஃலா
மொத்த வசனங்கள் : 19
அல்அஃலா – மிக உயர்ந்தவன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
87:1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى
87:2. அவனே படைத்தான்.368 ஒழுங்குற அமைத்தான்.
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ
87:3. அவனே நிர்ணயித்தான். வழிகாட்டினான்.
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ
87:4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ
87:5. எனவே அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ
87:6.
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ
87:7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ
87:8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ
87:9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ
87:10. (இறைவனை) அஞ்சுபவர் படிப்பினை பெறுவார்.
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ
87:11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى
87:12. அவனே பெரும் நெருப்பில் எரிவான்.
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ
87:13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ
87:14. தூய்மையாக வாழ்பவர் வெற்றி பெற்றார்.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
87:15. அவர், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதார்.
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ
87:16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
87:17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ
87:18.
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ
87:19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ