9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது
இவ்வசனத்தில் (2:26) “இதன் மூலம் வழிகெடுப்பான்” என்று கூறப்பட்டுள்ளது. “இவ்வேதத்தின் மூலம்” என்று சிலர் இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது தவறாகும்.
ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு “இதன் மூலம் வழிகெடுப்பான்” என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே “இதன் மூலம்” என்ற சொற்றொடருக்கு “இவ்வுதாரணத்தின் மூலம்” என்று பொருள் கொள்வதே சரியாகும்.
“இதன் மூலம்” என்ற சொற்றொடருக்கு “வேதத்தின் மூலம்” என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை.
