349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை!
இவ்வசனத்தில் (40:46) ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்றும், கியாமத் நாளில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
யுகமுடிவு நாளில் கடும் வேதனையும், அதற்கு முன் அதைவிடக் குறைந்த வேதனையும் உள்ளது என்பது கப்ரு வேதனையைத் தான் சுட்டிக்காட்டுகிறது.
இது பற்றி அதிக விபரம் அறிய 332, 166 ஆகிய குறிப்புகளைப் பார்வையிடுக!