449. முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா?

இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும் போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். ‘இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய் சொல்லி இருந்தால் என் மீதும், என் மனைவி மக்கள் மீதும் உன் சாபம் உண்டாகட்டும்’ என்று இருவரும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். இது தான் இஸ்லாமில் முபாஹலா எனப்படுகிறது.

வேதக்காரர்களை முபாஹலாவுக்கு அழைக்கச் சொல்லி இவ்வசனத்தில் (3:61) அல்லாஹ் கட்டளை இடுகிறான்.

இவ்வசனம் வேதக்காரர்களைக் குறித்து அருளப்பட்டாலும் யார் பொய்யர் என்ற பிரச்சினை ஏற்படும் போது இது அனைவருக்கும் உரியது தான்.

திருக்குர்ஆன் வசனங்களில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு பிரிவினர் பற்றியும், தனி நபர் பற்றியும் தான் அருளப்பட்டிருக்கும். ஆனால் அது அவர்களுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அந்தத் தன்மையில் உள்ள அனைவருக்கும் உரியது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

லூத் நபி சமுதாயத்தின் ஓரினச் சேர்க்கையை அல்லாஹ் கண்டித்ததால் அது லூத் நபி சமுதாயத்துக்கு உரியது; நமக்கு அல்ல என்று புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவர் உண்மை சொல்கிறாரா? பொய் சொல்கிறாரா என்பது ஒரு பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால் அதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும். அந்தத் தீர்வு தான் அல்லாஹ்வின் பொறுப்பில் விடும் முபாஹலாவாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிமல்லாத வேதக்காரர்களைத் தான் முபாஹலாவுக்கு அழைத்தார்கள். எனவே முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு எதிராக எப்படி சாபத்தை வேண்டலாம் எனவும் அவர்கள் கேட்கின்றனர்.

முஸ்லிமான கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் அவதூறுக் குற்றச்சாட்டின் போது ஒருவருக்கு எதிராக மற்றவர் சாபத்தை வேண்டக் கூடிய லிஆன் என்ற சட்டத்தை இவர்கள் அறியாததால் இப்படி வாதிடுகின்றனர். இது 24:6-9 வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

நபித்தோழர்களான கணவன் மனைவிக்கிடையே லிஆன் செய்யுமாறுநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை புகாரீ 4745, 5310, 5314, 5315, 5316, 6748, 6856 ஆகிய ஹதீஸ்களில் காணலாம்.

இது குறித்து 454 வது குறிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

யார் பொய்யர் என்பதைக் கண்டு பிடிக்கும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று கேட்கலாம் என்பதற்கான முக்கியமான சான்றாக இது உள்ளது.

மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் கண்டுபிடிக்க முடியாத போது அல்லாஹ்வின் பொறுப்பில் விட்டுவிட்டு பிரச்சினையை முடிப்பதைத் தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை.

முஸ்லிமுக்கு மத்தியில் யார் பொய்யர்கள் என்பதில் தீர்வு காணும் அவசியம் ஏற்பட்டால் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை வேண்டக் கூடாது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாம் என்று நல்லறிஞர்கள் யாரும் சொல்லவில்லை என்று சிலர் கூறுகின்றனர்.

அறிஞர் இப்னு தைமியா அவர்கள் அத்வைதக் கொள்கை உடைய முஸ்லிம் பெயர் தாங்கிகளிடம் முபாஹலா செய்துள்ளார்கள். மற்றொரு அறிஞரான ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் இப்னு அரபியின் சீடர்களுடன் முபாஹலா செய்துள்ளார்கள்.

இப்னு அப்பாஸ், சுஃப்யான் ஸவ்ரீ, அவ்ஸாயீ, இப்னுல் கையும் உள்ளிட்ட எண்ணற்ற அறிஞர்கள் தவறான கொள்கை உடையவர்களிடம் முபாஹலா செய்துள்ளனர்; செய்யலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளனர் என்பதால் இந்த வாதமும் தவறாகும்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரு பழியைச் சுமத்துகிறார். இப்படி பழி சுமத்தும் போது பழி சுமத்தப்பட்டவர் முபாஹலாவுக்கு அழைக்கலாம். அதில் நியாயம் உள்ளது. அல்லது அவர் அதை அலட்சியம் செய்து விடலாம்.

ஆனால் பழிசுமத்தியவர் முபாஹலாவுக்கு அழைத்து தப்பித்துக் கொள்ள இஸ்லாமில் இடமில்லை. ஒருவர் இன்னொருவர் மீது ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தினால் குற்றம் சுமத்தியவரின் ஒரே கடமை அந்தக் குற்றத்தை சான்றுடன் நிரூபிப்பது தான்.

நான் சான்றுடன் நிரூபிக்க மாட்டேன்; முபாஹலாவுக்கு வருகிறாயா? என்று கேட்டு அவதூறுக்கான தண்டனையில் இருந்து அவன் தப்பிக்க முடியாது. என் கருத்து சரியா? உன் கருத்து சரியா? என் கொள்கை சரியா? உன் கொள்கை சரியா? என்பது போன்ற பிரச்சினைகளில் தான் இருவரில் யாரும் முபாஹலாவுக்கு அழைக்கலாம்.

கொள்கை அடிப்படையில் இல்லாமல் தனிப்பட்ட மனிதர் மீது ஒருவர் பொய்க்குற்றம் சாட்டினால் குற்றம் சாட்டப்பட்டவர் முபாஹலாவுக்கு அழைக்கலாம். ஏனெனில் எதையும் நிரூபிக்கும் கடமை குற்றம் சாட்டப்பட்டவர் மீது இல்லை. குற்றம் சாட்டியவர் மீது தான் இந்தக் கடமை உள்ளது. சான்றுடன் நிரூபிப்பது தான் அவருக்குள்ள ஒரே கடமையாகும்.

எந்தச் சான்றும் இல்லாமல் குற்றம் சாட்டி விட்டு நிரூபிக்க முன்வராமல் முபாஹலாவுக்குத் தயாரா என்று கேட்டு ஓட்டம் பிடிக்க முபாஹலாவைக் கருவியாக்க கூடாது.

குற்றம் சுமத்தியவன் மீது நிரூபிக்கும் கடமை மட்டுமே மார்க்கத்தில் உள்ளது. அவ்வாறு இல்லாவிட்டால் அவனுக்கு அவதூறுக்கான தண்டனை வழங்கப்படும். குற்றம் சுமத்தியவன் அதை நிரூபிக்க மறுத்தால் அவன் சுமத்திய குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபணமாகி விட்டதால் குற்றம் சுமத்தப்பட்டவன் அதை அத்துடன் விட்டு விடலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மற்றவர் மீது குற்றம் சுமத்தியவர்கள் அதை நிரூபிக்காத போது தண்டிக்கப்பட்டார்கள்.

குற்றச்சாட்டைச் சுமத்தி விட்டு அதை நிரூபிக்காமல் முபாஹலாவுக்கு அழைத்து தப்பித்துக் கொள்ள யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எப்போது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லையோ அதுவே பொய்யன் என்பதைக் காட்டிவிட்ட பிறகு முபாஹலா மூலம் நான் நிரூபிப்பேன் என்று ஒருவன் கூறுவது மார்க்கத்தின் சட்டத்தைக் கேலிக் கூத்தாக்குவதாகும்.

அவதூறு பரப்புவோர் முதலில் மார்க்க அடிப்படையில் செய்ய வேண்டிய நிரூபிக்கும் கடமையைச் செய்ய வேண்டும். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எந்தக் கடமையும் இல்லை. எனவே அவர் முபாஹலாவுக்கு அழைப்பு கொடுக்கலாம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் அறிய 94வது குறிப்பைப் பார்க்கவும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...