462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?

இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். பதுங்கிய அவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தான். அந்தக் கால தலைமுறையினர் அழிந்த பின்னர் அவர்களை அல்லாஹ் எழுப்பினான் என்பது தான் அந்த வரலாறு.

பல ஆண்டுகள் மனிதர்களால் உறங்க இயலுமா என்ற சந்தேகம் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஏற்படலாம். அல்லாஹ் எல்லா ஆற்றலும் மிக்கவன் என்பதால் முஸ்லிம்களுக்கு இதில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.

அதிசயமான எந்த வரலாற்றைக் கூறினாலும் அது உண்மை தான் என்று நம்புவதற்குரிய சான்றுகளை உள்ளடக்கியே அல்லாஹ் பேசுவான்.

இந்தச் சம்பவத்திலும் இது குறித்த சான்றுகள் உள்ளன.

அவர்களைப் பல்லாண்டுகள் உறக்க நிலையில் வைத்திருந்ததைப் பற்றிக் கூறும் போது அவர்களை உறங்க வைத்தோம் எனக் கூறாமல் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்தச் சொல் வழக்கு தற்போது தூக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் தூக்கத்தைக் குறிக்க, காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.

அத்தஹ்ரீர் வத்தன்வீர் என்ற நூலில் அதன் ஆசிரியர் பிற்கால இலக்கியங்களில் இந்தச் சொல் வழக்கு தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் இந்தச் சொல்வழக்கு பயன்பாட்டில் இருக்கவில்லை என்று கூறுகிறார்.

வழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்வழக்கை இறைவன் ஏன் பயன்படுத்த வேண்டும்?

மனிதன் உறங்கும் போது கண்களின் இயக்கம் நின்று விடும். ஆனால் சிறு சப்தம் கேட்டாலும் அவன் விழித்து விடுவான்.

இடியோசை, மிருகங்களின் ஓலம் போன்றவை காரணமாக அவர்களால் பல ஆண்டுகள் உறங்க முடியாமல் போய்விடும். பல ஆண்டுகள் அவர்கள் உறங்க வேண்டுமானால் அவர்களின் காதுகளில் சிறிய சப்தமோ, பெரிய சப்தமோ விழாமல் தடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களால் பல ஆண்டுகள் விழிக்காமல் உறங்க முடியும்.

அதைத் தான் வழக்கத்தில் இல்லாத சொல்லைப் பயன்படுத்தி திருக்குர்ஆன் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று கூறுகிறது.

மேலும் இவ்வசனத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அவர்களைப் பார்த்தால் விழித்திருப்பது போல் தோன்றும் என்றும், நீ அவர்களைப் பார்த்தால் வெருண்டு ஓடுவாய் என்றும், அச்சமடைவாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்கினார்கள் என்று இதற்கு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் சிலர் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவதுண்டு. அவர்களைப் பார்த்தால் அவர்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள். அதைப் பார்த்து பயப்படவும் மாட்டார்கள்.

மாறாக அவர்கள் விழித்திருப்பவர்களைப் போன்று கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கினார்கள் என்று தான் கருத முடியும்.

ஆயினும் மற்றவர்களுக்கு இல்லாமல் இவர்களுக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கும் தன்மை ஏன் வழங்கப்பட்டது?

ஒருவர் நீண்ட காலம் கண்களை மூடிக் கொண்டே இருந்தால் காட்சிகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் (optical nerves) நரம்புகள் சுருங்க ஆரம்பித்து கடைசியில் செயலற்றுப் போய்விடும். இதன் காரணமாக அவரது கண்கள் குருடாகி விடும். பின்னர் அவர்கள் கண்களைத் திறந்தால் எதையும் பார்க்க இயலாது.

விழியின் வெண்படலத்துக்கு இரத்த நாளங்கள் இல்லை. எனவே கண்ணீர் சுரப்பிகளால் இது அவ்வப்போது ஈரப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். எனவே கண்களை நீண்ட நேரத்திற்கு திறந்தே வைத்திருந்தால் விழிவெண்படலம் வரண்டு போக நேரிடும். நாளடைவில் கார்னியோ செராசிஸ்  (Corneo-xerosis) எனும் பாதிப்பால் குருட்டுத் தன்மை ஏற்படும்.

சுருங்கக் கூறினால் ஒருவர் வருடக்கணக்காக கண்களை மூடியே வைத்திருந்தாலும், அல்லது திறந்தே வைத்திருந்தாலும் அவரது பார்வை குருடாகி விடும் என்பது நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளிலிருந்து தெரிய வருகின்றது. இந்த நவீன அறிவியல் உண்மைகளே மேற்கண்ட வசனங்களில் அடங்கியுள்ளன.

பல்லாண்டுகள் ஒருவர் விழிக்காமல் படுத்துக் கிடந்தால் தரையில் படிந்துள்ள உடல் பகுதி சூடாகி வெந்து புண்ணாகி அழுகிப் போய்விடும். அல்லது அதுவே அவர்களை விழிக்கச் செய்து விடும். பல்லாண்டுகள் தூங்க முடியாமல் ஆக்கிவிடும்.

இதனால் தான் அவர்களை வலப்புறமும், இடப்புறமும் புரட்டி இந்த விளைவையும் அல்லாஹ் தடுக்கிறான்.

இது இறைவனின் வார்த்தை என்பதால் தான் பல்லாண்டுகள் தூங்கினால் என்ன விளைவு ஏற்படுமோ, என்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிவியல் உலகம் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதோ அந்த விளைவுகளை இல்லாமலாக்கி அவர்களைத் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

இந்த விளைவுகள் இருந்தாலும் அல்லாஹ்வால் தூங்க வைக்க முடியும் என்றாலும் அதிசயமான வரலாறை நம்பத் தயங்கும் மனிதர்களுக்காக தனது அளப்பரிய அறிவை வெளிப்படுத்தி எல்லாம் அறிந்த இறைவனாகிய நான் சொல்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறான் இறைவன்.

ஆயிஷா ரலி திருமணம் வஹியின் அடிப்படையிலா ? சமுதாய வழக்கப்படியா

கேள்வி: நீங்கள் ஏராளமான பயான்களில் கூறி வருகிறீர்கள்: ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஆயிஷா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறு வயதில் திருமணம் செய்ததற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் மார்க்கம் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதாலும், ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...