இமாமை முந்தினால் என்ன தண்டனை?

தொழுகையில் இமாமை முந்தினால் அவரது தலை கழுதையின் தலையாக மாறிவிடும் என்று ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மையா?

சாம் ஃபாரூக்

பதில் :

தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு முன் ருகூவு சுஜூது போன்ற காரியங்களை முந்திக்கொண்டு செய்தால் அல்லாஹ் மறுமையில் அவருடைய உருவத்தைக் கழுதையின் உருவமாக ஆக்கி விடுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

691حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَمَا يَخْشَى أَحَدُكُمْ أَوْ لَا يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الْإِمَامِ أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர் (தொழுகையில்) இமாமை முந்திக்கொண்டு தம் தலையை உயர்த்துவதால் அவருடைய தலையைக் கழுதையுடைய தலையாக அல்லாஹ் ஆக்கிவிடுவதை அல்லது அவருடைய உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 691