247. இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்பு கோரலாமா?

முஸ்லிம்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை இவ்வசனத்தில் (9:113)அல்லாஹ் விளக்குகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பெற்றோரும், உறவினரும், முஸ்லிம்களின் பெற்றோரும், உறவினரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போராக இருந்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரக் கூடாது என்பது தான் அந்தக் கொள்கை விளக்கம்.

எனக்கு இணை கற்பித்தவர்களை நான் மன்னிக்க மாட்டேன் என்று அல்லாஹ் தெளிவாக அறிவித்த பின்னர் அவர்களுக்காக பாவ மன்னிப்பு தேடுவது அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாக ஆகும் என்பதால் இவ்வாறு தடை விதிக்கப்படுகிறது.

பொதுவாக தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று கருதும் மனிதன், தனக்கு வேண்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் செய்யும் தவறுகளை மன்னிப்பவனாக இருக்கிறான்.

ஆனால் அல்லாஹ்வின் தன்மை இதற்கு நேர் எதிரானதாகும். அவனுக்கு இணையாக மற்றவர்களைக் கருதும் போது தனது இடத்தை மற்றவர்களுக்குக் கொடுத்ததால் அல்லாஹ் கோபப்படுகிறான். நபிகள் நாயகமும், முஸ்லிம்களும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக இருந்தாலும் தனது கண்ணியம் என்று வரும் போது அதையெல்லாம் அல்லாஹ் கவனிக்க மாட்டான். அவனுக்கு இணை கற்பித்து அவனது கண்ணியத்துடன் விளையாடியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அல்லாஹ் பொருட்படுத்த மாட்டான். அவர்களை மன்னிக்க மாட்டான் என்பது ஒரு புறமிருக்க அப்படி மன்னிப்பு கேட்பதும் குற்றம் என்று சொல்கிறான்.

இவ்வசனம் இக்கொள்கையைத் தெளிவாக விளக்குகிறது.

முஸ்லிமல்லாதவர்களுக்கு நேர்வழி காட்டுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யலாம். அவர்களுக்கு இவ்வுலகச் செல்வங்களைக் கேட்டு துஆ செய்யலாம். அவர்களது உடல் ஆரோக்கியத்துக்காக துஆச் செய்யலாம். இதையெல்லாம் அனுமதிக்கும் இறைவன் தனக்கு இணை கற்பிப்பவர்களுக்காக மன்னிப்பு கோருவதை அனுமதிக்க மறுக்கிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்குக் கூட இதில் விதிவிலக்கு இல்லை என்றும் இவ்வசனம் கூறுகிறது.

இவ்வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை அறிந்து கொண்டால் இதில் கூடுதல் தெளிவைப் பெறலாம்.

அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அப்போது அபூஜஹ்ல் அவரருகே இருந்தான். என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ்’ வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை’ என்று சொல்லுங்கள். இந்தச் சொல்லை வைத்து உங்களுக்காக அல்லாஹ்விடம் நான் வாதாடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொன்னார்கள். அப்போது அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும், அபூதாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா புறக்கணிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டனர். அவ்விருவரும் இவ்வாறே தொடர்ந்து அவரிடம் பேச இறுதியில் அவர், அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் தான் என்று அவர்களிடம் சொன்னார். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எனக்குத் தடைவிதிக்கப்படும் வரை நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவேன் என்று சொன்னார்கள். அப்போது தான், இணைவைப்பவர்கள் நரகவாசிகள் தாம் என்பது தெளிவாகிவிட்ட பின்பு அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு, அவர்கள் உறவினர்களாயிருந்தாலும் கூட இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமையில்லை என்னும் (9:113) திருக்குர்ஆன் வசனமும், (நபியே!) நீங்கள் விரும்பியவரை உங்களால் நேர்வழியில் செலுத்தி விட முடியாது என்னும் (28:56) திருக்குர்ஆன் வசனமும் அருளப்பட்டன.

அறிவிப்பவர் : முஸய்யப் பின் ஹஸ்ன் பின் அபீ வஹ்ப் (ரலி)

நூல் : புகாரீ : 3884, 4675

இஸ்லாமை ஏற்காவிட்டாலும் இஸ்லாமுக்கு உறுதுணையாக இருந்த அபூதாலிபுக்காக நான் மன்னிப்புத் தேடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மறுத்து இவ்வசனம் அருளப்பட்டது.

அல்லாஹ்வின் விஷயத்தில் வரம்பு மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்களை இறைத்தூதர்களும் காப்பாற்ற முடியாது என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக அறிவிக்கின்றது.

இது போல் தமது தாயாருக்காக பாவமன்னிப்பு கோர நபியவர்கள் அல்லாஹ்விடம் அனுமதி கோரினார்கள். அதற்கும் அல்லாஹ் அனுமதி மறுத்துவிட்டான் என்பதைப் பின் வரும் ஹதீஸில் இருந்து அறியலாம்.

‘என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1621, 1622

நபிகள் நாயகம் (ஸல்) மட்டுமின்றி அல்லாஹ்வின் நண்பர் என்று அல்லாஹ்வே பாராட்டிய இப்ராஹீம் நபியவர்களும் தமது தந்தைக்காக பாவமன்னிப்பு தேடியதாகவும், பாவமன்னிப்பு தேட அனுமதி கேட்டதாகவும் 14:41, 19:47, 26:86 வசனங்களில் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

இதற்காக அல்லாஹ் இப்ராஹீம் நபியைக் கண்டித்த பின் அதிலிருந்து அவர்கள் விலகிக் கொண்டார்கள் என்று 9:114 வசனம் கூறுகிறது.

அனைத்து விஷயங்களிலும் இப்ராஹீம் நபியிடம் முஸ்லிம்களுக்கு முன்மாதிரி உண்டு என்று கூறிய இறைவன் அவர்கள் தமது தந்தைக்கு பாவமன்னிப்பு தேடியதில் முன்மாதிரி இல்லை என்று 60:4 வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான்.

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...