315. மிஅராஜ் என்ற விண்வெளிப் பயணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் மக்காவில் இருந்து ஜெருசலத்துக்கும், அங்கிருந்து விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அல்லாஹ்வின் ஏராளமான அத்தாட்சிகளை அவர்கள் பார்த்து விட்டு திரும்பி வந்ததாகவும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தப் பயணம் மிஅராஜ் என்று சொல்லப்படுகிறது.

தவறான கொள்கையுடைய சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மிஅராஜ் எனும் விண்வெளிப் பயணம் சென்றதாக பதிவு செய்யப்பட்ட ஹதீஸ்களை மறுக்கின்றனர்.

17:1 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மக்காவில் இருந்து ஜெருசலம் வரை அழைத்துச் சென்றதாக அல்லாஹ் கூறுகிறான். ஜெருசலமிலிருந்து விண்ணுலகம் அழைத்துச் சென்றதாகக் கூறும் ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரணானது என்பது தான் இவர்கள் மிஅராஜை மறுப்பதற்குக் காரணம்.

17:1 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து ஜெருசலம் அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் மிஅராஜ் என்பது இவ்வசனத்துக்கு எதிரானது அல்ல. முரணானதும் அல்ல. இவ்வசனம் சொல்லாத கூடுதல் தகவல் தான் ஹதீஸ்களில் உள்ளது.

மிஅராஜ் குறித்த ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியைச் சந்தித்து உரையாடியதாகவும், அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஐம்பது நேரத் தொழுகை ஐந்து நேரமாகக் குறைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பை திருக்குர்ஆனின் இவ்வசனம் (32:23) உண்மைப்படுத்துகிறது.

மூஸா நபியைச் சந்தித்ததில் உமக்குச் சந்தேகம் வர வேண்டாம் என்று இவ்வசனம் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மூஸா நபியவர்கள் மரணித்து விட்டதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூஸா நபியைப் பார்த்திருக்க முடியாது.

இறந்து போனவரை உயிரோடு இருப்பவர்கள் ஒருக்காலும் பார்க்க முடியாது; ஆயினும் இறைவன் தனது ஆற்றலைக் காட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘மிஅராஜ்’ என்ற விண்வெளிப் பயணம் அழைத்துச் சென்றான்.

அங்கே அவர்கள் மூஸா நபியைச் சந்தித்தார்கள். மற்றவர்களை விட அவர்களிடம் அதிகமான நேரம் உரையாடினார்கள். அந்தச் சந்திப்பைத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.

மூஸாவைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்; நீர் உண்மையாகவே சந்தித்தீர்; நீர் சந்தித்தது அவரைத் தான் என்ற கருத்துப்பட அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.

இவ்வசனத்தில் (32:23) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம் என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.

அவர் என்பது மூஸா நபியைக் குறிக்கும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணம் சென்ற போது மூஸா நபியைச் சந்தித்தது குறித்து இவ்வசனம் பேசுகிறது என்று நாம் கூறுகிறோம்.

லிகாயிஹி என்ற சொல் இவ்வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலக்கண விதிப்படி இச்சொல்லுக்கு இரண்டு விதமாகப் பொருள் கொள்ள முடியும்.

அவரைச் சந்தித்தது

அவர் சந்தித்தது

இப்படி இரு விதங்களாக பொருள் செய்ய இடமுள்ளது.

அவரைச் சந்தித்ததில் நீ சந்தேகப்பட வேண்டாம் என்று பொருள் கொண்டால் மூஸா நபியைத்தான் நீ சந்தித்தாய் அதில் உனக்கு சந்தேகம் வேண்டாம் என்ற கருத்து வரும்.

மிஅராஜ் பயணத்தில் அல்லாஹ் மூஸா நபியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டி அவர்களுடன் உரையாட செய்தான். அந்த ச்ந்திப்பு பிரேமை என நினைக்காதே! மூஸா நபி இறந்து விட்டாலும் அவரைச் சந்திக்க வைக்க என்னால் முடியும் என்பதால் அதில் உமக்கு சந்தேகம் வேண்டாம் என்பது இந்த மொழி பெயர்ப்பின் கருத்தாகும்.

அவர் சந்தித்ததில் உமக்குச் சந்தேகம் வேண்டாம் என்று பொருள் கொண்டால் அவர் – மூஸா – இறைவனைச் சந்தித்துள்ளார். அதில் உமக்குச் சந்தேகம் வேண்டாம் என்பது இதன் கருத்து.

இப்படி மொழி பெயர்க்க இலக்கணம் இடம் தந்தாலும் இதன் கருத்து சரியல்ல என்பதால் நாம் செய்த மொழியாக்கமே சரியானது.

மூஸா நபி இறைவனைச் சந்திக்க கோரிக்கை வைத்த போது அவர்களை அல்லாஹ் மூர்ச்சை அடையச் செய்தான். அவர்கள் இறைவனைச் சந்திக்கவில்லை. இதற்கு மாற்றமாக இவர்களின் விளக்கம் அமைந்துள்ளது. இது குறித்து 21வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

மற்றும் சிலர் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஅராஜ் பயணத்தில் அல்லாஹ்வைச் சந்தித்தது பற்றிக் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதால் அதற்கு முரணான இந்தக் கருத்தை ஏற்க முடியாது. இது குறித்த ஆதாரங்களை 482 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் அவனைச் சந்திப்பதில் நீர் சந்தேகிக்காதீர் என்று கூறுகின்றனர். அதாவது மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்க இருப்பதில் சந்தேகிக்க வேண்டாம் என்று இதற்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

இது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஅராஜ் சம்பவம் பற்றிப் பேசும் போது தான் இவ்வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (விண்ணுலகம்) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். மூஸா (அலை) அவர்கள் “ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவராகவும், உயரமானவராகவும், சுருள்முடியுடைவராகவும் இருந்தார்கள். மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும், சிவப்பும் வெண்மையும் கலந்த, மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான மாலிக்கும், தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை என்று கூறிவிட்டு, “நீர் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் கொள்ளாதீர்”. (32:23) என்ற வசனத்தையும் ஓதினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்லிம் 267

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஒரு வசனத்திற்குரிய பொருளைக் கூறிய பிறகு அதற்கு மாற்றமாக மொழிபெயர்த்தவர்களின் கருத்துக்களின் பக்கம் நாம் திரும்ப வேண்டிய அவசியமில்லை.

இது, மிஅராஜ் என்ற நிகழ்ச்சி உண்மை என்பதற்குரிய தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

மிஅராஜ் பயணம் குறித்த ஹதீஸ்கள் திருக்குர்ஆனுக்கு முரணானது அல்ல என்பதை 53:13-18 வரை உள்ள வசனங்களும் உறுதிப்படுத்துகின்றன.

மிஅராஜ் பயணம் குறித்து மேலும் அறிய 263, 267, 362 ஆகிய குறிப்புகளைக் காண்க!

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...