115. விபச்சாரத்திற்கான தண்டனை
ஆண்களோ, பெண்களோ விபச் சாரத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு நூறு கசையடிகளைத் தண்டனையாக வழங்க வேண்டும் என்று இவ்வசனம் (24:2) கூறுகிறது.
ஆனால் ஹதீஸ்களில் விபச்சாரத்தின் தண்டனை இரு வகைகளாக சொல்லப்பட்டுள்ளது.
திருமணம் ஆனவர்கள் விபச்சாரம் செய்தால் அவருக்கு மரண தண்டனை எனவும், திருமணம் ஆகாதவர்கள் விபச்சாரம் செய்தால் நூறு கசையடிகள் எனவும் ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
இவ்வசனத்தில் சொல்லப்படும் சட்டம் திருமணம் ஆகாதவர்கள் குறித்த ச்ட்டமாகும் என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர்.
மிகச் சில அறிஞர்கள் இதில் முரண்படுகின்றனர். திருமணம் ஆனவர்களாக இருந்தாலும், திருமணம் ஆகாதவர்களாக இருந்தாலும் நூறு கசையடிகள் மட்டுமே தண்டனை என்று கூறுகின்றனர்.
விபச்சாரத்துக்கு மரண தண்டனை என்ற சட்டம் முன்னர் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது எனவும் இவர்கள் கூறுகின்றனர்.
இது விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டிய விஷயமாகும்.