323. வானத்திலும் பாதைகள் உண்டு

இவ்வசனத்தில் (51:7) வானத்திலும் பாதைகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

பூமியில் மட்டுமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

விண்வெளிப் பயணம் பற்றி விளக்கமாக அறிய 172, 304 ஆகிய குறிப்புகளையும் காண்க!