ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு ஆதாரங்கள் என்ன?
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா?
ரஃபாஸ்
பதில்:
ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா என்பதற்காக ஆதாரங்களையும் அது குறித்த விளக்கத்தையும் அரபு மொழி பேசுவோரிடம் காட்டுவதற்காகவும், நீங்களும் புரிந்து கொள்வதற்காகவும் அரபு மொழியிலும் தமிழிலுமாக அதனைக் கீழே தந்துள்ளோம்.
ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
ஹதீஸ்களை மறுக்கும் நோக்கத்தில் நாங்கள் இவ்வாறு கூறவில்லை. இந்த விஷயத்தில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம்.
இது சம்பந்தமாக வரும் எல்லா ஹதீஸ்களுமே பலவீனமாக அமைந்திருப்பதை நாங்கள் கண்டோம். பல உலமாக்களிடத்திலே நாங்கள் விளக்கம் கேட்டோம். அவர்களால் அதற்கு எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.
இப்படி எட்டு ஆண்டுகள் இந்தக் கருத்தை நாங்கள் விவாதித்து, இந்தக் கருத்தில் வருகின்ற எல்லா ஹதீஸ்களுமே பலவீனமானவை தான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொண்ட பிறகு தான் “குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸிலும் இல்லாத ஒரு விஷயத்தை யார் சட்டமாக்கினாலும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்று சொன்னோம்
இது பற்றி ஆதாரப்பூர்வமான ஹதீஸை யாரேனும் எடுத்துக் காட்டினாலோ, அல்லது இது பற்றிய ஹதீஸ்கள் குறித்து நாங்கள் எழுப்பிய ஆட்சேபணைகளுக்குத் தக்க விளக்கம் தந்தாலோ அடுத்த வினாடியே எங்கள் நிலையை மாற்றிக் கொள்ள நாங்கள் தயங்க மாட்டோம்.
முதல் ஹதீஸ்
அனாதைகள் சொத்துக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வெண்டும் என்ற ஹதீஸின் நிலை
இது குறித்து பல நூல்களில் பல அறிவிப்பாளர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமாக உள்ளன.
யாரேனும் அனாதைகளின் சொத்துக்குப் பொறுப்பேற்றுக் கொண்டால் அதன் மூலம் வியாபாரம் செய்யட்டும். ஜகாத் கொடுத்து அந்தச் சொத்து அழியும் நிலை ஏற்பட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் திர்மிதி, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن الترمذي
641 حدثنا محمد بن إسماعيل حدثنا إبراهيم بن موسى حدثنا الوليد بن مسلم عن المثنى بن الصباح عن عمرو بن شعيب عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم خطب الناس فقال ألا من ولى يتيما له مال فليتجر فيه ولا يتركه حتى تأكله الصدقة قال أبو عيسى وإنما روي هذا الحديث من هذا الوجه وفي إسناده مقال لأن المثنى بن الصباح يضعف هذا الحديث وروى بعضهم هذا الحديث عن عمرو بن شعيب أن عمر بن الخطاب فذكر هذا الحديث –
سنن الدارقطني
1 حدثنا علي بن محمد المصري ثنا الحسن بن غليب الهذلي الأزدي ثنا سعيد بن عفير ثنا يحيى بن أيوب عن المثنى بن الصباح عن عمرو بن شعيب عن أبيه عن جده عبد الله بن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قام فخطب الناس فقال من ولي يتيما له مال فليتجر له ولا يتركه حتى تأكله الصدقة
இந்த இரு ஹதீஸ்களும் அல் முஸன்னா பின் அஸ்ஸபாஹ் என்ற அறிவிப்பாளர் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவர் பலவீனமானவர் என்று திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸினடியில் தெளிவாக்கி உள்ளார்.
وفي إسناده مقال لأن المثنى بن الصباح يضعف هذا الحديث
இதன் அறிவிப்பாளர் தொடரில் பிரச்சனை உள்ளது. இதன் அறிவிப்பாளரான முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் ஆவார். – திர்மிதீ
முஸன்னா பின் ஸப்பாஹ் குறித்த அறிஞர்களின் விமர்சனம்
الكلام في المثنى بن الصباح
قال عمرو بن علي كان يحيى وعبد الرحمن لا يحدثان عنه وقال بن المديني سمعت يحيى بن سعيد وذكر عنده مثنى بن الصباح فقال لم نتركه من أجل عمرو بن شعيب ولكن كان منه اختلاط في عطاء وقال عبد الله بن أحمد عن أبيه لا يساوي حديثه شيئا مضطرب الحديث قال إسحاق بن منصور عن بن معين ضعيف وكذا قال معاوية بن صالح عن بن معين وزاد يكتب حديثه ولا يترك وقال عباس الدوري عن بن معين مثنى بن الصباح مكي ويعلي بن مسلم مكي والحسن بن مسلم مكي وجميعا ثقة وقال بن أبي حاتم سألت أبي أبا زرعة عنه فقالا لين الحديث قال أبي يروي عن عطاء ما لم يرو عنه أحد وهو ضعيف الحديث وقال الجوزجاني لا يقنع بحديثه وقال الترمذي يضعف في الحديث وقال النسائي ليس بثقة وقال في موضع آخر متروك الحديث وقال بن عدي له حديث صالح عن عمرو بن شعيب وقد ضعفه الأئمة المتقدمون والضعف على حديثه بين وقال بن سعد عن الأزرقي عن داود العطار لم أدرك في هذا المسجد أحدا أعبد من المثنى بن الصباح والزنجي بن خالد قال بن سعد وله أحاديث وهو ضعيف وقال علي بن الجنيد متروك الحديث وقال الدارقطني ضعيف وقال البخاري عن يحيى بن بكير مات سنة تسع وأربعين ومائة قلت وفيها أرخه الواقدي وقال بن حبان في الضعفاء مات في آخر سنة تسع وأربعين ومائة وكان ممن اختلط في آخر عمره وقال عبد الرزاق أدركته شيخا كبيرا بين اثنين يطوف الليل أجمع وقال بن عمار ضعيف وقال الساجي ضعيف الحديث جدا حدث بمناكير ويطول ذكرها وكان عابدا يهم وقال أبو أحمد الحاكم ليس بالقوي عندهم وضعفه أيضا سحنون الفقيه وغيره وذكره العقيلي في الضعفاء وأورد عن علي بن المديني سمعت يحيى القطان وذكر عنده المثنى فقال لم تتركه من أجل حديث عمرو بن شعيب ولكن كان اختلاط منه
– تهذيب التهذيب
யஹ்யா அல்கத்தான், அப்துர்ரஹ்மான், அஹ்மத் பின் ஹம்பல், அபூ ஸுர்ஆ, ஜவ்ஸஜானி, நஸாயீ, தார குத்னீ, அலீ பின் அல்ஜுனைத், இப்னு ஹிப்பான், இப்னு அம்மார், ஸாஜீ, ஹாகிம், ஸஹ்னூன், உகைலீ உள்ளிட்ட ஹதீஸ்கலை இமாம்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்
எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது.
இரண்டாவது ஹதீஸ்
மேற்கண்ட ஹதீஸ் இன்னொரு அறிவிப்பாளர் வழியாக தாரகுத்னீ, தப்ரானியின் அவ்ஸத் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஹதீஸ் இதுதான்.
سنن الدارقطني
2 حدثنا أبو محمد بن صاعد ثنا أحمد بن عبيد بن إسحاق العطار بالكوفة ثنا أبي ثنا مندل عن أبي إسحاق الشيباني عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم احفظوا اليتامى في أموالهم لا تأكلها الزكاة
المعجم الأوسط
998 حدثنا أحمد قال حدثنا عبد العزيز قال حدثنا مندل بن علي عن سليمان عن عمرو بن شعيب عن أبيه عن جده عن النبي قال ابتغوا اليتامى في أموالهم لا تأكلها الزكاة
இவ்விரு ஹதீஸ்களையும் மின்தல் பின் அலீ என்பார் அறிவிக்கிறார். இவரும் பலவீனமானவராவார்.
மின்தல் குறித்த விமர்சனங்கள்
الكلام في مندل بن علي
وقال عبد الله بن أحمد عن أبيه ضعيف الحديث فقلت فحبان اخوه قال هو أصلح منه يعني مندلا أصلح من حبان وقال مرة ما أقربهما وقال أحمد بن أبي مريم عن بن معين ليس به بأس يكتب حديثه قال بن أبي خيثمة عن بن معين ليس بشيء وقال عثمان الدارمي عن بن معين لا بأس به وقال الدوري عن بن معين حبان ومندل ضعيفان وهما أحب إلي من قيس بن الربيع وقال معاذ بن معاذ العنبري دخلت الكوفة فلم أر أحدا أورع من مندل وقال يعقوب بن شيبه كان أشهر من أخيه حبان وهو أصغر سنا منه وأصحابنا يحيى بن معين وعلي بن المديني وغيرهما من نظرائهم يضعفونه في الحديث وكان خيرا فاضلا صدوقا وهو ضعيف الحديث وهو أقوى من أخيه في الحديث وقال العجلي جائز الحديث وكان يتشيع قال بن أبي حاتم سمعت أبي يقول سألت يحيى بن معين عن مندل وحبان قال ما بهما بأس قال أبي كذلك أقول وكان البخاري ادخل مندلا في الضعفاء فقال أبي يحول وسئل أبو زرعة عن مندل فقال لين الحديث وسئل أبي عن مندل فقال شيخ وقال علي بن الحسين بن الجنيد عن محمد بن عبد الله بن نمير في أحاديثهما بعض الغلط وقال النسائي ضعيف وقال بن عدي له غرائب وأفراد وهو ممكن يكتب حديثه قال بن أبي خيثمة عن بن معين ولد سنة ثلاث ومائة ومات سنة سبع وستين ومائة وقال يعقوب بن شيبه مات سنة سبع أو ثمان وقال بن سعد نحوه وقال أبو حسان الزيادي مات في رمضان سنة ثمان قلت ذكره بن سعد في الطبقة السادسة وقال كان أذكر وأثبت من أخيه حبان وكان أصغر منه ومات بالكوفة سنة سبع أو ثمان وستين قبل أخيه وفيه ضعف ومنهم من يشتهي حديثه ويوثقه وكان خيرا فاضلا وقال علي بن الحسين بن الجنيد سئل بن معين عنه فقال ليس بذاك القوي قيل وابن فضيل مثله قال لو كان بن فضيل مثله لهلك وقال الجوزجاني واهي الحديث وقال الحاكم أبو أحمد ليس بالقوي عندهم وقال الساجي ليس بثقة روى مناكير وقال لي بن مثنى كان عبد الرحمن بن مهدي لا يحدث عنه وقال بن قانع والدار قطني ضعيف وقال بن مثنى كان عبد الرحمن بن مهدي لا يحدث عنه وقال بن قانع والدار قطني ضعيف وقال بن حبان كان ممن يرفع المراسيل ويسند الموقوفات من سوء حفظه فاستحق الترك وقال الطحاوي ليس من أهل التثبت في الرواية بشيء ولا يحتج به
– تهذيب التهذيب
அஹ்மத் பின் ஹம்பல். யஹ்யா பின் மயீன், அலீ பின் அல்மதீனி, புகாரி, அபூ ஸுர் ஆ, முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் நுமைரி, நஸாயீ, இப்னு அதீ, ஜவ்ஸஜனி, ஹாகிம், ஸாஜீ, அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இப்னு கானிவு, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், தஹாவீ உள்ளிட்ட ஹதீஸ்கலை அறிஞர்கள் இவரைப் பலவீனமான அறிவிப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பார்க்க : தஹ்தீபுத் தஹ்தீப்
மூன்றாவது ஹதீஸ்
முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஸ்ரமீ அறிவிப்பது
3- الرواية الثالثة حديث محمد بن عبيد الله العزرمي
இந்த ஹதீஸ் தாரகுத்னியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن الدارقطني
3 حدثنا محمد بن الحسن بن علي البزاز ثنا الحسين بن عبد الله بن يزيد القطان ثنا أيوب بن محمد الوزان ثنا رواد بن الجراح ثنا محمد بن عبيد الله عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم في مال اليتيم زكاة
முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஸ்ரமீ குறித்த விமர்சனம்
الكلام في محمد بن عبيد الله العزرمي
محمد بن عبيد الله العرزمي كنيته أبو عبد الرحمن وهو بن أخي عبد الملك بن أبي سليمان واسم أبي سليمان ميسرة وهو الذي يروي عنه شريك ويقول حدثني محمد بن سليمان العرزمي ينسبه إلى جده حتى لا يعرف يروي عن عطاء وعمرو بن شعيب روى عنه العراقيون مات سنة خمس وخمسين ومائة وهو بن ثمان وسبعين سنة وكان صدوقا إلا أن كتبه ذهبت وكان رديء الحفظ فجعل يحدث من حفظه ويهم فكثر المناكير في روايته تركه بن المبارك ويحيى القطان وابن مهدي ويحيى بن معين
– المجروحين
இவர் உண்மையாளராக இருந்தார். இவரது நூல்கள் அழிந்து விட்டதால் நினைவாற்றலில் இருந்து அறிவிக்கலானார். ஆனால் இவர் நினைவாற்றலில் மோசமானவர். இவரது ஹதீஸ்களில் நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் அதிகமாயின. இப்னுல் முபாரக், யஹ்யல் கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் உள்ளிட்ட அறிஞர்கள் இவரை விட்டுவிட்டனர்.
ஆதாரம் : அல் மஜ்ரூஹீன்
எனவே இந்த ஹதீஸும் ஆதாரமாகக் கொள்ளப்படாது.
நான்காவது ஹதீஸ்
அல் ஃபுராத் பின் முஹம்மத் அறிவிக்கும் ஹதீஸ்
4 – الرواية الرابعة حديث الفرات بن محمد القيرواني
இவர் அறிவிக்கும் ஹதீஸ் தப்ரானியின் அல் அவ்ஸத் எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
المعجم الأوسط
4152 حدثنا علي قال نا الفرات بن محمد القيرواني قال نا شجرة بن عيسى المعافري عن عبد الملك بن ابي كريمة عن عمارة بن غزية عن يحيى بن سعيد عن انس بن مالك قال قال رسول الله ص اتجروا في اموال اليتامى لا تأكلها الزكاة
ஃபுராத் பின் முஹம்மத் பற்றிய விமர்சனங்கள்
الكلام في فرات بن محمد
فرات بن محمد بن فرات العبدي القيرواني سمع من أبي زكريا الحضرمي وابن رشيد وغيرهما بإفريقية ومن أبي بكير واصبغ ونعيم بن حماد وغيرهم بمصر قال أبو العرب سمعت منه كثيرا وقال بن حارث كان يغلب عليه الرواية والجمع ومعرفة الاخبار وكان ضعيفا متهما بالكذب أو معروفا به مات سنة اثنتين وتسعين ومائتين
– لسان الميزان
இவர் பலவீனமானவராகவும், பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவராகவும் இருந்தவர்.
எனவே இந்த ஹதீஸையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஐந்தாவது ஹதீஸ்
நபித்தோழர் விடுபட்ட ஹதீஸ்
5 الرواية الخامسة حديث مرسل
سنن البيهقي الكبرى
أخبرنا أبو زكريا بن أبي إسحاق المزكي في آخرين قالوا ثنا أبو العباس محمد بن يعقوب أنبأ الربيع بن سليمان أنبأ الشافعي أنبأ عبد المجيد عن بن جريج عن يوسف بن ماهك أن رسول الله قال ابتغوا في مال اليتيم أو في أموال اليتامى لا تذهبها أو لا تستهلكها الصدقة وهذا مرسل إلا أن الشافعي رحمه الله أكده بالاستدلال بالخبر الأول وبما روي عن الصحابة رضي الله عنهم في ذلك وقد روي عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا
இந்த ஹதீஸ் பைஹகீ அவர்களின் சுனன் அல்குப்ராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை யூசுஃப் பின் மாஹிக் என்பார் அறிவிக்கிறார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர். இதை பைஹகி அவர்களே இந்த ஹதீஸின் கீழே கூறியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் முதல் அறிவிப்பாளர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழராக இருப்பது அவசியம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத ஒருவர் நபிகள் குறித்த செய்தியை அறிவித்தால் அது பலவீனமாகும்.
இது தவிர உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ, பைஹகீ, முஸ்னத் ஷாஃபி, முஅத்தா, முஸன்னப் அப்துர்ரஸாக் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபித்தோழர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வஹீ வராது என்பதால் அவர்களின் சொந்தக் கூற்றை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.
(நபித்தோழர்கள் இந்த உம்மத்திலேயே சிறந்தவர்கள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களைப் பின்பற்றுவது அவசியம் இல்லை என்பதற்கான காரணங்களை அடுத்த தலைப்பில் விளக்கியுள்ளோம்)
இது தவிர ஒரு வாதத்துக்காக மேற்கண்ட அனைத்து ஹதீஸ்களும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானவை என்று வைத்துக் கொண்டாலும் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதற்கு அவை ஆதாரமாக ஆகாது.
கருத்து அடிப்படையிலும் தவறானது
எப்படி என்று விபரமாகப் பார்ப்போம்.
ஜகாத் கொடுத்தால் அனாதையின் சொத்து கரைந்து விடும் என்று மட்டும் தான் மேற்கண்ட பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வருடா வருடம் என்று கூறப்படவில்லை. வருடா வருடம் என்பது மூலத்தில் இல்லாததாகும்.
ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தால் அனாதைகளின் சொத்து கரையும் என்றால் வருடா வருடம் கொடுப்பதை விட மாதந்தோறும் கொடுத்தால் இன்னும் சீக்கிரமாகக் கரைந்து விடும். எனவே மாதாமாதம் ஜகாத் கொடுத்தால் அனாதை சொத்து கரைந்து விடும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஒருவர் வாதிட்டால் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இவர்களிடம் இருக்காது.
வாரா வாரம் ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது. சொத்தைக் கரைத்து விடும் என்ற கருத்து வாரா வாரம் கொடுத்தால் தான் பொருந்தும் என்று மற்றொருவர் வாதிடலாம்.
வேறொருவர் தினமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டலாம்.
தினசரி தொழுகை போல் தினசரி ஐந்து வேளை ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றும் சிலர் கூறலாம். இவையெல்லாம் எப்படி ஹதீஸில் இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளதோ அது போல் தான் வருடா வருடம் என்பதும் மேற்கண்ட ஹதீஸில் திணிக்கப்பட்டதாகும்.
இதை ஒரு வாதத்துக்காகவும், மேலதிக விளக்கத்திற்காகவும் தான் குறிப்பிடுகின்றோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பது தான் அடிப்படையான விஷயமாகும்.
இந்த ஹதீஸ்கள் அறிவிப்பாளர்களில் பலவீனம் என்பதுடன், வருடா வருடம் என்ற வார்த்தை அந்த ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி அது கூறும் கருத்தும் இஸ்லாமிய நெறிகளுக்கு உகந்ததாக இல்லை.
பருவ வயதை அடைவதற்கு முன்பு தான் ஒருவரை அனாதை என்று கூற முடியும். அனைவரும் ஒப்புக் கொண்ட இஸ்லாமியச் சட்டப்படி பருவ வயது வராதவர்களின் எந்த ஒப்பந்தமும் செல்லாது.
அனாதையின் சொத்தை வியாபாரத்தில் முடக்க வேண்டுமானால் அந்த அனாதையின் சம்மதம் அவசியம்.
அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.
திருக்குர்ஆன் 17:34
அந்த அனாதை சம்மதம் கொடுக்கும் வயதுடையவனாக இல்லாததால் அவனது சொத்தை வியாபாரத்தில் போடுவதற்கு பொறுப்பாளனுக்கு உரிமை இல்லை.
இந்தக் காரணத்தாலும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனப்படுகின்றது.
வியாபாரம் என்பது லாபமும், நட்டமும் ஏற்படும் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டதாகும்.
அனாதைச் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே, ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும்.
மேலும் இவர்களது வாதப்படி ஜகாத் கரைந்து கொண்டே வந்து ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் ஜகாத் கடமையாகாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தொகை மட்டுமாவது அனாதைக்காக மிஞ்சியிருக்கும். ஆனால் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் எதுவுமே மிஞ்சாத நிலை கூட ஏற்படலாம்.
மேலும் அனாதைச் சொத்தை மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.
உன் சொத்தை வியாபாரத்தில் போட்டேன். எல்லாம் நட்டமாகி விட்டது என்று சொத்தைப் பராமரித்தவர் அனாதை வளர்ந்து பெரியவனாகும் போது கூறும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்த மட்டார்கள் என்பதும் மேற்கண்ட ஹதீஸை இன்னும் பலவீனப்படுத்துகின்றது.
2. இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ்
الدليل الثاني حديث زكاة عامين
ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர்.
அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அப்பாஸ் இந்த வருட ஜகாத்தையும், வரும் ஆண்டின் ஜகாத்தையும் முன் கூட்டியே தந்து விட்டார்” எனக் கூறினார்கள்.
மேற்கண்ட கருத்தில் சில ஹதீஸ்கள் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை ஆதாரமாகக் கொண்டு, கொடுத்த பொருளுக்கே ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கியுள்ளனர் என்பது இவர்களின் வாதம்.
இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா என்பதையும், ஆதாரப்பூர்வமானவை என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்துக்கு இதில் இடம் உள்ளதா என்பதையும் விரிவாக நாம் ஆராய்வோம்.
மேற்கண்ட கருத்தில் அமைந்த எந்த அறிவிப்பும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாக இல்லை.
முதல் அறிவிப்பு
الرواية الاولى حديث الحسن بن عمارة
இந்த அறிவிப்பு தாரகுத்னீ, பஸ்ஸார், முஸ்னத் அபீயஃலா, ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.
سنن الدارقطني
6 حدثنا أحمد بن محمد بن سعيد ثنا محمد بن عبيد بن عتبة ثنا وليد بن حماد ثنا الحسن بن زياد عن الحسن بن عمارة عن الحكم عن موسى بن طلحة عن طلحة أن النبي قال يا عمر أما علمت أن عم الرجل صنو أبيه إنا كنا احتجنا إلى مال فتعجلنا من العباس صدقة ماله لسنتين اختلفوا عن الحكم في إسناده والصحيح عن الحسن بن مسلم مرسل
البحر الزخار ـ مسند البزار
849 – حدثنا حميد بن مسعدة ، قال : نا محمد بن حمران ، قال : نا الحسن البجلي ، أحسبه عن الحكم ، عن موسى بن طلحة ، عن أبيه ، أن رسول الله صلى الله عليه وسلم ، تعجل من العباس صدقة سنتين وهذا الحديث لا نعلم رواه إلا الحسن البجلي وهو الحسن بن عمارة ، والحسن ، فقد سكت أهل العلم عن حديثه
مسند أبي يعلى الموصلي
613 – حدثنا حميد بن مسعدة ، حدثنا يوسف بن خالد ، حدثنا الحسن بن عمارة ، عن الحكم بن عتيبة ، وحبيب بن أبي ثابت ، عن موسى بن طلحة ، عن أبيه ، أن رسول الله صلى الله عليه وسلم كان تعجل صدقة العباس بن عبد المطلب سنتين
இம்மூன்று அறிவிப்புகளும் அல் ஹஸன் பின் உமாரா என்பார் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இவரைக் குறித்து ஹதீஸ்கலை அறிஞர்களின் விமர்சனம் இதுதான்:
الكلام فى الحسن بن عمارة
الحسن بن عمارة أبو محمد مولى بجيلة كوفي مات سنة ثلاث وخمسين ومائة ثنا الحسن بن يوسف البندار ثنا أبو عيسى الترمذي ثنا احمد بن عبدة الآملي ثنا وهب بن زمعة عن عبد الله بن المبارك انه ترك حديث الحسن بن عمارة انا الساجي ثنا محمد بن المثنى قال ما سمعت يحيى وعبد الرحمن رويا عن الحسن بن عمارة شيئا قط ثنا بن حماد قال قال البخاري الحسن بن عمارة أبو محمد مولى بجيلة عن الحكم كان بن عيينة يضعفه قال البخاري وقال احمد بن سعيد سمعت النضر بن شميل عن شعبة قال أفادني الحسن بن عمارة عن الحكم قال احمد احسب سبعين حديثا فلم يكن لها أصل قال بن عدي وقال عبد الله بن محمد بن عبد العزيز أخبرني أبي عن عبد الله عن بن عيينة قال كنت إذا سمعت الحسن بن عمارة يروي عن الزهري جعلت إصبعي في أذاني قال بن عدي وحدثني عبد الله بن محمد بن عبد العزيز انا عبدان المروزي أخبرني أبي عن شعبة قال روى الحسن بن عمارة عن الحكم عن يحيى الجزار سمع أحاديث فلقيت الحكم فسألته عنها فقال ما حدثت بحديث منها ثنا الجنيدي ثنا البخاري قال يحيى بن بكير ومات الحسن بن عمارة سنة ثلاث وخمسين ومائة وهو أبو محمد مولى بجيلة حدثني عبد الله بن محمد قيل لابن عيينة أكان الحسن بن عمارة يحفظ قال كان له فضل وغيره احفظ منه وقال النضر عن شعبة أفادني الحسن بن عمارة عن الحكم قال احسب سبعين حديثا فلم يكن لها أصل ثنا محمد بن جعفر الشعيري ثنا محمد بن عبد الله المخرمي ثنا أبو داود الطيالسي قال قال شعبة الا تعجبون من جرير بن حازم هذا المجنون أتاني هو وحماد بن زيد فكلماني ان أكف عن ذكر الحسن بن عمارة انا أكف عن ذكره لا والله لا أكف عن ذكره انا والله سألت الحكم عن قتلى بدر هل غسلوا هل صلي عليهم قال ما غسلوا ولا صلي عليهم قال قلت ممن سمتعه قال بلغني عن الحسن وهذا الحسن بن عمارة يحدث عن الحكم عن مجاهد عن بن عباس ان النبي غسلهم وصلى عليهم
– الكامل في الضعفاء
யஹ்யா பின் மயீன், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, இப்னு உயைனா, அஹ்மத், ஷுஅபா உள்ளிட்ட அறிஞர்கள் இவரைப் பலவீனர் என்று குறிப்பிட்டு அதற்கான காரணங்களையும் விளக்கியுள்ளனர்.
பார்க்க : அல்காமில்
மற்றொரு அறிவிப்பு
الرواية الثانية حديث محمد بن عبيد الله العزرمي
தாரகுத்னீயில் இந்த ஹதீஸ் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஸ்ரமீ என்பார் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர் ஆவார்.
سنن الدارقطني
حدثنا محمد بن أحمد بن عمرو بن عبد الخالق ثنا إبراهيم بن محمد بن نائلة الأصبهاني ثنا محمد بن المغيرة ثنا النعمان بن عبد السلام عن محمد بن عبيد الله (العزرمي) عن الحكم عن مقسم عن بن عباس قال بعث رسول الله عمر ساعيا قال فأتى العباس يطلب صدقة ماله قال فأغلظ له العباس فخرج إلى النبي فأخبره قال فقال رسول الله إن العباس قد أسلفنا زكاة ماله العام والعام المقبل
سنن الدارقطني
حدثنا محمد بن مخلد ومحمد بن جعفر المطيري قالا نا أبو خراسان محمد بن أحمد بن السكن ثنا موسى بن داود ثنا مندل بن علي عن عبيد الله عن الحكم وقال المطيري عن عبيد الله عن الحكم عن مقسم عن بن عباس أن رسول الله بعث عمر على الصدقة فرجع وهو يشكو العباس فقال إنه منعني صدقته فقال رسول الله يا عمر أما علمت أن عم الرجل صنو أبيه إن العباس أسلفنا صدقة عامين في عام كذا قال عن عبيد الله بن عمر وإنما أراد محمد بن عبيد الله وهو العزرمي) والله أعلم
முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஸ்ரமீ குறித்த விமர்சனம்
الكلام في محمد بن عبيد الله العزرمي
محمد بن عبيد الله العرزمي كنيته أبو عبد الرحمن وهو بن أخي عبد الملك بن أبي سليمان واسم أبي سليمان ميسرة وهو الذي يروي عنه شريك ويقول حدثني محمد بن سليمان العرزمي ينسبه إلى جده حتى لا يعرف يروي عن عطاء وعمرو بن شعيب روى عنه العراقيون مات سنة خمس وخمسين ومائة وهو بن ثمان وسبعين سنة وكان صدوقا إلا أن كتبه ذهبت وكان رديء الحفظ فجعل يحدث من حفظه ويهم فكثر المناكير في روايته تركه بن المبارك ويحيى القطان وابن مهدي ويحيى بن معين
– المجروحين
முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் அஸ்ரமீ என்பார் உண்மையாளர் என்றாலும் அவரது ஏடுகள் தொலைந்து விட்டன. அதன் பின்னர் அவர் நினைவாற்றலில் இருந்து அறிவிக்கலானார். இதனால் நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் இவரிடம் அதிகமாகின. இப்னுல் முபாரக், யஹ்யா அல்கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் இவரைப் பலவீனர் எனக் கூறியுள்ளனர்.
நூல் : அல்மஜ்ரூஹீன்
இன்னோர் அறிவிப்பு
மேற்கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முஹம்மத் பின் தக்வான் என்பார் அறிவிக்கும் இந்த ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர், அல் அவ்ஸத், பஸ்ஸார் ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
حديث محمد بن ذكوان
المعجم الكبير
حدثنا أحمد بن داود المكي ثنا أبو عون الزيادي ثنا محمد بن ذكوان عن منصور عن إبراهيم عن علقمة عن عبد الله قال قال رسول الله إن عم الرجل صنو أبيه وإن النبي تعجل من العباس صدقة عامين في عام
المعجم الأوسط
حدثنا أحمد قال حدثنا محرز بن عوف قال حدثنا محمد بن ذكوان عن منصور عن إبراهيم عن علقمة عن عبد الله قال قال رسول الله إن عم الرجل صنو أبيه وإن النبي تعجل من العباس صدقة عامين في عام
البحر الزخار ـ مسند البزار
1324 – وحدثنا الحسن بن يحيى ، قال : نا محمد بن عون أبو عون ، قال : نا محمد بن ذكوان ، عن منصور ، عن إبراهيم ، عن علقمة ، عن عبد الله : أن النبي صلى الله عليه وسلم تعجل من العباس صدقة سنتين وهذا الحديث إنما يرويه الحفاظ عن منصور ، عن الحكم بن عتيبة مرسلا ، ومحمد بن ذكوان هذا لين الحديث قد حدث بأحاديث كثيرة لم يتابع عليها
இவை அனைத்திலும் முஹம்மத் பின் தக்வான் எனும் பலவீனமான அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரைக் குறித்த விமர்சனம்:
محمد بن ذكوان
محمد بن ذكوان مولى الجهاضم بصري حدثني آدم قال سمعت البخاري قال محمد بن ذكوان مولى الجهاضم منكر الحديث ومن حديثه ما حدثناه جدي حدثنا حجاج بن نصير حدثنا محمد بن ذكوان حدثني يعلى بن حكيم عن سليمان بن أبي عبد الله عن أبي هريرة قال قال رسول الله من وسع على أهله وعياله يوم عاشوراء أوسع الله عليه سائر سنته قال أبو جعفر وسليمان بن أبي عبد الله مجهول بالنقل والحديث غير محفوظ
– الضعفاء الكبير
இவர் நிராகரிக்கப்படும் ஹதீஸ்களை அறிவித்தவர் என புகாரி அவர்களும், அபூ ஜஅஃபர், சுலைமான் பின் அபீ அப்துல்லா ஆகியோர் பலவீனர் எனவும் கூறியுள்ளனர்.
நூல் : லுஅஃபாவுல் கபீர்
இன்னோர் அறிவிப்பு
حديث إسماعيل المكي
மற்றொரு ஹதீஸ் இஸ்மாயீல் அல் மக்கீ என்பார் வழியாக தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن الدارقطني
حدثنا عبد الله بن محمد بن عبد العزيز ثنا عبد الله بن عمر بن أبان ثنا أبو داود عن شريك عن إسماعيل عن سليمان الأحول عن أبي رافع أن النبي بعث عمر ساعيا فكان بينه وبين العباس شيء فقال النبي أما علمت أن الرجل صنو أبيه إن العباس أسلفنا صدقة العام عام الأول
இஸ்மாயீல் அல்மக்கீ குறித்த விமர்சனம்
الكلام في إسماعيل المكي
تهذيب التهذيب
327 – ت س (الترمذي والنسائي) ابراهيم بن يزيد الخوزي الاموي أبو إسماعيل المكي. مولى عمر بن عبد العزيز. روى عن طاوس وعطاء وأبي الزبير ومحمد بن عباد ابن جعفر وغيرهم. وعنه عبد الرزاق ووكيع ومعتمر بن سليمان ومروان بن معاوية وغيرهم وروى عنه الثوري أيضا. قال ابو اسحاق الطالقاني سألت ابن المبارك عن حديث لابراهيم الخوزي فأبى أن يحدثني به فقال له عبد العزيز بن أبي رزمة (1) حدثه يا أبا عبدالرحمن فقال تأمرني أن أعود في ذنب قد تبت منه وقال أحمد متروك الحديث وقال ابن معين ليس بثقة وليس بشئ وقال أبو زرعة وأبو حاتم منكر الحديث ضعيف الحديث وقال البخاري سكتوا عنه. قال الدولابي يعني تركوه وقال النسائي متروك الحديث وقال أبو أحمد بن عدي هو في عداد من يكتب حديثه وإن كان قد نسب إلى الضعف. قال ابن سعد توفي سنة (151). قلت: وقال ابن المديني ضعيف لا أكتب عنه شيئا وقال ابن سعد له أحاديث وهو ضعيف وقال الجوزجاني سمعتهم لا يحمدون حديثه وقال النسائي في التمييز ليس بثقة ولا يكتب حديثه وقال البرقي كان يتهم بالكذب وقال الفلاس كان عبدالرحمن ويحيى لا يحدثان عنه وذكره يعقوب بن سفيان في باب من يرغب عن الرواية عنهم وقال علي بن الجنيد متروك وقال الدارقطني منكر الحديث وقال في موضع آخر لم يلق أيوب السختياني ولا سمع منه وقال ابن حبان روى المناكير الكثير حتى يسبق إلى القلب انه المتعمد لها.
அஹ்மத், இப்னு மயீன், அபூ ஸுர்ஆ, அபூ ஹாதம், புகாரி, தவ்லாபீ, நஸாயீ, இப்னுல் மதீனீ, இப்னு ஸஅத், தாரகுத்னீ உள்ளிட்ட அறிஞர்கள் இஸ்மாயீல் அல்மக்கீ என்பார் பலவீனர் என்றும் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.
ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்
மற்றும் சில அறிவிப்புகள்
அஹ்மத், ஹாகிம், திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத் உள்ளிட்ட நூல்களில் இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹுஷைம் என்பார் அறிவிக்கும் போது அலீ (ரலி) கூறியதாகவும், சில வேளை ஹஸன் பின் முஸ்லிம் என்ற நபித்தோழர் அல்லாத ஒருவர் கூறியதாகவும் முரண்படுகின்றார். இதை ஆய்வு செய்த தாரகுத்னீ, அபூதாவூத் ஆகியோர் நபித்தோழர் அல்லாதவர் அறிவிப்பதாகக் கூறுவது தான் சரியான அறிவிப்பாகும் என்று கூறுகின்றனர். அதாவது நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறுவது தவறு என்று கூறுகின்றார்கள். இந்த விபரம் தல்கீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.
التلخيص الحبير في تخريج أحاديث الرافعي الكبير
حَدِيثُ عَلِيٍّ : أَنَّ { الْعَبَّاسَ سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ ، فَرَخَّصَ لَهُ أَحْمَدُ وَأَصْحَابُ السُّنَنِ وَالْحَاكِمُ وَالدَّارَقُطْنِيّ وَالْبَيْهَقِيُّ ، مِنْ حَدِيثِ الْحَجَّاجِ بْنِ دِينَارٍ ، عَنْ الْحَكَمِ ، عَنْ جَحْيَةَ بْنِ عَدِيٍّ ، عَنْ عَلِيٍّ ، وَرَوَاهُ التِّرْمِذِيُّ مِنْ رِوَايَةِ إسْرَائِيلَ ، عَنْ الْحَكَمِ ، عَنْ حُجْرٍ الْعَدَوِيِّ ، عَنْ عَلِيٍّ ، وَذَكَرَ الدَّارَقُطْنِيُّ الِاخْتِلَافَ فِيهِ عَلَى الْحَكَمِ ، وَرَجَّحَ رِوَايَةَ مَنْصُورٍ عَنْ الْحَكَمِ ، عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمِ بْنِ يَنَّاقٍ ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا ، وَكَذَا رَجَّحَهُ أَبُو دَاوُد ، وَقَالَ الْبَيْهَقِيُّ : قَالَ الشَّافِعِيُّ : رُوِيَ عَنْ { النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تَسَلَّفَ صَدَقَةَ مَالِ الْعَبَّاسِ قَبْلَ أَنْ تَحِلَّ وَلَا أَدْرِي أَثْبَتَ أَمْ لَا ، قَالَ الْبَيْهَقِيُّ : وَعَنَى بِذَلِكَ هَذَا الْحَدِيثَ ، وَيُعَضِّدُهُ حَدِيثُ أَبِي الْبَخْتَرِيِّ عَنْ عَلِيٍّ أَنَّ { النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إنَّا كُنَّا احْتَجْنَا فَاسْتَسْلَفْنَا الْعَبَّاسَ صَدَقَةَ عَامَيْنِ رِجَالُهُ ثِقَاتٌ إلَّا أَنَّ فِيهِ انْقِطَاعًا ، وَفِي بَعْضِ أَلْفَاظِهِ أَنَّ { النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعُمَرَ : إنَّا كُنَّا تَعَجَّلْنَا صَدَقَةَ مَالِ الْعَبَّاسِ عَامَ أَوَّلٍ رَوَاهُ أَبُو دَاوُد الطَّيَالِسِيُّ مِنْ حَدِيثِ أَبِي رَافِعٍ .
இந்தக் கருத்தில் அமைந்த ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.
மற்றோர் அறிவிப்பு
மற்றொரு அறிவிப்பு பைஹகியில் உள்ளது.
حديث مرسل
سنن البيهقي الكبرى
7159 أخبرنا أبو نصر بن قتادة أنبأ أبو علي الرفاء ثنا محمد بن يونس الكديمي ثنا وهب بن جرير ح وأخبرناه محمد بن الحسين بن الفضل القطان أنبأ عبد الله بن جعفر ثنا يعقوب بن سفيان ثنا عيسى بن محمد ثنا وهب بن جرير ثنا أبي قال سمعت الأعمش يحدث عن عمرو بن مرة عن أبي البختري عن علي رضي الله عنه فذكر قصة في بعث رسول الله عمر رضي الله عنه ساعيا ومنع العباس صدقته وأنه ذكر للنبي ما صنع العباس فقال أما علمت يا عمر أن عم الرجل صنو أبيه إنا كنا احتجنا فاستسلفنا العباس صدقة عامين لفظ حديث القطان وفي رواية بن قتادة أن النبي تعجل من العباس صدقة عام أو صدقة عامين وفي هذا إرسال بين أبي البختري وعلي رضي الله عنه وقد ورد هذا المعنى في حديث أبي هريرة من وجه ثابت عنه
அலீ (ரலி) வழியாக அபுல் பக்தரி என்பார் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அபுல் பக்தரி என்பார் அலீ (ரலி) அவர்களைச் சந்தித்து எதையும் அறிவித்ததில்லை.
இதை அந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள். அலீ (ரலி), அபுல் பக்தரி ஆகிய இருவருக்குமிடையே தொடர்பு இல்லாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
சரியான அறிவிப்பு இதுதான்
இந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் சரியான அறிவிப்பு ஒன்று உள்ளது என்று இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ குறிப்பிடுகின்றார்கள். அந்தச் சரியான அறிவிப்பு புகாரியிலும், முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது. ஆயினும் அந்த ஹதீஸ் இந்தக் கருத்தைக் கூறவில்லை.
مسلم 1634
و حدثني زهير بن حرب حدثنا علي بن حفص حدثنا ورقاء عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة فقيل منع ابن جميل وخالد بن الوليد والعباس عم رسول الله صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أنه كان فقيرا فأغناه الله وأما خالد فإنكم تظلمون خالدا قد احتبس أدراعه وأعتاده في سبيل الله وأما العباس فهي علي ومثلها معها ثم قال يا عمر أما شعرت أن عم الرجل صنو أبيه –
البخاري 1468
حدثنا أبو اليمان أخبرنا شعيب حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه قال أمر رسول الله صلى الله عليه وسلم بالصدقة فقيل منع ابن جميل وخالد بن الوليد وعباس بن عبد المطلب فقال النبي صلى الله عليه وسلم ما ينقم ابن جميل إلا أنه كان فقيرا فأغناه الله ورسوله وأما خالد فإنكم تظلمون خالدا قد احتبس أدراعه وأعتده في سبيل الله وأما العباس بن عبد المطلب فعم رسول الله صلى الله عليه وسلم فهي عليه صدقة ومثلها معها تابعه ابن أبي الزناد عن أبيه وقال ابن إسحاق عن أبي الزناد هي عليه ومثلها معها وقال ابن جريج حدثت عن الأعرج بمثله –
1468 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது இப்னு ஜமீல், காலித் பின் வலீத், அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) ஆகியோர் (ஜகாத் தர) மறுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்னு ஜமீல் ஏழையாக இருந்து அல்லாஹ்வும் அவன் தூதரும் அவரைச் செல்வந்தராக்கிய பிறகு அவர் ஜகாத் தர மறுத்துள்ளார். காலிதைப் பொறுத்தவரை, நிச்சயமாக காலிதுக்கு நீங்கள் அநியாயம் இழைக்கின்றீர்கள். அவரோ தமது கவசங்களையும், போர்க் கருவிகளையும் அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டாரே, அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி), அல்லாஹ்வின் தூதருடைய பெரிய தந்தையாக இருப்பதால் அவர் ஜகாத்தும் அதைப் போன்ற இன்னொரு மடங்கும் கொடுத்தாக வேண்டும் எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 1468
இந்த அறிவிப்புக்களில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இரண்டு வருட ஜகாத்தை அப்பாஸ் (ரலி) யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசூலிக்கவில்லை, மாறாக அவர் மீதுள்ள ஜகாத்தையும் அது போல் இன்னொரு மடங்கையும் வசூலித்தார்கள் என்பது தெரிய வருகின்றது.
ஜாகத் கொடுக்க மறுத்ததற்காக இன்னொரு மடங்கை வாங்கினார்கள் என்பது இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போதே தெரிகிறது. பத்து ரூபாய் தர வேண்டியவர் அதைத் தர மறுக்கும் போது 20 ரூபாய் கொடு என்று கூறினால், அது மறுத்ததற்கான தண்டனை என்பதை யாரும் விளங்கலாம்.
புகாரியின் விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் இது பற்றிக் கூறப்பட்டதை இங்கே நினைவு படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
فتح الباري – ابن حجر
فعلى الرواية الأولى يكون صلى الله عليه و سلم ألزمه بتضعيف صدقته ليكون أرفع لقدره وأنبه لذكره وأنفى للذم عنه
அவரது ஜகாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்காக வாங்கியதற்கான காரணம் தமது தகுதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தம் மீது பழி சேரக் கூடாது என்பதற்காகவும் தான். இதன் கருத்து, அவர் அந்த ஜகாத்தைக் கொடுத்தாக வேண்டும். அது போன்ற இன்னொரு மடங்கை உபரியாக வழங்க வேண்டும் என்பது தான். (பத்ஹுல் பாரி 3/333)
ஜகாத் போன்ற இன்னொரு மடங்கை வழங்கியது இரண்டு வருடத்துக்காக அல்ல. உபரியாகத் தான் வழங்கினார்கள் என்று இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜகாத் கொடுக்க மறுத்த சம்பவம் புகாரி, முஸ்லிம் நூற்களில் ஒரு விதமாக உள்ளது. இது ஆதாரப்பூர்வமாக உள்ளது.
மற்ற நூற்களில் வேறு விதமாக உள்ளது. அது பலவீனமானதாக உள்ளது.
ஜகாத்தை முன் கூட்டியே வாங்கலாமா?
மேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.
ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்றபடியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது.
ஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்படுவதன்று. மாறாக, ஒருவரது சொத்துக்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வசூலிக்கப்படுவதாகும்.
இவர்களின் வாதப்படி இந்த வருடத்துக்கான ஜகாத்தை ஒருவரிடம் வசூலித்து விட முடியும். ஏனெனில் அவரிடம் உள்ள அந்த வருடச் சொத்துக்களைக் கணக்கிடுவது சாத்தியமானது தான். ஆனால் அடுத்த வருடம் அவரது சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த ஆண்டு கணக்கிட முடியுமா?
இவர்களின் வாதப்படி வருடம் முடிவடையும் போது தான் ஜகாத் கடமையாகும். அடுத்த வருடம் முடிவடையாத போது இப்போதே வசூலிப்பது அநீதியாகி விடும் அல்லவா?
இந்த வருடம் கணக்குப் பார்க்கும் போது 5 லட்சம் ஒருவரிடம் இருந்தால் அடுத்த வருடமும் அதே 5 லட்சத்திற்கு நாம் ஜகாத் வாங்க இயலுமா? அடுத்த வருடம் வருவதற்குள் அவரிடம் இருந்த 5 லட்சமும் முடிந்து போய் விட்டால் அவரிடம் வாங்கிய அந்த ஜகாத் அநீதியாக ஆகாதா?
அல்லது வருடம் முடிவதற்கு இடையில் அவர் மரணித்து விட்டால், இவர்களின் வாதப்படி அவர் அந்த வருடத்தின் ஜகாத்தைக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியானால் அட்வான்ஸாக வாங்கிய ஜகாத் எந்த வகையில் நியாயமாகும்?
பலவீனமான இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வாதிடும் இவர்கள், ஒரு மனிதன் 10 வருட ஜகாத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினால் அதை வாங்கலாம் என்பார்களா? பத்து வருடத்தில் ஆயிரம் மடங்கு அவனது சொத்து பெருகி விட்டாலோ, அல்லது சொத்துக்கள் அழிந்து விட்டாலோ, அல்லது அவனே மரணித்து விட்டாலோ அந்த அநீதியை எப்படிச் சரி செய்வார்கள்?
இதைச் சிந்திக்கும் போது இரண்டு வருட ஜகாத்தை அட்வான்ஸாக வாங்கியது கட்டுக் கதை என்பது மேலும் உறுதியாகின்றது.
3. ஒரு வருடம் முழுமையடையும் வரை ஜகாத் இல்லை என்ற ஹதீஸ்
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் கீழ்க்காணும் ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
ஒருவருக்கு செல்வம் கிடைத்தால் அதன் மீது ஓராண்டு கடக்கும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் தாரகுத்னீ, திர்மிதீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
سنن الدارقطني
1911 – حدثنا القاضى الحسين بن إسماعيل حدثنا عبد الله بن شبيب حدثنى يحيى بن محمد الجارى حدثنا عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن ابن عمر أن رسول الله -صلى الله عليه وسلم- قال ليس فى مال المستفيد زكاة حتى يحول عليه الحول.
سنن الترمذي
572 حدثنا يحيى بن موسى حدثنا هارون بن صالح الطلحي المدني حدثنا عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من استفاد مالا فلا زكاة عليه حتى يحول عليه الحول عند ربه وفي الباب عن سراء بنت نبهان الغنوية
سنن الترمذي
573 – حدثنا محمد بن بشار حدثنا عبد الوهاب الثقفي حدثنا أيوب عن نافع عن ابن عمر قال من استفاد مالا فلا زكاة فيه حتى يحول عليه الحول عند ربه قال أبو عيسى وهذا أصح من حديث عبد الرحمن بن زيد بن أسلم قال أبو عيسى وروى أيوب وعبيد الله بن عمر وغير واحد عن نافع عن ابن عمر موقوفا وعبد الرحمن بن زيد بن أسلم ضعيف في الحديث ضعفه أحمد بن حنبل وعلي بن المديني وغيرهما من أهل الحديث وهو كثير الغلط وقد روي عن غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم أن لا زكاة في المال المستفاد حتى يحول عليه الحول وبه يقول مالك بن أنس والشافعي وأحمد وإسحق و قال بعض أهل العلم إذا كان عنده مال تجب فيه الزكاة ففيه الزكاة وإن لم يكن عنده سوى المال المستفاد ما تجب فيه الزكاة لم يجب عليه في المال المستفاد زكاة حتى يحول عليه الحول فإن استفاد مالا قبل أن يحول عليه الحول فإنه يزكي المال المستفاد مع ماله الذي وجبت فيه الزكاة وبه يقول سفيان الثوري وأهل الكوفة
இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ இமாம் அவர்களே அடுத்த ஹதீஸின் இறுதியில் கூறுகின்றார்கள். அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மத்யனீ உள்ளிட்ட பலர் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்திருப்பதாகவும் திர்மிதீ இமாம் தெரிவிக்கின்றார்கள்.
மற்றொரு ஹதீஸ்
மேலும் இதே கருத்துடைய ஹதீஸ் பைஹகீ, தாரகுத்னீ , இப்னுமாஜாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
حديث حارثة بن ابى الرجال
السنن الكبرى للبيهقي –
(واخبرنا) علي بن محمد بن بشران ببغداد انبأ اسمعيل بن محمد الصفار ثنا محمد بن الحسين الحنيني ثنا محمد بن الصلت ثنا أبو كدينة عن حارثة عن عمرة عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ليس في المال زكوة حتى يحول عليه الحول
سنن ابن ماجه –
1782 حدثنا نصر بن علي الجهضمي حدثنا شجاع بن الوليد حدثنا حارثة بن محمد عن عمرة عن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا زكاة في مال حتى يحول عليه الحول
سنن الدارقطني –
1912 – حدثنا أبو طلحة أحمد بن محمد بن عبد الكريم الفزارى حدثنا نصر بن على حدثنا شجاع بن الوليد عن حارثة بن محمد ح وحدثنا إبراهيم بن دبيس بن أحمد الحداد حدثنا محمد بن عبيد الله بن المنادى حدثنا أبو بدر حدثنا حارثة ح وحدثنا أحمد بن كامل حدثنا محمد بن سعد العوفى حدثنا أبو بدر حدثنا حارثة ح وحدثنا على بن عبد الله بن مبشر حدثنا على بن أحمد الجواربى حدثنا إسحاق بن منصور حدثنا هريم عن حارثة عن عمرة عن عائشة قالت قال رسول الله -صلى الله عليه وسلم- ليس فى المال زكاة حتى يحول عليه الحول. قال نصر لا زكاة فى مال. وقال الباقون ليس فى المال زكاة.
மேற்கண்ட ஹதீஸ்களை ஹாரிஸா பின் அபிர்ரிஜால் என்பார் அறிவிக்கிறார்.
ஹாரிஸா பின் அபிர்ரிஜால் குறித்த விமர்சனங்கள்:
الكلام فى حارثة ين أبي الرجال
تهذيب التهذيب
– ت ق (الترمذي وابن ماجة). حارثة بن أبي الرجال (1) محمد بن عبدالرحمن بن عبدالله بن حارثة ابن النعمان الانصاري النجاري المدني. روى عن أبيه وجدته أم أبيه عمرة بنت عبدالرحمن وعبيد الله بن أبي رافع. وعنه الثوري والحسن بن صالح وأبو معاوية وابن نمير وعبدة بن سليمان وغيرهم.قال أحمد ضعيف ليس بشئ وقال الدوري عن ابن معين ليس بثقة وقال في موضع آخر ضعيف وقال أبو زرعة واهي الحديث ضعيف وقال أبو حاتم ضعيف الحديث منكر الحديث مثل عبدالله بن سعيد المقبري وقال البخاري منكر الحديث وقال النسائي متروك الحديث وقال في موضع آخر ليس بثقة ولا يكتب حديثه وقال ابن عدي عامة ما يرويه منكر. قلت: وذكره يعقوب بن سفيان في باب من يرغب عن الرواية عنهم وقال ابن عدي بلغني أن أحمد نظر في جامع إسحاق فإذا أول حديث فيه حديث حارثة في استفتاح الصلاة فقال منكر جدا وقال الحاكم كان مالك لا يرضى حارثة وقال ابن خزيمة حارثة ليس يحتج أهل الحديث بحديثه. وقال الآجري عن أبي داود ليس بشئ. قال عبد العزيز ابن محمد ضرب عندنا حدودا وقال الترمذي لما خرج حديثه قد تكلم فيه من قبل حفظه. وقال ابن حبان كان ممن كثر وهمه وفحش خطؤه تركه أحمد ويحيى وقال علي بن الجنيد متروك الحديث ذكر ابن سعد أنه مات سنة (148) وقرأت بخط الذهبي له في الكتابين حديث واحد وهو وهم نبه عليه العلائي وقال بل سبعة.
ஹாரிஸா பின் அபிர்ரிஜால் என்பார் பலவீனமானவர் என்று அஹ்மத், இப்னு மயீன், அபூஸுர்ஆ, அபூஹாதம், புகாரி, நஸாயீ, மாலிக், இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், அலி பின் அல்ஜுனைத் உள்ளிட்ட அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பொய்யரென சந்தேகிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்
மற்றொரு ஹ்தீஸ்
இதே கருத்தில் மற்றொரு ஹதீஸ் தாரகுத்னியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அறிவிப்பாளர் தொடரில் ஹஸ்ஸான் பின் ஸியாஹ் என்பார் இடம் பெறுகிறார்.
حديث حسان بن سياه
سنن الدارقطني –
1914 حدثنا الحسن بن الخضر المعدل بمكة حدثنا إسحاق بن إبراهيم بن يونس حدثنا محمد بن سليمان الأسدى حدثنا حسان بن سياه عن ثابت عن أنس أن رسول الله صلى الله عليه وسلم- قال ليس فى مال زكاة حتى يحول عليه الحول
ஹஸ்ஸான் பின் ஸியாஹ் குறித்த விமர்சனம்
الكلام فى حسام بن سياه
مجمع الزوائد ومنبع الفوائد
وفيه حسان بن سياه ضعفه ابن عدي وابن حبان والدارقطني
الموضوعات –
فقال ابن عدى: حسان بن سياه يحدث بما لا يتابع عليه. قال ابن حبان: يأتي عن الثقاة بما لا يشبه حديث الاثبات.
نظم المتناثر –
وحديث أنس فيه حسان بن سياه وهو منكر الحديث جدا وفي ترجمته أورده ابن عدي وضعفه
إرواء الغليل –
وأما حديث أنس فيرويه حسان بن سياه عن ثابت عن أنس أن رسول الله ( صلى الله عليه وسلم ) قال : ” ليس في مال زكاة حتى يحول عليه الحول ” . قلت : وهذا سند ضعيف حسان هذا قال الحافظ في ” التلخيص ” ( ص 175 ) : ” وهو ضعيف وقد تفرد به عن ثابت “
ஹஸ்ஸான் பின் ஸியாஹ் என்பார் முற்றிலும் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர், இப்னு அதீ, இப்னு ஹிப்பான், தாரகுத்னீ உள்ளிட்ட அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவை தவிர அபூதாவூத், பைஹகீ ஆகிய நூற்களிலும் இந்தக் கருத்துள்ள ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
سنن أبي داود –
1342 – حدثنا عبد الله بن محمد النفيلي حدثنا زهير حدثنا أبو إسحق عن عاصم بن ضمرة وعن الحارث الأعور عن علي رضي الله عنه قال زهير أحسبه عن النبي صلى الله عليه وسلم أنه قال هاتوا ربع العشور من كل أربعين درهما درهم وليس عليكم شيء حتى تتم مائتي درهم فإذا كانت مائتي درهم ففيها خمسة دراهم فما زاد فعلى حساب ذلك وفي الغنم في أربعين شاة شاة فإن لم يكن إلا تسع وثلاثون فليس عليك فيها شيء وساق صدقة الغنم مثل الزهري قال وفي البقر في كل ثلاثين تبيع وفي الأربعين مسنة وليس على العوامل شيء وفي الإبل فذكر صدقتها كما ذكر الزهري قال وفي خمس وعشرين خمسة من الغنم فإذا زادت واحدة ففيها ابنة مخاض فإن لم تكن بنت مخاض فابن لبون ذكر إلى خمس وثلاثين فإذا زادت واحدة ففيها بنت لبون إلى خمس وأربعين فإذا زادت واحدة ففيها حقة طروقة الجمل إلى ستين ثم ساق مثل حديث الزهري قال فإذا زادت واحدة يعني واحدة وتسعين ففيها حقتان طروقتا الجمل إلى عشرين ومائة فإن كانت الإبل أكثر من ذلك ففي كل خمسين حقة ولا يفرق بين مجتمع ولا يجمع بين مفترق خشية الصدقة ولا تؤخذ في الصدقة هرمة ولا ذات عوار ولا تيس إلا أن يشاء المصدق وفي النبات ما سقته الأنهار أو سقت السماء العشر وما سقى الغرب ففيه نصف العشر وفي حديث عاصم والحارث الصدقة في كل عام قال زهير أحسبه قال مرة وفي حديث عاصم إذا لم يكن في الإبل ابنة مخاض ولا ابن لبون فعشرة دراهم أو شاتان حدثنا سليمان بن داود المهري أخبرنا ابن وهب أخبرني جرير بن حازم وسمى آخر عن أبي إسحق عن عاصم بن ضمرة والحارث الأعور عن علي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم ببعض أول هذا الحديث قال فإذا كانت لك مائتا درهم وحال عليها الحول ففيها خمسة دراهم وليس عليك شيء يعني في الذهب حتى يكون لك عشرون دينارا فإذا كان لك عشرون دينارا وحال عليها الحول ففيها نصف دينار فما زاد فبحساب ذلك قال فلا أدري أعلي يقول فبحساب ذلك أو رفعه إلى النبي صلى الله عليه وسلم وليس في مال زكاة حتى يحول عليه الحول إلا أن جريرا قال ابن وهب يزيد في الحديث عن النبي صلى الله عليه وسلم ليس في مال زكاة حتى يحول عليه الحول
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என்று நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானி இதிலுள்ள மற்றொரு குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.
இந்தத் தொடரில் அலீ (ரலி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பார் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பார் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்பு தான் என்று அல்பானி கூறுகின்றார்.
ஆனாலும் அலீ (ரலி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபிகள் நாயகத்தின் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் திட்டமாகக் கூறப்படவில்லை.
அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத் தான் நினைக்கிறேன் என்று ஸுஹைர் என்பார் கூறுகின்றார். இந்த வாசகம் இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெறுகின்றது.
அலீ (ரலி) அவர்கள் நபியவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று அலீ (ரலி) அவர்களைச் சந்தித்திராத ஸுஹைர் என்பார் யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ (ரலி) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.
ஆனால் ஸுஹைர் என்பார் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.
எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.
4. ஒவ்வொரு வருடமும்…
الدليل الثالث حديث كل عام
ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் ஆண்டு தோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை நிலைநாட்ட மற்றொரு ஹதீஸையும் எடுத்து வைக்கின்றார்கள்.
இது மிகவும் ஆதாரப்பூர்வமானது என்று இக்கருத்துடையவர்கள் கூறுகின்றனர்.
பைஹகீயின் அறிவிப்பு
سنن البيهقي الكبرى
7067 وأخبرنا أبو الحسين بن الفضل القطان ببغداد (حمزة بن احمد بن مخلد) أنبأ عبد الله بن جعفر بن درستويه ثنا يعقوب بن سفيان ثنا إسحاق بن إبراهيم (بن العلاء بن الضحاك الزبيدي المعروف بزبريق) حدثني عمرو بن الحارث (الزبيدي الحمصي) حدثني عبد الله بن سالم عن الزبيدي قال حدثني يحيى بن جابر أن عبد الرحمن بن جبير حدثه أن أباه حدثه أن عبد الله بن معاوية الغاضري حدثهم أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده فإنه لا إله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه في كل عام ولم يعط الهرمة ولا الدرنة ولا الشرط اللائمة ولا المريضة ولكن من أوسط أموالكم فإن الله عز وجل لم يسألكم خيره ولم يأمركم بشره وزكى عبد نفسه فقال رجل ما تزكية المرء نفسه يا رسول الله قال يعلم أن الله معه حيث ما كان وقال غيره ولا الشرط اللئيمة
இந்த அறிவிப்பாளர் தொடரில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பார் இடம் பெற்றுள்ளார்.
இஸ்ஹாக் பின் இப்ராஹீம் குறித்த விமர்சனங்கள்:
الكلام في إسحاق بن إبراهيم بن العلاء الزبيدي
2270 إسحاق بن إبراهيم بن العلاء الزبيدي بن زبريق الحمصي قال النسائي ليس بثقة وقال أبو داود ليس بشيء وقال أبو حاتم لا بأس به وسمعت يحيى بن معين يثني عليه
– لسان الميزان
406 بخ البخاري في الأدب المفرد إسحاق بن إبراهيم بن العلاء بن الضحاك بن المهاجر أبو يعقوب الحمصي الزبيدي المعروف بابن زبريق روى عن عمرو بن الحارث الحمصي وبقية بن الوليد وأبي مسهر وغيرهم روى عنه البخاري في الأدب ونسبه إلى جده وأبو حاتم والذهلي ويعقوب الفسوي وعثمان بن سعيد الدارمي وأبو إسماعيل الترمذي ويحيى بن عمرو بن المصري وجماعة قال أبو حاتم شيخ لا بأس به ولكنهم يحسدونه سمعت يحيى بن معين أثنى عليه خيرا وقال النسائي ليس بثقة وقال بن يونس عن بن رازح عن عمارة بن وثيمة توفي بمصر لثمان بقين من رمضان سنة 238 قلت وعلق البخاري في قيام الليل حديثا للزبيدي هو من رواية إسحاق هذا عن عمرو بن الحارث الحمصي وصله الطبراني وغيره وروى الآجري عن أبي داود أن محمد بن عون قال ما أشك أن إسحاق بن زبريق يكذب وذكره بن حبان في الثقات
– تهذيب التهذيب
இவரைப் பற்றி இப்னு மயீன் புகழ்ந்து கூறியிருக்கின்றார். ஆயினும் நஸாயீ அவர்கள் இவர் பலமான அறிவிப்பாளர் அல்ல எனக் கூறுகின்றார். இவர் பொய் சொல்பவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்று முஹம்மத் பின் அவ்ன் கூறுகின்றார்.
இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவரை சிலர் நல்லவர்கள் என்று கூறியிருந்தாலும் அவர் பொய் சொல்பவர் என்று தெளிவான காரணம் சொல்லப்பட்டுள்ளதால் நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்று ஹதீஸ் கலையில் வகுக்கப்பட்டுள்ள சரியான நிலைபாட்டின் அடிப்படையில் இவர் பலவீனமானவர் என்று முடிவு எடுக்க வேண்டும்.
மற்றொரு குறைபாடு
மேற்கண்ட பைஹகீயின் அறிவிப்பில் அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரும் இடம் பெறுகின்றார்.
அம்ரு பின் ஹாரிஸ் குறித்த விமர்சனங்கள்:
الكلام في عمرو بن الحارث بن الضحاك الزبيدي الحمصي
20 بخ د البخاري في الأدب المفرد وأبي داود عمرو بن الحارث بن الضحاك الزبيدي الحمصي عداده في الكلاعيين روى عن عبد الله بن سالم الأشعري وعنه إسحاق بن إبراهيم بن العلاء بن زبريق ومولاته علوة ذكره بن حبان في الثقات قلت تقدم في ترجمة إسحاق بن إبراهيم الراوي عنه شيء يتعلق بتعاليق البخاري وقال الذهبي لا تعرف عدالته
– تهذيب التهذيب
இவரது நேர்மை நிரூபிக்கப்படவில்லை என்று தஹபீ கூறுகிறார். எனவே இதுவும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
தப்ரானியின் அறிவிப்பு
المعجم الصغير
555 حدثنا علي بن الحسن بن معروف الحمصي حدثنا أبو تقي عبد الحميد بن إبراهيم حدثنا عبد الله بن سالم بن محمد بن الوليد الزبيدي حدثنا يحيى بن جابر الطائي أن عبد الرحمن بن جبير بن نفير حدثه أن أباه حدثه أن عبد الله بن معاوية الغاضري رضي الله عنه حدثهم أن رسول الله صلى الله عليه وسلم قال ثلاث من فعلهن فقد ذاق طعم الإيمان من عبد الله عز وجل وحده بأنه لا إله ألا هو وأعطى زكاة ماله طيبة بها نفسه في كل عام ولم يعط الهرمة ولا الدرنة ولا المريضة ولكن من أوسط أموالكم فإن الله عز وجل لم يسألكم خيرها ولم يأمركم بشرها وزكى نفسه فقال رجل وما تزكية النفس فقال أن يعلم أن الله عز وجل معه حيث كان لا يروى هذا الحديث عن بن معاوية إلا بهذا الإسناد ولا نعرف لعبد الله بن معاوية الغاضري حديثا مسندا غير هذا
தப்ரானி அவர்களின் ஸகீர் என்ற நூலில் இடம் பெற்ற இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூதகீ அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெறுகின்றார்.
அபூதகீ அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் குறித்த விமர்சனங்கள்:
الكلام في عبد الحميد بن إبراهيم الحضرمي الحمصي أبو تقى
41 عبد الحميد بن إبراهيم الحضرمي الحمصي أبو تقى روى عن عبد الله بن سالم صاحب محمد بن الوليد الزبيدي روى عنه محمد بن عوف نا عبد الرحمن قال سألت محمد بن عوف الحمصي عنه فقال كان شيخا ضريرا لا يحفظ وكنا نكتب من نسخه لذى كان عند إسحاق بن زبريق لابن سالم فنحمله اليه ونلقنه فكان لا يحفظ الإسناد ويحفظ بعض المتن فيحدثنا وانما حملنا الكتاب عنه شهوة الحديث وكان إذا حدث عنه محمد بن عوف قال وجدت في كتاب بن سالم ثنا به أبو تقي نا عبد الرحمن قال سمعت أبي ذكر لي أبو تقي عبد الحميد بن إبراهيم فقال كان في بعض قرى حمص فلم اخرج اليه وكان ذكر أنه سمع كتب عبد الله بن سالم عن الزبيدي الا انها ذهبت كتبه فقال لا احفظها فارادوا ان يعرضوا عليه فقال لا احفظ فلم يزالوا به حتى لان ثم قدمت حمص بعد ذلك بأكثر من ثلاثين سنه فإذا قوم يروون عنه هذا الكتاب وقالوا اعرض عليه كتاب بن زبريق ولقنوه فحدثهم بهذا وليس هذا عندي بشيء رجل لا يحفظ وليس عنده كتب
– الجرح والتعديل
3751 عبد الحميد بن إبراهيم الحضرمي أبو تقي بفتح المثناة ثم قاف مكسورة الحمصي صدوق إلا أنه ذهبت كتبه فساء حفظه من التاسعة س
– تقريب التهذيب
220 س النسائي عبد الحميد بن إبراهيم الحضرمي أبو تقي الحمصي روى عن عبد الله بن سالم الأشعري وسلمة بن كلثوم وعقبة بن معدان وعمرو بن واقد وإسماعيل بن عياش وعنه صفوان بن عمرو الصغير وأيوب بن سليمان الصغدي وعمران بن بكار وعلي بن الحسين الحمصي بن معروف القصاع وسليمان بن عبد الحميد البهراني ومحمد بن عوف الطائي وجماعة قال بن أبي حاتم سألت محمد بن عوف فقال كان شيخا ضريرا لا يحفظ وكنا نكتب من نسخة بن سالم فنحمله إليه ونلقنه وكان لا يحفظ الإسناد ويحفظ بعض المتن فيحدثنا وإنما حملنا على الكتابة عنه شهرة الحديث قال وكان محمد بن عوف إذا حدث عنه قال وحدث في كتاب عبد الله بن سالم وحدثني أبو تقي به وقال أبو حاتم ذكر أنه سمع كتب عبد الله بن سالم أنه ذهبت كتبه فقال لا أحفظها ثم قدمت حمص بعد فإذا قوم يروون عنه وقالوا عرض عليه كتاب بن زبريق ولقنوه فحدثهم وليس هذا شيء وقال في موضع آخر ليس بثقة وذكره بن حبان في الثقات
– تهذيب التهذيب
இவர் நினைவாற்றல் இல்லாதவர் என்று முஹம்மத் பின் அவ்ஃப் உள்ளிட்ட அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். இதுவும் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படாது.
அபூதாவூதின் அறிவிப்பு
ابواود 1349
قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمرو بن الحارث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري من غاضرة قيس قال قال النبي صلى الله عليه وسلم ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده وأنه لا إله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام ولا يعطي الهرمة ولا الدرنة ولا المريضة ولا الشرط اللئيمة ولكن من وسط أموالكم فإن الله لم يسألكم خيره ولم يأمركم بشره
அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸிலும் இரண்டு குறைபாடுகள் உள்ளன.
இதை அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.
அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.
அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.
ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.
மேலும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுவதில், அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப்படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம்.
நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.
இந்த மூன்று ஹதீஸ்களின் நிலையும் இது தான். பலவீனமான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மிக முக்கியமான கடமையான வணக்கத்தைத் தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
இது தவிர இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித் தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவு கோல் இவருக்குப் பொருந்தவில்லை.
நபித் தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித் தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை.
“நான் நபியிடம் கேட்டேன்” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், “நான் நபியிடம் கேட்டேன்” என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின் படியும் இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை.
அல்லது ஒரு நபித் தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை.
தத்ரீப் நூலில் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோல் கூறப்பட்டுள்ளது.
.நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித் தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.
இப்படிப் பல குறைபாடுகள் கொண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் தங்கள் வாதத்தை நிறுவுகின்றனர்.
பொதுவான லாஜிக்
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அதை நிரூபிக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.
பொதுவாக எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு கட்டளையிடப்பட்டால் அதை ஒரு தடவைச் செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.
வணக்க வழிபாடுகள் முதல் உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.
தொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.
குர்ஆனிலோ, நபிவழியிலோ “தொழ வேண்டும்’ என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.
நோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.
இப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு, நாளோ, கிழமையோ, மாதமோ அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?
வாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.
அவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.
“மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடு” என்று நாம் ஒருவருக்குக் கட்டளையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு தடவை மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் அந்த நபரும், மூஸாவும் புரிந்து கொள்வார்கள்.
மேற்கண்ட நமது கட்டளையின் அடிப்படையில் மூஸா அந்த நபரிடம் சென்று வருடா வருடம் ஆயிரம் ரூபாய் கேட்டால் அந்த நபர் கொடுப்பாரா? நிச்சயம் கொடுக்க மாட்டார்.
அந்த அடிப்படையில் தான் ஜகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.
ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் கொடுப்பது கடமை எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்ற கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.
ஒரு சொல்லுக்கு இது தான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது அதற்கு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.
“உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன்” என்று ஒருவரிடம் நாம் கூறுகிறோம். அது போல் அவரிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுகிறோம். அவர் அடுத்த வருடம் வந்து மீண்டும் ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று நம்மிடம் கேட்கிறார். “ஆயிரம் ரூபாய் தந்து விட்டேனே” என்று நாம் கூறுகிறோம். “வருடா வருடம் இல்லை என்று சொன்னீர்களா? அதற்கு என்ன ஆதாரம்?” என்று அவர் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?
“வருடா வருடம் தருவேன்” என்று கூறாமல் பொதுவாகச் சொன்னதே இதற்குரிய ஆதாரம் என்பது விளங்கவில்லையா? என்று அவரிடம் திருப்பிக் கேட்போம்.
செல்வங்களுக்கு ஜகாத் கொடுங்கள் என்பது பொதுவான சொல்.
* ஒவ்வொரு வினாடியும் கொடுக்க வேண்டுமா?
* ஒவ்வொரு நிமிடமும் கொடுக்க வேண்டுமா?
* ஒவ்வொரு மணிக்கும் கொடுக்க வேண்டுமா?
* ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டுமா?
* ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டுமா?
* ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா?
* இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமா?
* மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
* ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
* வருடம் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
* ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?
என்று ஆயிரக்கணக்கான அர்த்தங்களுக்கு இச்சொல் இடம் தருகின்றது. ஆயிரக்கணக்கான அர்த்தங்களில் வருடா வருடம் என்ற ஒரு அர்த்தத்தை மட்டும் திட்டவட்டமாக யார் முடிவு செய்கிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.
எந்தக் கால கட்டமும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டதே நமக்குப் போதுமான ஆதாரமாகும்.
காலக் கெடு எதையும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டால் பொதுவாக ஒரு தடவை என்ற பொருளைத் தான் தரும் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் கூறலாம்.
صحيح البخاري
1499 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «العَجْمَاءُ جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»
ஒரு மனிதருக்குப் புதையல் கிடைக்கின்றது. இதில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.
(புகாரி 1499, 2355, 6912, 6913)
புதையலை எடுத்தவர் வருடா வருடம் 20 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்வார்களா? மொத்தத்தில் ஒரு தடவை என்று புரிந்து கொள்வார்களா?
எனவே வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் தங்கள் கூற்றை நிரூபிக்காவிட்டால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தானாகவே நிரூபணமாகி விடும்.
இது தான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்.
கடந்த வருடம், இது சம்பந்தமாக எதிர்க் கருத்திலே உள்ள உலமாக்கள் எங்களுடன் விவாதத்திற்கு வந்தார்கள். அந்த விவாதத்திலும் கூட அந்த ஹதீஸ்கள் சரியானவை என்று அவர்களால் நிறுவவே முடியவில்லை. ஒரு ஹதீஸ் தான் சரியானது என்று அவர்கள் வாயால் சொன்னார்கள். மற்ற எதுவும் சரியில்லை என்றார்கள். அந்த ஒரு ஹதீஸும் சரியில்லை என்பதை நாங்கள் நிரூபித்தோம்.
ஆகவே, ஹதீஸில் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. “கொடுத்த பொருளுக்கு திரும்ப ஜக்காத் கொடுங்கள்!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக தெளிவான ஆதாரம் எங்களுக்குக் கிடைத்துவிட்டால், அதை ஏற்கக் கூடியவர்களிலே முதல் ஆளாக நாங்கள் இருப்போம். அந்தக் கருத்திலே ஹதீஸ் இல்லாத காரணத்தினால் தான் இந்தப் பிரச்சனையிலே மாறுபட்ட கருத்தை வைக்கிறோமே தவிர, ஹதீஸ்களை மறுத்து நாங்கள் வைக்கவில்லை.
யார் ஹதீஸிலே இருக்கிறது என்று சொல்கிறார்களோ, அவர்கள் விளக்கம் தரலாம். இது சரியான ஹதீஸ் என்று நீங்கள் நிறுவினால், அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவித்தோம்.
எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜகாத் கொடுத்த பொருளுக்கு திரும்பவும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்று சொன்னதாக ஹதீஸை எடுத்துக் காட்டினால், அதை முதலில் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்போம்; எடுத்துக் காட்டாதவரை அதை நாங்கள் அமுல்படுத்த முடியாது. குர்ஆனும் – ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் தான் மார்க்கம் என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதை ஹதீஸை மறுப்பதற்காக சொன்னதல்ல; ஏற்பதற்காக சொன்ன வாதம்.