474. தேனீக்களின் வழி அறியும் திறன்

உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளான் என்று இவ்வசனத்தில் (16:68) கூறப்படுகிறது.

பாதைகளை அறிவதில் தேனீக்கள் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து பிரிட்டனைச் சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது:

தேனைத் தேடி, தேனீக்கள் அதிக தொலைவுக்குப் பயணம் மேற்கொள்கின்றன. அவை அதிகமான குறுக்கு வழிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்காக கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கைப் பூக்களைக் கொண்டு, தேனீக்களின் பயண வழியைக் கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக் குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்குச் செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவதைக் கண்டறிந்தோம்.

அந்த வழிகள், விற்பனைப் பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கிக் கொடுத்த வழிகளை விட அதிக வழிகளாகும். இதன் மூலம் கம்ப்யூட்டரின் அறிவை மிகச் சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது என்று தெரிய வருகிறது.

இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வழிகளை எளிதாகக் கண்டு கொள்ளும் திறன் தேனீக்களுக்கு உள்ளது என்ற இந்த உண்மையை திருக்குர்ஆன் சொல்லி இருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது உறுதியாகிறது.

எளிதாக வழிகளைக் கண்டு பிடிப்பது என்பது குறுக்கு வழிகளை மட்டும் குறிக்காது. சரியான வழியையும் கண்டுபிடித்தால் தான் எளிதாக இருக்கும்.

ஒரு மலரில் அல்லது கனியில் தனக்கு உரிய உணவு உள்ளதா என்பதை மோப்ப சக்தி மூலம் சரியாகக் கண்டுபிடித்தால் தான் வழிகள் எளிதாக இருக்கும். ஒவ்வொரு பூவாகச் சென்று ஏமாந்தால் வழிகள் எளிதாக இருக்காது. அலைச்சல் தான் மிச்சமாகும்.

தேனீக்களின் மோப்பசக்தி மிகத் துல்லியமாக அமைந்துள்ளதயும் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டுக்கும், செர்பியாவுக்கும் நடந்த போரின் போது ஏராளமான கண்ணி வெடிகளை செர்பிய நாடு குரோஷியாவுக்குள் புதைத்து வைத்தது. போர் முடிந்த பின்னும் கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடத்தில் கால் வைப்பவர்கள் செத்து மடிந்து வருகின்றனர். எனவே கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க தேனீக்களின் மோப்ப சக்தியைப் பயன்படுத்த முடியுமா என்று ஜாக்ரப் பல்கலைக் கழக வேளாண்மைத் துறை பேராசிரியர் நிகோலா கேசிக் ஆராய்ச்சி மேற்கொண்டார்.

தேனீக்களின் உணவு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தேனீக்கள் அதைச் சரியாக மோப்பம் பிடிக்கும் திறன் வாய்ந்தவை என்பதை முதலில் இவர் கண்டுபிடித்தார்.

வெடிமருந்துகளில் உள்ள டி.என்.டி எனும் வாசனையை இனிப்புடன் கலந்து தேன் கூடுகளுக்கு அருகில் வைக்கப்பட்டது. இனிப்பைத் தேடிவரும் தேனீக்கள் டி.என்.டி வாசனையைப் பழகிக் கொண்டன. இப்படியே பழக்கப்பட்ட தேனீக்கள் டி.என்.டி வாசனை எங்கு இருந்தாலும் அது தன்னுடய உணவின் வாசனை என்று நினைக்கும் அளவுக்கு தொடர் பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு தேனீக்கள் பழக்கப்பட்ட பின்னர் டி.என்.டி கலந்த இனிப்பையும் டி.என்.டி கலக்காத இனிப்பையும் கூடுகளுக்கு அருகில் வைக்கும் போது டி.என்.டி கலந்த இனிப்பை மட்டும் அது சரியாகக் கண்டுபிடித்து அதில் அமர்ந்தது.

இதன் பின்னர் ஒரு இடத்தில் வைக்கப்படும் இனிப்பின் நடுப்பகுதியில் டி.என்.டி கலந்தும் ஓரங்களில் டி.என்.டி கலக்காமலும் வைக்கப்பட்டது. அப்போது டி.என்.டி கலந்த மையப்பகுதியில் போய் தேனீக்கள் அமர்ந்தன.

இயல்பாக வெடிமருந்தின் வாசனையை தேனீக்கள் தேடிச் செல்லாது. அது தான் தன்னுடைய உணவு என்று பயிற்சியளிக்கப்படும் போது அந்த வாசனையைத் தேடிச் செல்ல ஆரம்பித்து விடும்.

இப்படி பழக்கப்பட்ட தேனீக்களுக்கு அருகில் மண்ணுக்குள் வெடிபொருளைப் புதைத்து வைத்தால் அந்த இடத்தின் மேலே அமர்ந்து மொய்க்க ஆரம்பித்தன. இதன் மூலம் அந்த இடத்தில் கண்ணிவெடி உள்ளதைக் கண்டுபிடித்து பக்குவமாக அகற்றலாம் என்பது தான் ஆராய்ச்சியின் முடிவாகும்.

இது குறித்து பேராசிரியர் நிகோலா கேசிக் கூறுகையில், ‘இந்த ஆராய்ச்சி, கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இது விஞ்ஞானபூர்வமாக வெற்றிபெற்றால், கண்ணிவெடி இருப்பதாகக் கருதப்படும் பகுதிகளில் தேனீக்களின் நடவடிக்கையை அகச்சிவப்பு கதிர்கள் மூலம் கண்காணித்து கண்ணிவெடிகளை அகற்றி விடலாம்.

நாய், மற்றும் எலி மூலம் கண்ணிவெடியைக் கண்டுபிடிக்க முடியும் என்றாலும், அவற்றின் உடல் எடை காரணமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் தேனீக்களைப் பொறுத்தவரை அந்தப் பிரச்சினையே இல்லை. தேனீக்கள் மூலம் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அமெரிக்காவில் நடந்துள்ளது என்றார்.

இன்று பல்வேறு ஆய்வுகள் மூலம் இதைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் தேனீக்களிடம் இந்தத் தன்மை உள்ளது என்ற விஷயம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...