328. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை

இவ்வசனத்தில் (35:41) வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னாபின்னமாகி விடும் என்ற அறிவியல் உண்மை இதில் மறைமுகமாக குறிப்பிடப்படுகிறது.

ஈர்ப்பு விசை குறித்து திருக்குர்ஆன் கூறுவதை மேலும் அறிய 240வது குறிப்பைக் காண்க!