291. தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடலாமா?

தூய்மையானவர்களைத் தவிர யாரும் இதைத் தொட மாட்டார்கள் என இவ்வசனத்தில் (56:79) கூறப்படுகிறது.

இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு தூய்மையில்லாத யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

உளூ எனும் தூய்மை இல்லாதவர்களும், குளிப்பு கடமையானவர்களும், மாதவிடாயுள்ள பெண்களும், இஸ்லாமை ஏற்காதவர்களும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று இந்த வசனத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் கூறிவருகின்றனர்.

இவர்கள் கூறுவது போல் திருக்குர்ஆன் கூறினால் அது தான் இஸ்லாமின்  சட்டம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இவ்வசனம் சொல்லாத ஒரு கருத்தை இவ்வசனத்துக்குள் நுழைத்து, வளைத்து இவ்வாறு வாதிடுகின்றனர் என்பதே உண்மை.

இவர்களின் வாதம் எவ்வாறு தவறானது என்பதைப் பார்த்துவிட்டு இதன் சரியான கருத்து என்னவென்று பார்ப்போம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை என்பதை 312, 152 ஆகிய குறிப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளோம்.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை எனும் போது எழுத்து வடிவில் அருளப்படாததைத் தொட முடியாது என்பதால் தொடுகின்ற பேச்சுக்கே இடமில்லை.

தொடும் விதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டிருந்தால் மட்டுமே “இந்தக் குர்ஆனைத் தொடமாட்டார்கள்” என்று கூற முடியும்.

திருக்குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஓதிக் காட்டப்பட்டதே தவிர எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

இறைவனிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தியைப் பெற்ற பிறகு எழுத்தர்களிடம் சொல்லி எழுதி வைத்துக் கொண்டதால் திருக்குர்ஆன் எழுத்து வடிவம் பெற்றது.

புத்தகமாக திருக்குர்ஆன் அருளப்பட்டு இருந்தால் அந்தப் புத்தகத்தைக் காட்டி இதைத் தொடமாட்டார்கள் என்று சொல்ல முடியும்.

ஒலி வடிவில் ஒன்றைச் சொல்லி விட்டு இதைத் தொடக் கூடாது என்று யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில் ஒலியைக் கையால் தொடமுடியாது.

அப்படியானால் அதைத் தொடமாட்டார்கள் என்பது எதைக் குறிக்கிறது?

இஸ்லாமிய நம்பிக்கைப்படி இறைவனிடம் ஒரு பதிவேடு உள்ளது. நடந்தவை, நடக்க இருப்பவை அனைத்தும் அந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் திருக்குர்ஆனும் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டை வானவர்களாகிய தூய்மையானவர்கள் தான் தொட முடியுமே தவிர ஷைத்தான்களால் தொட முடியாது.

(பாதுகாக்கப்பட்ட பதிவேடு குறித்து அறிந்திட 157, 492வது குறிப்புகளைப் பார்க்கவும்)

அத்தகைய பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருந்து தான் இந்தத் திருக்குர்ஆன் எடுத்து வரப்படுகிறது.

இதைத் தொடமாட்டார்கள் என்பது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டைத் தான் குறிக்கிறது.

இதை நாம் சொந்த ஊகத்தில் சொல்லவில்லை. திருக்குர்ஆன் அப்படித் தான் சொல்கிறது. இதைத் தொடமாட்டார்கள் என்ற வசனத்தை மட்டும் பார்க்காமல் அதற்கு முன்னுள்ள இரண்டு வசனங்களுடன் சேர்த்துப் பார்த்தால் இதை அறிந்து கொள்ளலாம்.

இவ்வசனத்துக்கு முன்னர் உள்ள வசனங்களில் இருந்து பாருங்கள்

77, 78. இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க திருக்குர்ஆனாகும்.

79. தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள்.

80. அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது.

அதைத் தீண்ட மாட்டார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அதை என்று சொல்லப்படுவது எதைக் குறிக்கிறது என்பது தான் இப்பிரச்சினையின் அடிப்படையாக அமைந்துள்ளது.

‘அதை’ என்று நாம் பேசினாலோ, எழுதினாலோ அதுபற்றி முன்னரே பேசியோ, எழுதியோ இருப்போம். அதை என்பது முன்னர் பேசியதைக் குறிக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.

“அதைத் தொட மாட்டார்கள்” என்று இவ்வசனம் சொல்கிறது என்றால் இதற்கு முன்னுள்ள வசனங்களில் இது பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கும். அவ்வாறு நாம் தேடிப்பார்க்கும் போது அதை என்பது எதைக் குறிக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள முடியும்.

இவ்வசனத்திற்கு முன் 56:77,78 ஆகிய வசனங்களில் “இது பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கின்ற மதிப்புமிக்க திருக்குர்ஆன்” எனக் கூறப்படுகிறது.

அடுத்த வசனத்தில் “அதைத் தொட மாட்டார்கள்” என்று கூறப்படுகிறது.

எனவே “பாதுகாக்கப்பட்ட ஏட்டில் உள்ள திருக்குர்ஆன், எங்கிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதோ அங்குள்ள மூலப் பிரதி” என்பது தான் “அதை” என்பதன் பொருள்.

எனவே “அதைத் தொடமாட்டார்கள்” என்பது ஒலி வடிவமாக அருளப்பட்ட திருக்குர்ஆனைக் குறிக்காது. எங்கிருந்து அருளப்பட்டதோ அந்த மூலப் பிரதியைத் தான் குறிக்கும்.

எனவே இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று வாதிடுவது தவறாகும்.

திருக்குர்ஆன் எல்லா மக்களுக்கும் வழிகாட்டுவதற்காக அருளப்பட்டது. எல்லா நிலையிலும் வாசிப்பதற்காக அருளப்பட்டது. எல்லா மாந்தர்களும் படிப்பதற்காக அருளப்பட்டது.

முஸ்லிம் அல்லாதவர்கள் இந்தத் திருக்குர்ஆனை வாசித்தால் தான் அவர்கள் நேர்வழி பெற முடியும். “நீங்கள் தூய்மையாக இல்லை; நீங்கள் திருக்குர்ஆனைத் தொடக்கூடாது” என்று கூறினால், எந்த நோக்கத்திற்காக திருக்குர்ஆனை அல்லாஹ் அருளினானோ அந்த நோக்கத்தைச் சிதைப்பதாக ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நாடுகளின் தலைவர்களுக்கு, திருக்குர்ஆன் வசனங்களை எழுதி இஸ்லாத்தை ஏற்க அழைப்புக் கொடுத்துள்ளனர். (பார்க்க : புகாரீ 7, 2941, 4553)

அந்த மன்னர்கள் அதைத் தம் கையால் தொட்டு வாசிப்பார்கள் என்பதை அறிந்தே திருக்குர்ஆன் வசனங்களை எழுதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பியிருக்கும் போது, திருக்குர்ஆனைத் தூய்மையுடன் தான் தொட வேண்டும் என்று கூறுவது தவறாகும். இவ்வாறு கூறுவது திருக்குர்ஆனிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி விடும்.

திருக்குர்ஆனைத் தூய்மையானவர்கள் தான் தொட வேண்டும் என்று கூறுவதற்கு எந்த வகையிலும் சான்றாக இவ்வசனம் அமைந்திருக்கவில்லை.

எல்லா நிலையிலும், எல்லா மனிதர்களும் திருக்குர்ஆனைத் தொடலாம்; படிக்கலாம்; வாசிக்கலாம் என்பது தான் திருக்குர்ஆனிலிருந்து பெறப்படுகின்ற, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலிருந்து பெறப்படுகின்ற முடிவாகும்.

உளூ இல்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்ற கருத்தில் சில நபிமொழிகளும் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.

1-   ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) கூறுகிறார் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டிற்கு அனுப்பிய போது நீ தூய்மையான நிலையில் இருக்கும் போதே தவிர திருக்குர்ஆனைத் தொடாதே என்று கூறினார்கள்.

நூல் : ஹாகிம்

இந்த ஹதீஸை சுவைத் பின் அபீஹாதிம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று நஸாயீ, அபூஸுர்ஆ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் மோசமான மனனத்தன்மை கொண்டவர்; பல தவறுகள் இவரிடம் ஏற்பட்டுள்ளன என்று இப்னு ஹஜர் கூறியுள்ளார். இந்த ஹதீஸ் பலவீனமானது என்று அல்குலாஸா என்ற தனது நூலில் நவவீ குறிப்பிட்டுள்ளார். இதை நம்பகமான ஹதீஸ் என்று ஹாகிம் மட்டும் கூறினாலும் அவர் நம்பகமானவர்களைத் தீர்மானிப்பதில் அலட்சியமாக செயல்படுபவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுகின்றனர்

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறுகிறார் :

தூய்மையானவரைத் தவிர திருக்குர்ஆனைத் தொடக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : தப்ரானி

இந்தச் செய்தியில் சயீத் பின் முஹம்மத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.

மேலும் இந்த அறிவிப்பில் இப்னு ஜுரைஜ் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையைச் செய்பவர். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன்; எனக்கு அறிவித்தார் என்று நேரடியாகக் கேட்டதாக அறிவித்தால் மட்டுமே ஏற்கப்படும்.

மேற்கண்ட அறிவிப்பில் ஸுலை மான் பின் மூசா என்பவரிடம் இவர் நேரடியாகக் கேட்டதாக எந்த வாசகத்தையும் குறிப்பிடவில்லை. இந்தக் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாகும்.

2-   உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) கூறுகிறார் :

நீ தூய்மையான நிலையில் இருந்தாலே தவிர திருக்குர்ஆனைத் தொட வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : தப்ரானி

இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் ராஃபிஉ என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இப்னு ஹஜர், யஹ்யா பின் மயீன், நஸாயீ, தஹபீ, அஹ்மது பின் ஹம்பல், யஃகூப் பின் சுப்யான், இப்னு அதீ, தாரகுத்னீ, இப்னு கராஷ், அபூ ஹாதிம் மற்றும் முஹம்மது பின் சஅத் ஆகியோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். புகாரீ மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். புகாரீ அல்லாத மற்ற ஏராளமான அறிஞர்கள் ஒன்றுபட்டு இவரைப் பலவீனமானவர் என்று கூறுவதாலும், இவர் மனனத்தன்மை சரியில்லாதவர் என்று குறைக்கான காரணம் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதாலும் இவர் பலவீனமானவர் ஆவார்.

இவரிடத்தில் உள்ள குறையை புகாரீ அவர்கள் அறியாத காரணத்தால் தவறுதலாக நம்பகமானவர் என்று கூறியுள்ளார். எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

3-   அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மது பின் அம்ர் பின் ஹஸ்ம் கூறுகிறார் :

தூய்மையானவரைத் தவிர வேறு யாரும் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்ர் பின் ஹஸ்ம் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இருந்தது.

நூல் : மராஸீலு அபீதாவூத் (90)

இந்தச் செய்தி முழுமையான அறிவிப்பாளர் தொடரின்றி உள்ளது.

தாரகுத்னீ இந்தச் செய்தி தொடர்பாக கூறுகையில் இது தொடர்பு அறுந்த முர்ஸல் என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதில் உள்ள அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இடையில் அறிவிப்பாளர் விடுபட்டிருந்தால் அதன் காரணமாக அந்த ஹதீஸ் பலவீனமாகி விடும்.

இந்தச் செய்தியை அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழரல்லர். நபித்தோழர் காலத்தில் வாழ்ந்தவருமல்லர். இப்படிப்பட்டவர் நபியுடன் தொடர்புடைய செய்தியை அறிவிப்பதால் இது முர்ஸல் (தொடர்பு அறுந்த செய்தி) ஆகும் என்று தாரகுத்னீ தெளிவுபடுத்தியுள்ளார். அபூதாவூத் அவர்களும் இந்தச் செய்தியை தொடர்பு அறுந்த முர்ஸலான செய்திகளில் ஒன்றாகப் பதிவு செய்துள்ளார்.

இடையில் அறிவிப்பாளர் விடுபடாமல் வரும் அறிவிப்பாளர் தொடரில் ஸுலைமான் பின் அர்கம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் முற்றிலும் பலவீனமானவர் என்று அறிஞர் பெருமக்களால் ஒதுக்கப்பட்டவர்.

எனவே தூய்மையில்லாமல் திருக்குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்குச் சான்றாக ஒரு செய்தியும் இல்லை. முஸ்லிமல்லாதவர்கள், மாதவிடாய் ஏற்பட்டவர்கள், குளிப்பு கடமையானவர்கள் உளூ இல்லாதவர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் திருக்குர்ஆனைத் தொடலாம். ஓதலாம் என்பதே சரியான கருத்தாகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...