Quran Tamil Translation
தமிழ் மொழிபெயர்ப்பு

அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ்
மொத்த வசனங்கள் : 15
அஷ்ஷம்ஸ் – சூரியன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

91:1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!379
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا

91:2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!379
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا

91:3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!379
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

91:4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا

91:5. வானத்தின்507 மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!379
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

91:6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!379
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا

91:7. உள்ளத்தின் மீதும், அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!379
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا

91:8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا

91:9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا

91:10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا

91:11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்.
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ

91:12. அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்.
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا

91:13. “இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!” என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) கூறினார்.
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَـٰهَا

91:14. அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களின் இறைவன் அவர்களைத் தரைமட்டமாக்கினான்.
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا

91:15. அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.
وَلَا يَخَافُ عُقْبَـٰهَا