அத்தியாயம் : 94 அஷ்ஷரஹ்
மொத்த வசனங்கள் : 8
அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
94:1. உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
94:2.
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ
94:3. (முஹம்மதே!) உமது முதுகை முறித்துக் கொண்டிருந்த உமது சுமையை உம்மை விட்டும் நாம் இறக்கவில்லையா?26
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ
94:4. உமக்காக உமது புகழை உயர்த்தினோம்.
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
94:5. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
94:6. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا
94:7. எனவே ஓய்வெடுத்ததும் தயாராவீராக!
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ
94:8. உமது இறைவனிடம் ஆசை வைப்பீராக!
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب