இயேசு வானுலகம் போவதற்கு முன் மக்களிடம் ஒரு முன்னறிவிப்பு செய்தார். நான் போய்விட்டு தந்தையின் மாட்சியோடு திரும்ப வருவேன். அப்படி நான் வருவதைக் காணாமல் இங்கே இருப்பவர்களில் சிலர் சாகமாட்டார் என்று இயேசு முன்னறிவிப்பு செய்தார்.
27 மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.
28 நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இங்கே இருப்பவருள் சிலர் மானிட மகனது ஆட்சி வருவதைக் காண்பதற்கு முன் சாகமாட்டார்” என்றார்.
மத்தேயு 16:27 , 28
மேலே ஏறிச் என்ற இயேசு இன்னும் வரவில்லை. இனிமேல் வருவார் என்று தான் கிறித்தவர்களும் நம்புகிறார்கள். அவர் வரும் வரை அன்று இருந்த சிலர் உயிருடன் இருபார்கள் என்றால் இன்று 2020 வய்துடையவர் இஸ்ரேலில் இருக்க வேண்டும். சிலர் என்பது ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிக்கும். அவ்வளவு வேண்டாம் 2020 வயதுடைய ஒரே ஒருவர் உயிருடன் உள்ளார் என்று காட்டமுடியுமா?
முடியவே முடியாது என்றால் இயேசு பொய் சொன்னார் என்பது கிறித்தவர்கள் நம்பிக்கையா? அல்லது இயேசுவின் பெயரால் அம்த்தேயு இட்டுக்கட்டி விட்டாரா?