263. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விண்வெளிப் பயணம்

ஒரு இரவில், மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து, ஜெருஸலமில் உள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் (17:1) அல்லாஹ் கூறுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை மேலும் விளக்கமாக பைத்துல் முகத்தஸில் இருந்து விண்ணுலகத்துக்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், ஒவ்வொரு வானத்தையும் கடந்து இறைவனின் ஏராளமான அத்தாட்சிகளைப் பார்த்ததாகவும், அல்லாஹ்வை நேரில் பார்க்காவிட்டாலும் அல்லாஹ்விடம் உரையாடியதாகவும், அப்போது ஐந்து வேளைத் தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியதாகவும் விளக்கியுள்ளனர்.

இது குறித்து முழுமையாக அறிய புகாரீ 349, 3887 ஆகிய ஹதீஸ்களைப் பார்க்கலாம்.

ஒரு இரவில் ஏழு வானங்களையும் கடந்து சென்று விட்டு பல்வேறு அத்தாட்சிகளையும் பார்த்து விட்டு திரும்ப இயலுமா?

அப்படியானால் எவ்வளவு வேகத்தில் பயணம் செய்திருக்க முடியும்?

அவ்வளவு வேகத்தில் பயணம் செய்வதை மனிதனின் உடல் தாங்குமா?

என்பன போன்ற கேள்விகள் இதில் எழுப்பப்படலாம்.

இதில் எதுவுமே மனிதர்களுக்குச் சாத்தியமாகாது என்பது உண்மை தான். இப்பயணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக மேற்கொண்டார்கள் என்றால் நிச்சயமாக இது சாத்தியமில்லை தான்.

இப்பயணம் படைத்த இறைவனால் நிகழ்த்தப்பட்டதாகும். எதை நாடுகிறானோ அதைச் செய்ய வல்லவன் தான் இறைவன். இது தான் இயலும். இந்த அளவுக்குத் தான் இயலும். இவை இயலாது என்ற நிலையில் இருப்பவன் இறைவனாக இருக்க முடியாது.

விண்வெளிப் பயணம் பற்றி பேசும் இவ்வசனத்தில் தனது அடிமையான முஹம்மது நபியை ஒரு இரவில் அழைத்துச் சென்றவன் பலவீனங்களுக்கு அப்பாற்பட்ட தூயவன் என்று கூறப்படுகிறது.

தனக்கு எல்லாம் இயலும் என்பதைச் சொல்வதற்காகவே இதைப் பற்றி அல்லாஹ் பேசுகிறான் என்பதை இந்த வாக்கியத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். “இதைச் செய்தவன் இறைவனாகிய நான் தான்” என்று கூறி இந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

இறைவனிடமிருந்து ஒரு விநாடி நேரத்துக்குள் வானவர் ஜிப்ரீல் இறைவனது கட்டளையைக் கொண்டு வருகிறார். இதை நாம் நம்புகிறோம். அங்கிருந்து இங்கே ஒரு விநாடிக்குள் வானவர் வருவதற்குப் பதிலாக இங்கிருப்பவர் வானுலகம் அழைத்துச் செல்லப்படுகிறார். இரண்டுக்கும் அடிப்படை ஒன்று தான்.

வானவர் என்பதால் அவர் ஒளிவேகத்திலும், ஒளியை மிஞ்சும் வேகத்திலும் செல்ல முடியும். ஆனால் முஹம்மது நபி வானவர் அல்லவே? அவர் மனிதர் தானே? மனிதனுக்கு இது இயலுமா என்று சந்தேகம் வந்தால் மிஅராஜ் ஹதீஸில் இதற்கான விடை அடங்கியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வானவர் அழைத்துச் செல்ல வந்த போது புராக் எனும் வாகனம் கொண்டு வரப்பட்டதாக புகாரீ 3887வது ஹதீஸிலும், இன்னும் பல ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

அதன் அளவைப் பற்றிக் கூறும் போது குதிரையை விட சற்று சிறியதாகவும், கோவேறுக் கழுதையை விட சற்று பெரிதாகவும் இருந்தது என்றும், அது கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஒரு அடியை வைக்கும் எனவும் அந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒரு குதிரை அளவுக்கு உள்ள வாகனத்தினால் அதிகபட்சம் அரை மீட்டர் அளவுக்குத் தான் அடியெடுத்து வைக்க முடியும். கண்ணுக்கு எட்டிய தூரம் அடி எடுத்து வைக்கும் என்றால் இது காலடியைக் கூறவில்லை. அதன் பறக்கும் சக்தியைத் தான் கூறுகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு அடியை எடுத்து வைக்கும் என்றால் ஒளிவேகத்தில் பயணம் என்று பொருள்.

மின் ஆற்றல் மூலம் வேகமாகச் செல்லும் வாகனத்தை மனிதனே உருவாக்க முடிகிறது என்றால் அதை மிஞ்சும் சக்தி வாய்ந்த அதிவேகத்தில் செல்லும் வாகனத்தை உருவாக்குவது இறைவனுக்கு எளிதானது தான். இது போன்ற வாகனம் இல்லாமலே இறைவனால் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்ல இயலும் என்றாலும் நாம் எளிதாக நம்பி ஏற்றுக் கொள்ளும் ஏற்பாடுகளையும் செய்து இறைவன் அருள் புரிந்துள்ளான்.

புராக் என்ற சொல்லுக்கு மின்னல் என்பது பொருள். இப்பெயரும் ஒளிவேகத்தில் செல்லும் வாகனம் என்பதை உறுதி செய்கிறது.

ஒளி வேகத்தில் பயணம் செய்தால் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று வருவது சாத்தியமானது தான். அந்த வேகத்தில் செல்லும் வாகனம் மனிதனால் கண்டுபிடிக்கப்படாததால் தான் இது சாத்தியமில்லாததாகத் தெரிகின்றது.

வேகமாகச் செல்லும் வாகனம் என்றாலும் அந்த வேகத்தில் மனிதன் பயணித்தால் இதயம் வெடித்துச் சிதறிவிடுமே என்ற சந்தேகம் அடுத்து வரலாம்.

விண்வெளியில் பயணம் செய்பவனின் இதயம் இறுக்கமடைந்து விடும் என்பது உண்மை. இதைத் திருக்குர்ஆனே தெளிவாகச் சொல்லியும் இருக்கிறது.

(இது குறித்து அறிய 6:125வது வசனத்தையும் 172வது குறிப்பையும் காண்க!)

இறைவன் நாடினால் இதயம் வெடித்துச் சிதறாத வகையில் அழைத்துச் செல்ல முடியும் என்றாலும் மனிதர்கள் நம்புவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு விண்வெளிப் பயணத்துக்கு அழைத்துச் செல்லும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இதயத்தைப் பிளந்து சில மாற்றங்களை வானவர்கள் மூலம் அல்லாஹ் செய்தான்.

இது புகாரீ 349, 3207 ஆகிய ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

வேகமாகப் பயணம் செல்லும் போது பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பு ஏற்பாடும் இதில் அடங்கி இருக்கலாம்.

அதாவது விரைவான பயணத்தை மேற்கொள்ளும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாதிக்காத வகையில் அவர்களின் இதயத்தில் உரிய ஏற்படுகளை இறைவன் செய்து விட்டதால் அந்த வேகத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது.

அல்லாஹ்வின் வல்லமையைப் புரிந்து அவனை நம்பும் மக்களுக்கு இது சாதாரணமானது தான்.

அடுத்து வழிகெட்ட ஒரு கூட்டத்தினர் மிஅராஜை மறுக்கின்றனர். அவர்களின் மறுப்பு சரியானது தானா என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்காவில் இருந்து ஜெருஸலம் வரை அழைத்துச் சென்றது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அங்கிருந்து விண்வெளிக்கு அழைத்துச் சென்றதாக திருக்குர்ஆனில் கூறப்படவில்லை. எனவே ஜெருஸலம் வரை சென்றதை மட்டும் தான் நாம் நம்ப வேண்டும் என்பது தான் அவர்களின் வாதம்.

விண்வெளிப் பயணம் அறிவுக்கு எட்டவில்லை என்பதற்காக இவர்கள் மறுப்பார்களானால் மக்காவில் இருந்து ஜெருஸலம் சென்றதையும் அவர்கள் மறுக்க வேண்டும். அன்றைய காலத்தில் மனிதப் பார்வையில் அதுவும் சாத்தியமற்றது தான்.

திருக்குர்ஆனில் சொல்லப்பட்டதைத் தான் நம்புவோம்; ஹதீஸில் சொல்லப்பட்டதை நம்ப மாட்டோம் என்பதற்காக அவர்கள் மறுத்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களும் வஹீ தான் என்பதை 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 164, 244, 255, 256, 258, 267, 318, 329, 350, 352, 430 ஆகிய குறிப்புகளை வாசித்து அறிந்து கொள்ளட்டும்.

மேலும் விண்ணுலகப் பயணம் பற்றி திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டு உள்ளதை 315, 267, 362 ஆகிய குறிப்புகளில் விளக்கியுள்ளோம்.

ஆயிஷா ரலி திருமணம் வஹியின் அடிப்படையிலா ? சமுதாய வழக்கப்படியா

கேள்வி: நீங்கள் ஏராளமான பயான்களில் கூறி வருகிறீர்கள்: ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஆயிஷா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறு வயதில் திருமணம் செய்ததற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் மார்க்கம் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதாலும், ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...