ஜஸாகல்லாஹ் என்று எப்போது கூற வேண்டும்?

சிலர் பேச்சுகளை முடிக்கும் போதும் ஜஸாக்கல்லாஹூ கைர் என்கிறார்களே? அதன் அர்த்தம் என்ன? அப்படிச் சொல்லலாமா?

காதிர்

பதில் :

ஜஸாகல்லாஹு கைரா என்ற அரபு வாசகத்திற்கு அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக என்பது பொருள்.

ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இவ்வாறு கூறலாம். இவ்வாறு கூறுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

سنن الترمذي
2035 – حَدَّثَنَا الحُسَيْنُ بْنُ الحَسَنِ المَرْوَزِيُّ بِمَكَّةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ، قَالَا: حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ جَوَّابٍ، عَنْ سُعَيْرِ بْنِ الخِمْسِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ صُنِعَ إِلَيْهِ مَعْرُوفٌ فَقَالَ لِفَاعِلِهِ: جَزَاكَ اللَّهُ خَيْرًا فَقَدْ أَبْلَغَ فِي الثَّنَاءِ “: هَذَا حَدِيثٌ حَسَنٌ جَيِّدٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أُسَامَةَ بْنِ زَيْدٍ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் தனக்கு நல்லது செய்யப்படும் போது அதைச் செய்தவரிடத்தில் ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) எனக் கூறினால் அவர் நிறைவாகப் புகழ்ந்தவராகி விடுவார்.

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ரலி)

நூல் : திர்மிதீ

مسند أحمد

 – حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنِ ابْنِ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: ابْتَاعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ رَجُلٍ مِنَ الْأَعْرَابِ جَزُورًا – أَوْ جَزَائِرَ – بِوَسْقٍ مِنْ تَمْرِ الذَّخِرَةِ، وَتَمْرُ الذَّخِرَةِ: الْعَجْوَةُ، فَرَجَعَ بِهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى بَيْتِهِ، فَالْتَمَسَ  لَهُ التَّمْرَ، فَلَمْ يَجِدْهُ، فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: ” يَا عَبْدَ اللهِ، إِنَّا قَدْ ابْتَعْنَا مِنْكَ جَزُورًا – أَوْ جَزَائِرَ – بِوَسْقٍ مِنْ تَمْرِ الذَّخْرَةِ، فَالْتَمَسْنَاهُ، فَلَمْ نَجِدْهُ ” قَالَ: فَقَالَ الْأَعْرَابِيُّ: وَا غَدْرَاهُ. قَالَتْ: فَنَهَمَهُ النَّاسُ، وَقَالُوا: قَاتَلَكَ اللهُ، أَيَغْدِرُ  رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالًا “. ثُمَّ عَادَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا عَبْدَ اللهِ إِنَّا ابْتَعْنَا مِنْكَ  جَزَائِرَكَ وَنَحْنُ نَظُنُّ أَنَّ عِنْدَنَا مَا سَمَّيْنَا لَكَ، فَالْتَمَسْنَاهُ، فَلَمْ نَجِدْهُ ” فَقَالَ الْأَعْرَابِيُّ: وَاغَدْرَاهُ، فَنَهَمَهُ  النَّاسُ، وَقَالُوا: قَاتَلَكَ اللهُ أَيَغْدِرُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالًا ” فَرَدَّدَ ذَلِكَ  رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا، فَلَمَّا رَآهُ لَا يَفْقَهُ عَنْهُ، قَالَ لِرَجُلٍ مِنْ أَصْحَابِهِ: ” اذْهَبْ إِلَى خُوَيْلَةَ بِنْتِ حَكِيمِ بْنِ أُمَيَّةَ، فَقُلْ لَهَا: رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكِ: إِنْ كَانَ عِنْدَكِ وَسْقٌ مِنْ تَمْرِ الذَّخِرَةِ، فَأَسْلِفِينَاهُ حَتَّى نُؤَدِّيَهُ إِلَيْكِ إِنْ شَاءَ اللهُ “. فَذَهَبَ إِلَيْهَا الرَّجُلُ، ثُمَّ رَجَعَ الرَّجُلُ، فَقَالَ: قَالَتْ: نَعَمْ، هُوَ عِنْدِي يَا رَسُولَ اللهِ، فَابْعَثْ مَنْ يَقْبِضُهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلرَّجُلِ: ” اذْهَبْ بِهِ، فَأَوْفِهِ الَّذِي لَهُ ” قَالَ: فَذَهَبَ بِهِ، فَأَوْفَاهُ الَّذِي لَهُ. قَالَتْ: فَمَرَّ الْأَعْرَابِيُّ بِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي أَصْحَابِهِ، فَقَالَ: جَزَاكَ اللهُ خَيْرًا، فَقَدْ أَوْفَيْتَ  وَأَطْيَبْتَ. قَالَتْ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أُولَئِكَ خِيَارُ عِبَادِ اللهِ عِنْدَ اللهِ  يَوْمَ الْقِيَامَةِ الْمُوفُونَ الْمُطِيبُونَ “

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் ஒரு வஸக் அஜ்வா பேரீச்சம் பழத்துக்கு ஒரு ஒட்டகத்தை விலை பேசினார்கள். (ஒரு வஸக் என்பது சுமார் 125 கிலோ எடையாகும்) ஒட்டகத்தைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டில் பேரீச்சம்பழம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். வீட்டில் பேரீச்சம் பழம் இல்லை. வெளியே வந்து உம்மிடம் ஒரு வஸக் அஜ்வா பழத்துக்கு உமது ஒட்டகத்தை விலை பேசினேன். ஆனால் வீட்டில் பேரீச்சம் பழம் இல்லை என்று சொன்னார்கள். (எனவே உமது ஒட்டகத்தை எடுத்துக் கொள்ளும் என்பது இதன் கருத்து) அதற்கு கிராமவாசி இது என்ன மோசடியாக உள்ளதே என்று கூறினார். மக்கள் அவர் மீது கோபம் கொண்டு அல்லாஹ்வின் தூதர் மோசடி செய்வார்களா என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள்! உரிமையாளருக்கு விமர்சனம் செய்யும் உரிமை உள்ளது என்று கூறினார்கள்.

மீண்டும் வீட்டுக்குப் போய் மேலும் தேடினார்கள். வீட்டில் பேரீச்சம் பழம் இருக்கிறது என்று நம்பியே உம்மிடம் விலை பேசி வாங்கினேன். ஆனால் வீட்டில் இல்லை என்றார்கள்.(நபிகள் நாயகம் (ஸல்) ஒரு வஸக் பேரீச்சம் பழத்தை வீட்டில் வைத்து இருந்தால் மட்டுமே இப்படி விலை பேசியிருக்க முடியும். ஆனால் குடும்பத்தினர் அதை பயன்படுத்தி இருக்கலாம். அல்லது தர்மம் செய்து இருக்கலாம்.)

அப்போதும் கிராமவாசி இது என்ன மோசடி என்றார். அல்லாஹ் உன்னை அழிப்பானாக! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மோசடி செய்வார்களா என்று மக்கள் கொந்தளித்தனர். அவரை விட்டு விடுங்கள் உரிமையாளருக்கு விமர்சிக்கும் உரிமை உண்டு என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி புரிந்துணர்வு இல்லாதவராக இருந்ததால் ஒரு தோழரை அழைத்தார்கள். நீர் ஹகீமின் மகள் கவ்லாவிடம் சென்று உம்மிடம் ஒரு வஸக் அஜ்வா பேரீச்சம் பழம் இருந்தால் கடனாகத் தருவீராக! அல்லாஹ் நாடினால் நாம் திருப்பித் தருவோம் என்று நான் சொன்னதாக கூறுவீராக என்று சொல்லி அவரை அனுப்பினார்கள். அவர் திரும்ப வந்து தன்னிடம் பேரீச்சம் பழம் உள்ளதாகவும், யாரையாவது அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் என்று அப்பெண்மணி கூறியதாகத் தெரிவித்தார். இவரை அழைத்துச் சென்று இவருக்குக் கொடுக்க வேண்டியதை முழுமையாகக் கொடுப்பீராக என்று அந்த மனிதரிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவரும் அழைத்துச் சென்று நிறைவாக அவருக்குரியதை வழங்கினார். இதன் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் இருக்கும் போது அந்தக் கிராமவாசி வந்தார். ஜஸாகல்லாஹு கைரா (அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) நீங்கள் (பேசியபடி) அழகிய முறையிலும்  மன நிறைவடையும் வகையிலும் நிறைவேற்றி விட்டீர்கள் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனநிறைவடையும் வகையில் கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவர்களே கியாமத் நாளில் அல்லாஹ்விடத்தில் மேலானவர்கள் என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மது

நன்றி தெரிவிக்கும் போது ஜஸாகல்லாஹு கைரன் என்று கூறுவதற்கு மேற்கண்ட ஹதீஸ்கள் ஆதாரங்களாக உள்ளன.  பேச்சை முடிக்கும் போதும், எழுத்தை முடிக்கும் போதும் இதைக் கூற வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை.

ஜஸாகல்லாஹு கைரன் என்று உதவி பெற்றவர் கூறினால் அத்துடன் நன்றி செலுத்தும் கடமை முடிந்து விட்டது. ஜஸாகல்லாஹு கைரன் என்று உதவி பெற்றவர் கூறும் போது அதற்கு மறுமொழியாக

பாரக்கல்லாஹு ஃபீக்கும்

வஇய்யாக

வஜஸாக்கும்

அஹ்ஸனல்லாஹு இலைக

என்பன போன்ற சொற்களைக் கூறும் வழக்கம் இருக்கின்றது. இவாறு கூற வேண்டும் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை.

சில உதவிகள் ஒருவருக்கொருவர் செய்யும் உதவியாக இருக்கும். உதாரணமாக ஒரு கல்விக் கூடத்தில் ஒரு மாணவரைச் சேர்க்க நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள். நீங்கள் பரிந்துரைத்த மாணவரை அந்த நிறுவனம் சேர்த்துக் கொண்டால் அவர்கள் உங்களுக்கு உதவியுள்ளார்கள். மாணவர்கள சேரா விட்டால் கல்விக் கூடத்தை நடத்த முடியாது . எனவே மாணவரைச் சேர்த்து விட்டதன் மூலம் அந்த நிறுவனத்துக்கு நீங்கள் உதவியுள்ளீர்கள். இப்படி இரு தரப்பிலும் உதவி செய்தல் இருந்தால் இருவரும் ஜஸாகல்லாஹு கைரன் எனக் கூறலாம்.

السنن الكبرى للنسائي
8287 – أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا عَاصِمُ بْنُ سُوَيْدِ بْنِ عَامِرِ بْنِ زَيْدِ بْنِ جَارِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ الْأَشْهَلِيُّ النَّقِيبُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ كَانَ قَسَمَ طَعَامًا، فَذُكِرَ لَهُ أَهْلُ بَيْتٍ مِنْ بَنِي ظَفَرٍ مِنَ الْأَنْصَارِ فِيهِمْ حَاجَةٌ فَقَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُسَيْدُ تَرَكْتَنَا حَتَّى إِذَا ذَهَبَ مَا فِي أَيْدِينَا، فَإِذَا سَمِعْتَ بِشَيْءٍ قَدْ جَاءَنَا، فَاذْكُرْ لِي أَهْلَ ذَلِكَ الْبَيْتِ» قَالَ: فَجَاءَهُ بَعْدَ ذَلِكَ طَعَامٌ مِنْ خَيْبَرَ شَعِيرٌ وَتَمْرٌ قَالَ: «فَقَسَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، وَقَسَمَ فِي الْأَنْصَارِ فَأَجْزَلَ، وَقَسَمَ فِي أَهْلِ ذَلِكَ الْبَيْتِ» فَأَجْزَلَ فَقَالَ لَهُ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مُسْتَشْكِرًا: جَزَاكَ اللهُ أَيْ نَبِيَّ اللهِ أَطْيَبَ الْجَزَاءِ، أَوْ قَالَ: «خَيْرًا» فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنْتُمْ مَعْشَرَ الْأَنْصَارِ، فَجَزَاكُمُ اللهُ أَطْيَبَ الْجَزَاءِ» أَوْ قَالَ: «خَيْرًا، فَإِنَّكُمْ مَا عَلِمْتُ أَعِفَّةٌ صُبُرٌ، وَسَتَرَوْنَ بَعْدِي أَثَرَةً فِي الْأَمْرِ والْقَسْمِ، فَاصْبِرُوا حَتَّى تَلْقَوْنِي عَلَى الْحَوْضِ»

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை பங்கீடு செய்து முடித்த போது உஸைத் பின் ஹுலைர் (ரலி) வந்தார். அன்சாரிகளில் பனீ லுஃப்ர் கோத்திரத்தைச் சார்ந்த வீட்டாரைப் பற்றியும் அவர்களின் வறுமையைப் பற்றியும் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “உஸைதே! நம்முடைய கையில் இருந்தவை காலியாகும் வரை நீர் நம்மை விட்டுவிட்டீர். எனவே நம்மிடம் ஏதாவது பொருள் வந்ததாக நீர் செவியேற்றால் அந்த வீட்டாரைப் பற்றி என்னிடம் நினைவூட்டுவீராக” என்று கூறினார்கள்.

அதற்குப் பிறகு கைபரிலிருந்து கோதுமை, பேரீச்சம் பழம் போன்ற உணவுப் பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தது. அதனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் பங்கிட்டார்கள். அன்ஸாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். (உஸைத் ரலி பரிந்துரை செய்த) அந்த வீட்டாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் உஸைத் பின் ஹுலைர் (ரலி) அவர்கள் “ஜஸாக்கல்லாஹு ஹைரன் அய் நபியல்லாஹ்” (அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக) என்று கூறினார்கள்.

அதற்கு நபியவர்கள், “வஅன்த்தும் மஃஷரல் அன்ஸார் ஃப ஜஸாக்குமுல்லாஹு ஹைரன்” (அன்சாரிகளே! அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக!) நான் அறிந்தவரை (அன்சாரிகளாகிய) நீங்கள் சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு) ஆட்சியதிகாரத்திலும், பங்கீட்டிலும் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, கவ்ஸர் தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

தனது சமுதாய மக்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதவி செய்தற்காக உஸைத் (ரலி) அவர்கள் ஜஸாகல்லாஹு … எனக் கூறி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நன்றி செலுத்தினார்.

நெருக்கடியான காலகட்டத்தில் இஸ்லாத்துக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உதவியாக இருந்த அன்ஸார்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமைப்பட்டு இருந்தார்கள். பொருளாதாரம் வந்த போது அன்ஸார்களுக்கு வாரி வழங்கியதன் மூலம் அந்த நன்றிக்கடனை நிறைவேற்றினார்கள். இந்த நன்றிக்கடன் நிறைவேற அன்சார்கள் அந்த உதவியயைப் பெற்றுக் கொண்டது தான் காரணம். அந்த உதவிக்கு நன்றி செலுத்தும் பொருட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஜஸாகல்லாஹு.. எனக் கூறினார்கள்.

ஒருவர் உங்களுக்குச் செய்த உதவி மூலம் நீங்களும் ஒரு வகையில் அவருக்கு உதவினீர்கள் என்ற நிலை இருந்தால் இருவரும் ஜஸாகல்லாஹ் என்று கூறலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் உதவி பெற்றவர் மட்டும் ஜஸாக்கல்லாஹு கூற வேண்டும் உதவி செய்தவர் அதற்கு எந்த ம்றுமொழியும் கூற வேண்டியதைலை.