34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்
உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன.
மக்கா, அபயபூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே இருந்து வருகிறது.
14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலாலும் தோற்கடிக்கப்பட முடியாத ஆலயமாகவும், அப்படி தாக்க வருவோரை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருகிறது.
ஹஜ்ஜின் போது பலர் மக்காவில் மரணிக்கிறார்கள். மக்கா அபய பூமியாக இல்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதே? என்று சிலர் விதண்டா வாதம் செய்யக் கூடும்.
அபயபூமி என்பதன் பொருளைச் சரியான முறையில் அறிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
மக்காவில் ஒருவரும் சாகமாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை என்று அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னரும், இவ்வசனம் அருளப்பட்ட பின்னரும் மக்காவில் பலரும் மரணித்துள்ளனர். பலரும் மரணித்துக் கொண்டு இருப்பதை அனைவரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் மக்கா அபய பூமி என்ற வசனம் அருளப்பட்டது. நபிகள் நாயகத்தின் நெருக்கமான பல ‎தோழர்கள் மக்காவில் ‎மரணித்துள்ளனர்.‎ எனவே மக்காவில் யாரும் மரணிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை.
ஒருவரது மரணம் எங்கே, எப்போது, எப்படி நிகழும் என்று இறைவனால் முடிவு செய்யப்பட்டுள்ளதோ அப்படி நிகழ்ந்தே தீரும். மக்காவில் மரணிப்பார்கள் என்று யார் விஷயத்தில் இறைவன் முடிவு செய்துள்ளானோ அவர் மக்காவில் தான் மரணிப்பார். இது தான் இஸ்லாமின் நம்பிக்கை.
மக்காவுக்குச் செல்லும் ஒருவர் நாம் திரும்பி வருவோமோ இல்லையோ என்று கருதி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு பயணிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது. மக்காவில் மரணம், விபத்து ஆகியன ஏற்படாது என்று முஸ்லிம்கள் நம்புவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்கள் நம்பாத ஒன்றைக் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது.
சில சந்தர்ப்பங்களில் கஅபா ஆலயத்துக்குள் விஷமிகள் புகுந்து ஆயுதத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அபய பூமி என்பதற்கு எதிராக உள்ளதே என்றும் சிலர் கேட்கின்றனர்.
அபய பூமியாக இருப்பதால் சிலர் தமக்குள் சண்டை போட மாட்டார்கள் என்று பொருளல்ல. ஆயுதம் தரித்து சிலர் புரட்சி செய்ய மாட்டார்கள் என்பதும் இதன் பொருளல்ல.
இஸ்லாமை அழிக்க நினைக்கும் எதிரிகளால் அபய பூமியை அழிக்கவோ, கைப்பற்றவோ இயலாது என்பது தான் இதன் கருத்தாகும்.
முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் அறியாமை காரணமாக இந்த அபய பூமியில் சண்டையிடுவார்களா? இரத்தம் சிந்துவார்களா? கஅபா ஆலயத்தைச் சேதப்படுத்துவார்களா என்றால் அதை இஸ்லாம் மறுக்கவில்லை. அது பற்றியும் இஸ்லாம் முன்னறிவிப்பு செய்கிறது.
இந்த ஆலயத்தை அதற்குச் சொந்தம் கொண்டாடும் மக்களால் தவிர மற்றவர்களால் அழிக்க முடியாது. அப்படி அழிக்கப்படும் போது அரபுகளுக்கு ஏற்படும் அழிவு பற்றி கேட்காதே! பின்னர் அபீசீனியர்கள் முற்றிலுமாக கஅபாவை அழிப்பார்கள். அதன் பின்னர் அதைச் சீர் செய்ய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் அஹ்மத்
அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 1591
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தவாறு ஹஜ்ஜாஜ் பின் யூசுப், அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆகியோருக்கு இடையில் நடந்த சண்டையில் இந்த மண்ணில் இரத்தம் சிந்தப்பட்டது. கஅபா சேதமாக்கப்பட்டது. இரண்டு முறை இடித்துக் கட்டப்பட்டது.
அது போல் ஷியாக்களில் ஒரு பிரிவினரான கராமித் என்போர் ஹிஜ்ரி 317 ஆம் ஆண்டு ஹஜ் மாதம் திடீரென மக்காவில் நுழைந்து ஹாஜிகள் பலரைக் கொன்றார்கள். ஹஜருல் அஸ்வதைப் பெயர்த்து எடுத்து ஷியாக்களின் நாடாக இருந்த பஹ்ரைனுக்குக் கொண்டு சென்றார்கள். 22 ஆண்டுகள் கஅபாவில் ஹஜருல் அஸ்வத் இருக்கவில்லை. ஹிஜ்ரி 337 ஆம் ஆண்டு தான் அதாவது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஹஜருல் அஸ்வதை ஒப்படைத்தார்கள்.
இவை தமது அபய பூமியை முஸ்லிம்கள் தாமாக அழித்துக் கொண்ட நிகழ்வாகும். சமீப காலங்களிலும் இது போல் இந்த அபய பூமியில் புரட்சி நடந்ததுண்டு.
அல்லாஹ் இந்த ஆலயத்தை அபய பூமியாக ஆக்கியுள்ளான் என்பதற்கு இது மாற்றமாக ஆகாது. முஸ்லிம்கள் தாமாக அழித்துக் கொள்ளாத வரை இந்த பூமி அபய பூமியாக இருக்கும். அதன் புனிதத்தை அவர்களாக அழித்துக் கொள்வதை இது குறிக்காது.
அல்லாஹ்வின் இவ்வசனங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் சொன்ன இந்த விளக்கத்தையும் இணைத்தே விளங்க வேண்டும்.
இஸ்லாமின் எதிரிகள் இஸ்லாமை ஒழிக்க முயல்வோர் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும்.
அவர்களின் கைகள் ஓங்கி மக்காவின் புனிதத்தை மறுப்பவர்களின் கைகளுக்கு மக்கா நகரம் செல்லாது என்பதும் இதன் பொருளாகும்.
அகிலத்தையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளை எல்லாம் தன் கைவசத்தில் கொண்டு வந்த காலத்தில் கூட மக்காவை அவர்களால் நெருங்க முடியவில்லை.
சிலுவைப் போர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் கூட மக்காவைக் கையகப்படுத்துவது தான் கிறித்தவர்களின் மெய்யான வெற்றி என்ற நிலையிலும் மக்காவை நெருங்க முடியவில்லை.
எனவே மக்கா அபய பூமியாகவே அன்றும் இன்றும் நீடித்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை.
திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...