111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு இரண்டில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெரும்பாலும் இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்து விட முடியும் என்றாலும் சில நேரங்களில் இவ்வாறு பங்கீடு செய்ய முடியாத நிலை ஏற்படும்.

சொத்தை விட பங்கின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய பங்கில் குறைவு ஏற்படலாம். பங்குகளை விட சொத்தின் அளவு அதிகமாக இருந்தால் அப்போது கிடைக்க வேண்டிய பங்குகளை விட ஒவ்வொருவருக்கும் அதிகமாகக் கிடைக்கும் நிலை ஏற்படக் கூடும்.

இதைச் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு ரொட்டி இருக்கின்றது. அதை

யூஸுஃப் என்பவருக்கு நான்கில் ஒன்று,

உமர் என்பவருக்கு எட்டில் ஒன்று,

காலித் என்பவருக்கு எட்டில் மூன்று

அப்பாஸ் என்பவருக்கு இரண்டில் ஒன்று

என கொடுக்கச் சொல்கிறோம். நாம் கூறியபடி அனைவருக்கும் கொடுக்க முடியுமா?

எட்டில் ஒன்று, எட்டில் இரண்டு எனப் பிரிப்பதாக இருந்தால் ரொட்டியை எட்டு துண்டாக ஆக்க வேண்டும்.

அதில் நான்கில் ஒன்று என்பது இரண்டு ரொட்டித் துண்டுகளாகும்.

அதில் எட்டில் ஒன்று என்பது ஒரு ரொட்டித் துண்டாகும்.

அதில் எட்டில் மூன்று என்பது மூன்று ரொட்டித் துண்டுகளாகும்.

அதில் இரண்டில் ஒன்று என்பது நான்கு ரொட்டித் துண்டுகளாகும்.

ஆக மொத்தம் கூட்டினால் பத்து துண்டுகள் ஆகின்றன. இருப்பதோ எட்டுத் துண்டுகள் தான்.

மேற்கண்ட நான்கு நபர்களுக்கும் மேற்குறிப்பிட்ட கணக்குப்படி பங்கிட முடியாத நிலை ஏற்படுகிறது.

அவரவருக்குக் கிடைத்த துண்டுகளின் எண்ணிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு ரொட்டியை எட்டு துண்டுகளாக ஆக்குவதற்குப் பதிலாக, பத்து துண்டுகளாக ஆக்கினால் எல்லோருக்கும் சமமான அளவில் பாதிப்பு ஏற்படும். அதாவது ரொட்டியை எட்டுத் துண்டுகளாக ஆக்காமல் பத்து துண்டுகளாக ஆக்கி யூஸுஃபுக்கு இரண்டு, உமருக்கு ஒன்று, காலிதுக்கு மூன்று, அப்பாஸுக்கு நான்கு எனப் பிரித்தால் மீதமில்லாமல் ரொட்டியை நால்வருக்கும் பிரித்துக் கொடுக்க முடியும்.

ஆனால் யூஸுஃபுக்கு எட்டுபாகம் வைத்து அதில் இரண்டு கிடைப்பதற்குப் பதிலாக பத்துபாகம் வைத்து அதில் இரண்டு கிடைக்கிறது. இருபது சதவிகிதம் இவருக்குக் குறைகிறது. இது போல் ஒவ்வொருவருக்கும் இருபது சதவிகிதம் என்ற அளவில் குறைவாகக் கிடைக்கிறது.

இப்படி ஒவ்வொருவரின் பங்கும் சமஅளவில் குறைக்கப்படுகின்றது. இதனால் ஒருவர் பாதிக்கப்பட்டு மற்றவர் பாதிக்கப்படாத நிலை ஏற்படாது.

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்திலும் சில நேரங்களில் இவ்வாறு பிரிக்க முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு ஏற்படும் போது சாத்தியமில்லாத ஒன்றை அல்லாஹ் சட்டமாக்கி விட்டான் என்று விமர்சிக்க வாய்ப்பு உண்டு. அல்லாஹ் சொன்னபடி பிரித்துக் காட்டுங்கள் என்று கேள்வி எழுப்பவும் வாய்ப்பு உண்டு.

இந்தச் சட்டத்தை வழங்கிய இறைவனுக்கு அனைத்தும் தெரியும் என்பதால் இது போல் விமர்சனங்கள் வரமுடியாத வகையில் இவ்வசனத்தில் உரிய சொற்களைச் சேர்த்துச் சொல்கிறான். இந்தப் பங்கீடுகள் பாதிப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இவ்வசனத்தில் சேர்த்து விட்டான்.

சில நேரங்களில் இவ்வாறு பிரித்துக் கொடுக்க முடியாமல் போகும் என்றும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பாதிப்பு இல்லாத வகையில் பிரித்துக் கொள்ள வேண்டும் எனவும் யாரும் விமர்சிக்க இடம் கொடுக்காமல் அவனே முன்கூட்டி சொல்லி விடுகிறான்.

ஒரு பெண் இறக்கும் போது,

கணவன்

இரண்டு பெண் குழந்தைகள்

தாய்

தந்தை

ஆகியோரை விட்டுச் சென்றால்

கணவனுக்கு நான்கில் ஒன்று 1/4

இரு பெண் குழந்தைகளுக்கு மூன்றில் இரண்டு 2/3

தாய்க்கு ஆறில் ஒன்று 1/6

தந்தைக்கு ஆறில் ஒன்று 1/6

எனப் பங்கிட வேண்டும் என்பது திருக்குர்ஆன் கூறும் சட்டம்.

மூன்றில் ஒரு பங்கும், நான்கில் ஒரு பங்கும் கொடுக்க வேண்டுமானால் இரண்டுக்கும் பொதுவான 12 பங்குகளாக மொத்தச் சொத்தைப் பிரித்தால் தான் இது சாத்தியமாகும்.

பன்னிரண்டு பங்கு வைத்து அதில் நான்கில் ஒரு பங்கு (கணவனுக்கு) – 3

பன்னிரண்டு பங்கில் மூன்றில் இரு பங்கு (இரு மகள்களுக்கு) – 8

பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தந்தைக்கு) – 2

பன்னிரண்டு பங்கில் ஆறில் ஒரு பங்கு (தாய்க்கு) – 2

இவ்வாறு பங்கீடு செய்தால் 8+3+2+2 = 15 ஆகும்.

பன்னிரண்டு பங்கு வைத்து மேற்கண்டவாறு பிரித்தால் மொத்தம் 15 பங்குகள் தேவை என்பதால் மூன்று பங்குகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே மொத்த சொத்தை 12க்கு பதிலாக 15 பங்குகளாக ஆக்கினால் பற்றாக்குறை இல்லாமல் அனைவருக்கும் கொடுக்க முடியும்.

பன்னிரண்டு பங்கில் இந்தத் தொகையைக் கொடுத்தால் தான் அவரவருக்குரிய சதவிகிதம் கிடைக்கும். ஆனால் இப்போது 15 பங்கிலிருந்து தான் மேற்கண்ட பங்கைக் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கொடுக்கும் போது அல்லாஹ் குறிப்பிட்டுள்ள பாகம் யாருக்கும் கிடைக்காது. 12ல் 3 கொடுத்தால் தான் அது கால் பாகமாக ஆகும். 15ல் 3 கொடுத்தால் அது கால் பாகமாக ஆகாது.

இப்படியே ஒவ்வொருவரின் பங்கும் குறைகிறது. ஒருவர் மட்டும் 12ல் 3 தான் எனக்கு வேண்டும் என்று அடம் பிடித்தால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் சிலருக்கு மட்டும், உதாரணமாக கணவனுக்கு மட்டும் 12 பங்கில் 3 கொடுத்து விட்டு மற்றவர்களுக்குக் குறைத்தால் அது மற்றவர்களுக்குக் கேடு தரும்.

15 பங்கிலிருந்து பங்கிட்டுக் கொடுத்தால் நால்வருக்கும் அவரவர் சதவிகிதத்திற்கேற்ப சிறிது குறையும். ஒருவருக்குக் குறைந்து மற்றவருக்கு நிறைவாகக் கிடைக்கும் நிலை ஏற்படாது.

இவ்வாறு அவரவர் சதவிகிதத்திற் கேற்ப குறைத்துப் பங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் “பாதிப்பு ஏற்படாத வகையில்” என்ற சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இழப்பை அனைவரும் சமமான சதவிகிதத்தில் பிரித்துக் கொள்ளும் போது ஒருவருக்கு மட்டும் பாதிப்பு வராது. இது போன்ற நிலைமைகளுக்காகவே “யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில்” என அல்லாஹ் கூறுகிறான்.

இவ்வளவு நுணுக்கமாக தேவையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது இது இறைவனின் வார்த்தை தான் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...