105. வேதத்துடன் ஏடுகளும் வழங்கப்பட்ட இறைத் தூதர்கள்

இறைத்தூதர்கள் மூன்று விஷயங்களைக் கொண்டு வந்ததாக இவ்வசனங்கள் (3:184, 16:44, 35:25) கூறுகின்றன.

ஏ தம்மை இறைத்தூதர் என நிரூபிக்கத் தேவையான தெளிவான சான்றுகள்! (அதாவது அற்புதங்கள்)

ஏ ஏடுகள்!

ஏ ஒளி வீசும் வேதம்!

ஆகிய மூன்றையும் இறைத் தூதர்கள் கொண்டு வந்துள்ளனர்.

இறைத்தூதர்கள் வேதத்தை மட்டுமின்றி ஏடுகளையும் கொண்டு வந்தனர் என்று கூறப்படுவது ஏன் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

வேதத்தை மட்டுமின்றி வேதத்துக்கு விளக்கமான ஏடுகளையும் அவர்கள் கொண்டு வந்தனர் என்பதைத் தவிர இதற்கு வேறு கருத்து இருக்க முடியாது. திருக்குர்ஆன் மட்டுமின்றி அதற்கான விளக்கமும் இறைவனால் வழங்கப்பட்டதே என்பதற்கான சான்றுகளில் இவ்வசனமும் ஒன்றாகும்.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!