417. பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயர் கூறுவது அவசியமா?

இவ்வசனத்தில் (24:36) அல்லாஹ்வின் ஆலயத்தில் அவனது பெயரை நினைவு கூர இறைவன் அனுமதித்துள்ளான் என்று சிலர் பொருள் கொள்கின்றனர்.

அரபு மூலத்தில் ‘அதின’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு ‘அனுமதித்துள்ளான்’ என்று பொருள் இருப்பது போலவே, கட்டளையிட்டான், பிரகடனம் செய்தான் என்ற பொருள்களும் உள்ளன.

இவ்வசனத்தில் கூறப்படும் செய்தியை வைத்துப் பார்க்கும் போது அனுமதித்தான் என்பது பொருத்தமற்றதாக உள்ளது.

அல்லாஹ்வின் ஆலயத்தில் அவனது பெயரைத் துதிப்பது அனுமதிக்கப்பட்டது தான் என்பது சொல்லாமலே விளங்கும் விஷயமாகும்.

பள்ளிவாசல்களைக் கட்டி வழிபாடுகள் நடத்தாமல் பாழாக்கி விடக்கூடாது; மாறாக அவற்றில் இறைவனின் பெயர் துதிக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டளை தான் இங்கு பிறப்பிக்கப்படுகின்றது.