116. படிப்படியாக ஒழிக்கப்பட்ட போதைப் பழக்கம்
எப்போதும் குடி போதையில் இருந்த அன்றைய மக்களுக்கு, மது அருந்துதல் முதலில் தடுக்கப்படாமல் இருந்ததாக 16:67 வசனம் கூறுகிறது.
பின்னர் படிப்படியாக இது குறித்த தடைகள் இறங்கின.
போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற கட்டளை ஆரம்பத்தில் பிறப்பிக்கப்பட்டதாக 4:43 வசனம் கூறுகிறது.
தொழுகையின் போது போதையாக இருக்கக் கூடாது என்றால் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு முன் குடிப்பதை நிறுத்த வேண்டும். ஐந்து வேளைத் தொழுகையின் போதும் இவ்வாறு நிறுத்துவதால் குடிப்பழக்கம் பெருமளவு குறைந்தது.
பின்னர் குடிக்காமல் இருப்பதே நல்லது என்று 2:219 வசனத்தில் அறிவுரை கூறப்பட்டது.
அதன் பின்னர் மது அருந்துவது முழுமையாகத் தடை செய்யப்பட்டதாக 5:90-91 வசனங்கள் கூறுகின்றன.