459. இயேசு கடவுளின் குமாரரா?

இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:73, 5:116, 9:31, 19:30, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்லர்; கடவுளின் தூதர் தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும், கடவுள் என்றும், கிறித்தவர்கள் கூறுவதை திருக்குர்ஆன் ஒப்புக் கொள்ளவில்லை.

இயேசு தன்னைக் கடவுள் என்று ஒரு போதும் கூறியதில்லை. தன்னைப் படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்று தான் அவர் போதனை செய்தார். இயேசுவுக்குப் பின்னால் வந்தவர்கள் தான் இயேசு கடவுளின் குமாரன் என்ற கொள்கையை உருவாக்கி இயேசுவின் கொள்கைக்கு எதிராக நடந்து விட்டனர் என்பது இஸ்லாமின்  நிலைபாடாகும்.

இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் வசனங்கள் பைபிளில் இன்றளவும் எஞ்சியிருக்கின்றன.

ஒரே கடவுளாகிய கர்த்தர் என்னையன்றி உனக்கு வேறு தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.

யாத்திராகமம் 20:3

கர்த்தரே தேவன். அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு இது உனக்குக் காட்டப்பட்டது.

உபாகமம் 4:35

இஸ்ரவேலே கேள்! நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்மாவோடும் உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக! இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக் கடவது.

உபாகமம் 6:4-6

நானே தேவன்; வேறொருவரும் இல்லை; நானே தேவன்; எனக்குச் சமானமில்லை (என்று கர்த்தர் கூறினார்.)

ஏசாயா 46:9

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன். நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.

யோவான் 17:3,4

போதகரே! நியாயப் பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானதென்று கேட்டான். இயேசு அவனை நோக்கி உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்மாவோடும் உன் முழு மனத்தோடும் அன்பு கூர்வாயாக. இது முதலாம் பிரதான கற்பனை என்றார்.

மத்தேயு 22:36-38

அவர் அவளை நோக்கி ‘உனக்கு என்ன வேண்டும்’ என்று கேட்டார். அதற்கு அவள் ‘உம்முடைய ராஜ்யத்தில் என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும் ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்ய வேண்டும்’ என்றாள்.

மத்தேயு 20:21

இதற்கு இயேசு கூறிய பதிலென்ன? நான் அவ்வாறு அருளுவேன்’ என்று கூறவில்லை.

அவர் கூறிய பதில் இது தான்:

அவர் அவர்களை நோக்கி ‘என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனாலும் என் வலது பாரிசத்திலும், என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கே யல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருள்வது என் காரியமல்ல’ என்றார்.

மத்தேயு 20:23

இயேசு தன்னை மனுஷகுமாரன் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்துள்ளார்.

பார்க்க : மத்தேயு 8:20, 9:6, 9:8, 16:13, 17:22, 17:12, 17:9, 19:28, 20:18, 20:28, 24:27, 26:24, 26:45

இயேசு கடவுளின் மகன் அல்ல. மனிதனின் மகன் தான் என்று மேற்கண்ட பைபிள் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

கர்த்தரின் குமாரன் என்று இயேசு சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளார். இதன் பொருள் கடவுளின் கட்டளைப்படி நடப்பவர் என்பது தான். கடவுளுக்குப் பிறந்தவர் என்பதல்ல. ஏனெனில் இயேசு மட்டுமின்றி இன்னும் பலர் கடவுளின் குமாரர்கள் என்று பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளனர். அந்த வசனங்களை இப்படித் தான் கிறித்தவர்கள் புரிந்து கொள்கின்றனர்.

இஸ்ரவேல், கடவுள் குமாரன் என்று யாத்திராகமம் 4:22,23 வசனங்களும் எரெமியா 31:9 வசனமும் கூறுகின்றன.

தாவீது, கடவுள் குமாரன் என்று சங்கீதம் 2:7 வசனமும், முதலாம் நாளாகமம் 17:13 வசனமும் கூறுகின்றன.

சாலமோன், கடவுள் குமாரன் என்று முதலாம் நாளாகமம் 22:10 வசனம் கூறுகிறது.

எப்ராயீம், கடவுள் குமாரன் என்று எரேமியா 31:9 வசனமும், சாமுவேல் கடவுள் குமாரன் என்று இரண்டாம் சாமுவேல் 7:14 வசனமும் கூறுகின்றன.

எல்லா மனிதர்களுமே கடவுளின் குமாரர்கள் என்றும் பைபிளில் கூறப்படுகின்றனர். பார்க்க : உபாகமம் 14:1, சங்கீதம் 68:5, மத்தேயு 6:14,15, மத்தேயு 5:9, மத்தேயு 5:45, மத்தேயு 7:11, மத்தேயு 23:9, யோவான் 1:12, லூக்கா 6:35

எனவே இயேசு கடவுளுக்கு மகன் என்ற கொள்கை பைபிளின் போதனைக்கே எதிரானதாகும்.

‘இயேசு மற்ற மனிதர்களைப் போல் தந்தைக்குப் பிறக்கவில்லை; இதனால் அவர் கடவுளுக்கே பிறந்தவர்; எனவே அவரும் கடவுள் தாம்’ என்ற வாதமும் பைபிளுக்கு எதிரானது.

தந்தையின்றிப் பிறந்தார் என்ற சொல்லே இயேசு கடவுளில்லை; பிறந்தவர் தாம் – மனிதர் தாம் – என்பதை நன்கு விளக்குகிறது. ‘தந்தையின்றிப் பிறந்தார்’ என்ற கூற்றில் ‘தந்தையின்றி’ என்ற வார்த்தைக்குக் கூட உரிய அழுத்தத்தைக் கொடுத்தால் இயேசு கடவுள் கிடையாது என்பது கிறித்தவர்களுக்குத் தெரியவரும். ‘தாயின்றிப் பிறக்கவில்லை’ என்ற கருத்தையே ‘தந்தையின்றி’ என்ற வார்த்தை தருகிறது. அவர் ஒரு தாய்க்குப் பிறந்தார் என்று தெளிவாகவும் பைபிள் கூறுகிறது.

மேலும் தந்தையில்லாதவர்கள் ஏசு மட்டுமின்றி இன்னும் பலர் இருந்துள்ளதாகவும் பைபிள் கூறுகிறது.

ஆதாம் தாயும் தந்தையுமின்றி படைக்கப்பட்டதாக லூக்கா 3:38 வசனம் கூறுகிறது.

யோவாளும் அவ்வாறே தாயும் தந்தையும் இன்றி படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 2:21,22 கூறுகிறது.

மெல்கிசேதேக்கு என்பவர் தாயும் தந்தையுமில்லாமல் உருவானார் என்று எபிரேயர் 7:3 வசனம் கூறுகிறது.

அது போல் இயேசு சில அற்புதங்கள் செய்ததால் அவர் கடவுளின் குமாரராக மாட்டார். ஏனெனில் இன்னும் பலர் இவரை விடப் பெரிய அற்புதங்கள் செய்துள்ளதாக பைபிளில் காணலாம்.

இறந்தவரை எலியா உயிர்ப்பித்ததாக முதலாம் ராஜாக்கள் 17:22, எலிஷா உயிர்ப்பித்ததாக இரண்டாம் ராஜாக்கள் 4:34, 13:21 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இன்னும் பலர் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாக முதலாம் ராஜாக்கள் 17:13-16, 17:6, இரண்டாம் ராஜாக்கள் 4:42-44, 4:2-6, 5:10, 5:14, 6:17, 6:20, 6:6, யாத்திராகமம் 14:22 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஏதோ சில சமயங்களில் கடவுள் அனுமதிக்கும் போது இயேசு அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார். ஆயினும் அவர் முழுக்க முழுக்க மனிதராகவே இருந்திருக்கிறார். மனிதனுடைய பலவீனங்களான பசி, அறியாமை, ஏமாறுதல், அர்த்தமற்ற கோபம் ஆகிய பலவீனங்கள் நீங்கப் பெற்றவராக அவர் இருக்கவில்லை என்பதை பைபிளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்ள முடியும்.

அற்புதங்கள் செய்வது கடவுளின் மகன் என்பதற்கான சான்றாகாது என்றும் இயேசுவே சொல்லி இருக்கிறார்.

அந்நாளில் அனேகர் என்னை நோக்கி, ‘கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினால் தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?’ என்பார்கள். அப்பொழுது நான், ‘ஒருக்காலும் உங்களை நான் அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

மத்தேயு 7:22,23

ஏனெனில் கள்ளக் கிறிஸ்துகளும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்.

மத்தேயு 24:24

எனவே இயேசு அவர்கள் செய்த பிரச்சாரமும், அவர்கள் கடைப்பிடித்த கொள்கையும் கடவுள் ஒருவரே; அவருக்கு மகன் யாரும் இல்லை என்ற கொள்கை தான்.

மதகுருமார்கள் தமக்குக் கடவுளுக்கு நிகரான மரியாதை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பிதா சுதன் என்று கூறி பின்னர் பரிசுத்த ஆவி என்று முக்கடவுள் கொள்கையை உண்டாக்கினார்கள். எங்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கியுள்ளதால் நாங்களும் கடவுள்களே என்ற கொள்கையை இயேசுவுக்குப் பின் உருவாக்கிக் கொண்டனர்.

இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? என்பதைப் பற்றி அறிய 456 வது குறிப்பைப் பார்க்கவும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்களா? அல்லது உயர்த்தப்பட்டு இறுதிக்காலத்தில் இறங்கி வந்து மரணிப்பார்களா என்பது பற்றி அறிய 93, 101,133, 134, 151, 278, 342 ஆகிய குறிப்புகளையும் காண்க!

ஆயிஷா ரலி திருமணம் வஹியின் அடிப்படையிலா ? சமுதாய வழக்கப்படியா

கேள்வி: நீங்கள் ஏராளமான பயான்களில் கூறி வருகிறீர்கள்: ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஆயிஷா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறு வயதில் திருமணம் செய்ததற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் மார்க்கம் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதாலும், ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...