முஸ்லிமல்லாதவருடன் எவ்வாறு பழகுவது?

கேள்வி : முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்களின் தொடர்பு எந்தெந்த வகையில் அமைய வேண்டும்?

பதில் : முஸ்லிமல்லாத மக்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது என்பதில் அதிகமான முஸ்லிம்களுக்கு தெளிவான பார்வை இல்லை.

முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் அறவே வெறுத்து அவர்களை அடியோடு ஒரு சாரார் புறக்கணித்து ஒதுக்கிவிடுகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இஸ்லாத்தைப் புரிந்து ஏற்க வேண்டுமானால் அவர்களுடன் நெருங்கிப் பழகுவதன் மூலமே அது சாத்தியமாகும். இதை உணராமல் முஸ்லிமல்லாத மக்களை அறவே ஒதுக்குவதும், அவர்களிடமிருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்வதும் முற்றிலும் தவறாகும்.

மற்றொரு சாரார் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகின்றனர். இஸ்லாம் தடை செய்துள்ள காரியங்களை அவர்கள் செய்யும் போது அதில் பங்கெடுத்துக் கொண்டு தாமும் அது போல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். அவர்கள் செய்யும் பலதெய்வ வழிபாட்டில் கூட கலந்து கொள்ளும் அளவுக்கு நடந்து தம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றிக் கொள்கின்றனர். இதுவும் தவறாகும்.

இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகளில் எதையும் விட்டுக் கொடுக்காமலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் உரிமைகளையும் பேணி நடப்பதுதான் அவர்களுடன் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய சரியான முறையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) மதினாவில் வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களின் முதன்மையான எதிரிகளாக யூதர்கள் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கொலை செய்யவும் அவர்கள் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்பட்டனர். அப்படி இருந்த யூதர்கள் அனைவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளாகக் கருதி நடந்து கொள்ளவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்யும் பொறுப்பை சில இளைஞர்கள் செய்து வந்தனர். அவர்களில் யூத இளைஞர் ஒருவரும் இருந்தார். (ஆதாரம் புகாரி 1356)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடுவரை செல்லவும் பணிவிடை செய்யவும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அவரால் நபிகள் நாயகத்தின் உயிருக்கே உலை வைக்க முடியும். அப்படி இருந்தும் எதிரி சமுதாயத்திலும் நல்லவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவரைத் தனது அந்தரங்க ஊழியராகச் சேர்த்துக் கொண்டார்கள். பின்னர் அந்த இளைஞர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது தனி விஷயம்.

ஒரு யூதப் பெண் சமைத்த ஆட்டு இறைச்சி நபிகள் நாயகத்திற்கு உண்ணக் கொடுத்தார். ஆனால் அதில் அவர் விஷம் கலந்து வைத்திருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்று எண்ணாமல் அந்த இறைச்சியில் ஒரு துண்டைச் சாப்பிட்டார்கள். அதில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு கொண்ட பின் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க நபியின் தோழர்கள் வற்புறுத்திய போது அதை அவர்கள் ஏற்கவில்லை. அப் பெண்ணை மன்னித்தார்கள்.

(ஆதாரம் புகாரி 2617)

எதிரி சமுதாயத்தவரும் நபிகள் நாயகத்திடம் அன்பளிப்புகளை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் இருந்ததையும் அதை நபிகள் நாயகம் (ஸல்) அங்கீகாரம் செய்ததையும் இதில் இருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொந்த ஊரில் இருந்து விரட்டப்பட்டு மதினாவுக்கு அகதியாக வந்தாலும் நாளடைவில் அவர்களே அரபு நாட்டின் அதிபராக வளர்ந்தார்கள்.

இப்படி இருந்தும் அவர்கள் தமது தேவைக்காக தமது கவசத்தை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்து கோதுமையைப் பெற்றார்கள்.

(ஆதாரம் புகாரி 1926)

நாட்டின் அதிபர் அடைமானம் வைப்பவராகவும் சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அடைமானம் பெறுபவராகவும் இருந்துள்ளனர். இதில் இருந்த மற்ற மக்களின் உரிமைகள் எந்த அளவுக்கு நபிகளால் மதிக்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். உடனிருந்த தோழர்கள் இது யூதரின் பிரேதம் என்று சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் உங்களை ஒரு பிரேதம் கடந்து சென்றால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள் என்று கூறினார்கள்.

(ஆதாரம் புகாரி 1228)

நபிகள் நாயகம் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

(ஆதாரம் புகாரி 2103)

எந்தச் சமுதாயம் கொலை செய்வதற்கு திட்டமிட்டுவிரட்டி விடுகிறதோ அதே சமுதாயத்தைச் சேர்ந்த நம்பகமானவரிடம் வழி காட்டும் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.

நபிகள் நாயகம் வாழ்க்கையில் இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. ஒருவர் முஸ்லிமாக இல்லை என்ற காரணத்துக்காக உலக விஷயங்களில் அவரை வெறுத்து ஒதுக்குவது நபிகள் நாயகம் காட்டித் தராத வழியாகும்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஜகாத் ஒரு கடமையாகும். செல்வந்தர்களிடம் இருந்து திரட்டப்படும் இந்த நிதியை எட்டு வகையான மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அவர்களில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்படுவதற்காக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதும் சேர்க்கப்பட்டுள்ளது.

(திருக்குர்ஆன் 9:60 பார்க்க.)

ஜகாத் என்ற நிதியைக் கூட முஸ்லிம் அல்லாதவருக்கு கொடுக்கலாம் என்றால் இஸ்லாத்தின் தாராளத் தன்மையை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

ஆயினும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் இப்படி நட்புடன் பழகுவது என்பது அனைவருக்கும் பொதுவானதல்ல. முஸ்லிம் அல்லாத மக்களில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஒழிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டவர்களும் உள்ளனர். இவர்கள் மிக மிக குறைவு என்றாலும் இத்தகையவர்களும் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

நம்மை ஒழிப்பதே ஒரே லட்சியம் என்று நடப்பவர்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்துப் பார்த்து இவர்கள் விஷயத்தில் மட்டும் அலட்சியப்படுத்தி ஒதுக்குமாறு இஸ்லாம் வழி காட்டுகிறது.

தன்னை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட எவருடனும் யாரும் பழக மாட்டார்கள் என்பது இயல்பான ஒன்றுதான். இதைக் குறை கூற முடியாது. இதைத்தான் இஸ்லாமும் கூறுகிறது.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர் உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்

(திருக்குர்ஆன் 60:8,9)

சங்பரிவாரம் போன்றவர்களுடன் நாம் எந்த ஒட்டும் உறவும் வைக்க முடியாது. அது நம்மை நாமே அழிப்பதாகவும் தான் அமையும் இத்தகைய போக்கு உள்ளவர்கள் இந்துக்களில் கால் சதவிதம் கூட இருக்க மாட்டார்கள். இவர்களைத் தவிர மற்ற மக்கள் அனைவரிடமும் நமது மார்க்கத்தை விட்டுக் கொடுக்காத வகையில் பழகுவதும் உதவிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான்.

உணர்வு 15:45

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...