475. நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் மெய்ப்படுத்துகின்றது.

பசி எடுக்கும் போது சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. பட்டிணி கிடப்பது உடலைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் அதிகமான மக்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக இது சரியானதாக இருந்தாலும் நோன்புக்கு இது பொருந்தாது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அதை விபரமாகப் பார்ப்போம்.

நாம் உணவு உட்கொண்டவுடன் தேவையான ஆற்றலை அந்த உணவில் இருந்து உடல் பெற்றுக் கொள்கிறது. அடுத்த வேளை உணவு உண்ணும் வரை ஆற்றல் தேவை உள்ளதால் உணவிலிருந்து தயாரித்துக் கொண்ட குளுகோஸை நமது உடல், கல்லீரலிலும் தசையிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. அடுத்த வேளை உணவு உட்கொள்ளும் வரை கல்லீரலிலும், தசையிலும் சேமித்து வைக்கப்பட்ட குளுகோஸை ஆற்றலுக்காக உடல் பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு வேளை உணவு உட்கொண்டால் எட்டு மணி நேரத்துக்கு அந்த ஊட்டச்சத்து போதுமானதாகும்.

சேமிக்கப்பட்ட ஊட்டச்சத்து எட்டு மணி நேரத்தில் தீர்ந்த பிறகும் உண்ணா நிலையை நாம் நீடித்தால் உடலில் உள்ள கொழுப்பு, எனெர்ஜி என்னும் ஆற்றலுக்காக எரிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

இந்தக் கொழுப்பு முழுவதுமாகத் தீர்ந்து விட்ட பிறகும், முழு நாள் அளவுக்கு உண்ணாநிலை தொடர்ந்தால் உடலில் உள்ள புரதம் (protein) ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. புரதம் பயன்படுத்தப்படுவதால், உடல் மெலிந்து மனிதன் தளர்வாகிறான். முஸ்லிம்களின் நோன்பு இவ்வாறு அமையவில்லை.

இரண்டாவதாகக் கூறப்பட்ட நிலையில் தான் நோன்பு அமைந்துள்ளது. அதாவது எட்டு மணிக்கு அதிகமாகவும், ஒரு முழு நாளுக்குக் குறைவாகவும் முஸ்லிம்களின் நோன்பு அமைந்துள்ளது.

குளுகோஸ் தீர்ந்து எனெர்ஜிக்காக கொழுப்பு பயன்படுவதால், உடல் எடை குறைகிறது. இதனால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகின்றன. தசைகள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த எடைக் குறைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை நோய்களைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும் போது அதனுடன் சேர்ந்து நச்சுப் பொருள்களும் எரிக்கப்படுவதால், நச்சு நீக்கும் முறையும் நடக்கிறது என்று அமெரிக் காவின் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நோன்பு ஆரம்பித்த சில நாட்களில் இரத்தத்தில் அதிக அளவு endorphin என்னும் வேதிப்பொருள் அதிகரிப்பதால், மனிதன் மிகவும் உற்சாகமாகவும், நல்ல மனநிலையிலும் இருக்க உதவுகிறது. இதனால் மூளையின் செயல்திறனும் அதிகரிக் கிறது.

அமெரிக்காவில் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் “முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பால் கிடைக்கும் மன கவனம், (brain-derived neurotrophic factor) மூளையில் இருந்து வரும் நரம்பு சார்ந்த ஒரு வேதிப்பொருளை அதிகரிக்கிறது. இதன் விளைவாக மூளை அதிக மூளை நரம்பு செல்களை உருவாக்கி அதன் மூலம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

(A study carried out by scientists in the USA found that the mental focus achieved during Ramadan increases the level of brain-derived neurotrophic factor, which causes the body to produce more brain cells, thus improving brain function.) 

இதுபோலவே, முஸ்லிம்களின் நோன்பின் போது, உடலில் உள்ள அட்ரினல் சுரப்பியால் (adrenal gland) சுரக்கப்படும் கார்டிசோல் (cortisol) என்னும் ஹார்மோன் குறைவதால் மனஅழுத்தம் வெகுவாகக் குறைகிறது.

(Likewise, a distinct reduction in the amount of the hormone cortisol, produced by the adrenal gland means that stress levels are greatly reduced both during and after Ramadan )

 ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருதயவியல் மருத்துவ வல்லுனர்கள் “நோன்பு பிடிப்பவர்கள் ஒரு நேர்மறையான விளைவை (positive effect) தங்கள் கொழுப்பு அளவில் கிடைப்பதை அனுபவிக்கிறார்கள். அதாவது, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

(A team of cardiologists in the UAE found that people observing Ramadan enjoy a positive effect on their lipid profile, which means there is a reduction of cholesterol in the blood)

கெட்ட கொழுப்பு குறைவது மட்டுமின்றி, ஆன்மிகச் சிந்தனையால், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால், இதயத்தின் இரத்த ஓட்டம் சீராகிறது. இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. ரமளானுக்குப் பின்னும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை தொடர்ந்தால், குறைந்த கொலஸ்ட்ரால் அளவை எளிதாகப் பராமரிக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்றும், மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் எனும் மறதிநோய், பார்கின்சன் நோய், மற்றும் மூளை தேய்மான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள Chemical messengers எனும் இரசாயனத் தூதுகள் தூண்டப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

The Daily Telegraph என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது.

“உணவைக் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நடத்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே இதுவரை நம்பி இருந்தனர். இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும், ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் செய்முறை மூலம் உறுதிப்படுத்தி விட்டனர்.

neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் மார்க் மாட்சொன் இவ்வாறு கூறுகிறார்:

“கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும். ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது. இடைவெளி விட்ட விரதம், அதாவது, எல்லா உணவையும் அறவே தவிர்ப்பது, பிறகு தனக்கு வேண்டியதை, தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்” என்று கூறுகிறார்.

இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற மதத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்டதாக இருப்பதில்லை. திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான கலோரிகள் கிடைத்து விடும்.

சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதைத் தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. சில விரதங்களில் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நன்மையை அடைய முடியாது.

முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ, சைவமோ, திடமோ, திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் நீண்ட நேரம் கொண்டதாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாகப் பெற முடிகிறது.

நோன்பை மார்க்கக் கடமையாக்கி இருப்பதும், அது நல்லது என்று சொல்லி இருப்பதும், அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று கூறி இருப்பதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாக அமைந்துள்ளது.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...