செலவைக் கழித்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத கொடுக்கலாமா?
حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ قَالَ أَبُو عَبْد اللَّهِ هَذَا تَفْسِيرُ الْأَوَّلِ لِأَنَّهُ لَمْ يُوَقِّتْ فِي الْأَوَّلِ يَعْنِي حَدِيثَ ابْنِ عُمَرَ وَفِيمَا سَقَتْ السَّمَاءُ الْعُشْرُ وَبَيَّنَ فِي هَذَا وَوَقَّتَ وَالزِّيَادَةُ مَقْبُولَةٌ وَالْمُفَسَّرُ يَقْضِي عَلَى الْمُبْهَمِ إِذَا رَوَاهُ أَهْلُ الثَّبَتِ كَمَا رَوَى الْفَضْلُ بْنُ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُصَلِّ فِي الْكَعْبَةِ وَقَالَ بِلَالٌ قَدْ صَلَّى فَأُخِذَ بِقَوْلِ بِلَالٍ وَتُرِكَ قَوْلُ الْفَضْلِ
‘மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஜகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1483
இந்த ஹதீஸில் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு, அல்லது இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகக் கூறப்படுகின்றது.
விளைச்சலுக்கான செலவைக் கழித்துக் கொண்டு மீதமுள்ள லாபத்தில் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விளக்கியிருப்பார்கள். அவ்வாறு குறிப்பிட்டுக் கூறாததிலிருந்து மொத்த விளைச்சலில் தான் ஜகாத்தைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதை அறிய முடியும்.
இதற்குப் பின்வரும் வசனமும் சான்றாக அமைந்துள்ளது.
படரவிடப்பட்ட, மற்றும் படரவிடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141
விளை பொருட்களை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய ஜகாத்தை வழங்கி விடுங்கள் என்று இந்த வசனம் கூறுகின்றது. அறுவடை செய்யும் போது, எவ்வளவு தானியங்கள் இருக்கின்றனவோ அதில், அதாவது மொத்த விளைச்சலில் தான் ஜகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதை இந்த வசனத்திலிருந்து விளங்கலாம்.
இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இதற்காக செலவு செய்ய வேண்டி இருந்தது. இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறியலாம்.
2898و حَدَّثَنَا ابْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ دَفَعَ إِلَى يَهُودِ خَيْبَرَ نَخْلَ خَيْبَرَ وَأَرْضَهَا عَلَى أَنْ يَعْتَمِلُوهَا مِنْ أَمْوَالِهِمْ وَلِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَطْرُ ثَمَرِهَا رواه مسلم
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் “அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொதுநிதியத்துக்காக) வழங்க வேண்டும்” எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்சை மரங்களையும், நிலங்களையும் ஒப்படைத்தார்கள். நூல் : முஸ்லிம்
நமது காலத்தில் விவசாயத்துக்குச் செலவிடுவதுபோல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும் விவசாயத்துக்காகச் செலவிடப்பட்டுள்ளது. நபியவர்கள் இந்தச் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கச் சொன்னதாகவோ, இவ்வாறு செய்ய பிறருக்கு அனுமதியளித்ததாகவோ எந்தச் செய்தியும் இல்லை.
ஜகாத்தை மொத்த விளைச்சலிலிருந்து கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்று பொதுவாகவே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
1483حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ قَالَ أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيمَا سَقَتْ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ وَمَا سُقِيَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மழை நீராலோ, ஊற்று நீராலோ அல்லது தானாகப் பாயும் தண்ணீராலோ விளைபவற்றில் பத்தில் ஒரு பங்கு ஸகாத் உண்டு. ஏற்றம், கமலை கொண்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டால் இருபதில் ஒரு பங்கு ஜகாத் கொடுக்க வேண்டும். நூல் புகாரி 1483
நபியவர்கள் காலத்திலும் விவசாயத்துக்கு செலவினங்கள் இருந்தன. அன்று செலவினங்கள் குறைவாக இருந்தது. இன்றைய காலத்தில் செலவினங்கள் அதிகரித்துள்ளது என்பதுதான் வித்தியாசம். செலவைக் கழித்து விட்டு ஜகாத் கொடுங்கள் என்று நபியவர்கள் சொல்ல்வில்லை.
இன்றைக்குச் செலவினங்கள் அதிகரிப்பதுடன் பயிர்களின் விளைச்சலும் அதிகரிக்கின்றன. மேலும் பயிர்கள் குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. விளைச்சலை அதிகரிப்பதற்கு இன்றைக்குக் கையாளப்படும் நவீன யுக்திகள் நபியவர்கள் காலத்தில் இல்லை.
எனவே இன்றைக்கு ஆகும் செலவை மட்டும் கவனத்தில் கொள்ளாமல் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்து கவனித்தால் செலவை மொத்த விளைச்சலில் கழிக்கக் கூடாது என்ற கருத்தே சரியானது என்பதை அறியலாம்.
மேலும் விளைச்சல் குறிப்பிட்ட அளவு இருந்தால் தான் அவற்றில் ஜகாத் கடமையாகும் என மார்க்கம் கூறுகின்றது. மார்க்கம் நிர்ணயித்துள்ள இந்த அளவை விடக் குறைவாக விளைச்சல் இருந்தால் அதில் ஜகாத் இல்லை.
1405حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :
“ஐந்து ஊக்கியாவுக்குக் குறைந்த அளவு (வெள்ளியில்) ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஜகாத் இல்லை. ஐந்து வஸக்குக்குக் குறைவான (ஒரு வஸக் = 60 ஸாஉ) தானியத்தில் ஜகாத் இல்லை. அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி) நூல் : புகாரி 1405
ஒருவர் தனது செல்வத்தை விவசாயத்தில் செலவு செய்யாமல் அப்படியே வைத்திருந்தால் அப்போதும் அவர் அந்தச் செல்வத்துக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் (செல்வம் நிஸாபுடைய அளவை எட்டியிருந்தால்).
தனது செல்வத்தைப் பயிர்களுக்காகச் செலவிட்டால் அவருடைய பணம் விவசாயப் பொருளாக மாறுகின்றது. இப்போது இவர் விளைச்சலுக்குரிய சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
எனவே விளைச்சலில் விவசாயத்துக்காக செலவிட்ட தொகையைக் கழிக்காமல் மொத்தத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பதே சரியானது.
உதாரணமாக இருபது மூட்டை நெல் அறுவடை செய்துள்ளோம் என்றால் நஞ்சையாக இருந்தால் அதில் இரண்டு மூட்டை அளவும், புஞ்சையாக இருந்தால் ஒரு மூட்டை அளவும் ஜகாத்தாக வழங்க வேண்டும்.