அத்தியாயம் : 99 அஸ்ஸில்ஸால்
மொத்த வசனங்கள் : 8
அஸ்ஸில்ஸால் – நில அதிர்ச்சி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
99:1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும்போது,
إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا
99:2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا
99:3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது,
وَقَالَ ٱلْإِنسَـٰنُ مَا لَهَا
99:4.
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
99:5. அந்நாளில்1 தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.26
بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا
99:6. அந்நாளில்1 மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.
يَوْمَئِذٍ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا۟ أَعْمَـٰلَهُمْ
99:7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُۥ
99:8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُۥ