பருவமடையாத சிறுவர்களுக்கும்குறை மாதத்தில் பிறந்த கட்டிகளுக்கும் தொழுகை நடத்துதல்

سنن الترمذي

‎1031 – ‎حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ ابْنُ بِنْتِ أَزْهَرَ السَّمَّانِ البَصْرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ سَعِيدِ بْنِ عُبَيْدِ اللهِ، قَالَ: حَدَّثَنَا ‏أَبِي، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: الرَّاكِبُ خَلْفَ ‏الجَنَازَةِ، وَالمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا، وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ‎.‎

சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்  என்று நபிகள் நாயகம் ‎‎(ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)‎

நூல்கள்: திர்மிதீ, நஸாயீ, இப்னு மாஜா, அஹ்மத்

سنن أبي داود

‎3180 – ‎حدَّثنا وهْبُ بن بقيّةَ، عن خالد، عن يونسَ، عن زيادِ بن جُبيرٍ، عن أبيه عن المغيرةِ بن شُعبةَ -قال: وأحسب ‏أن أهل زياد أخبروني أنه رفعه إلى النبي-صلَّى الله عليه وسلم- قال: “الراكبُ يَسيرُ خلفَ الجنازة، والماشي يمشي ‏خلفَها وأمامَها، وعن يمييها وعن يسارِها، قريباً منها، والسَّقطُ يُصَلَّى عليه، ويُدْعَى لِوالدَيه بالمغفرةِ والرحمةِ‎”‎

விழுகட்டிகளுக்குத் தொழுகை நடத்தப்பட்டு, அதன் ‎பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அவர்களுக்காகவும் ‎துஆச் செய்ய வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)‎

நூல்கள்: அபூ தாவூத், அஹ்மத்

سنن النسائي

‎1947 – ‎أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، عَنْ ‏خَالَتِهَا أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ قَالَتْ: أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ مِنْ صِبْيَانِ الْأَنْصَارِ، فَصَلَّى عَلَيْهِ، قَالَتْ ‏عَائِشَةُ: فَقُلْتُ: طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ، لَمْ يَعْمَلْ سُوءًا وَلَمْ يُدْرِكْهُ، قَالَ: «أَوَ غَيْرُ ذَلِكَ يَا عَائِشَةُ، خَلَقَ ‏اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ، وَخَلَقَ النَّارَ وَخَلَقَ لَهَا أَهْلًا، وَخَلَقَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ‎»‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு சிறுவர் (உடல்) ‎கொண்டு வரப்பட்டது. அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.‎

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)‎

நூல்: நஸாயீ 1921‎

சிறுவர்களுக்காகவும், முழு வடிவம் பெறாத கட்டிகளுக்காகவும் ‎ஜனாஸா தொழுகை உண்டு என்பதை மேற்கண்ட ஹதீஸ்களில் ‎இருந்து அறியலாம்.‎

ஆயினும் பெரியவர்களைப் போல் இது கட்டாயம் இல்லை. ‎சிறுவர்களுக்குத் தொழுகை நடத்தாமல் விட்டு விட்டால் அது ‎குற்றமாகாது.‎

سنن أبي داود

‎3187 – ‎حدَّثنا محمدُ بن يحيى بن فارسِ، حدَّثنا يعقوبُ بن إبراهيمَ بن سعْدٍ، حدَّثنا أبي، عن ابن إسحاقَ، حدَّثني عَبدُ ‏الله بن أبي بكر، عن عَمرةَ بنتِ عبد الرحمن عن عائشةَ، قالت: مات إبراهيمُ بنُ النبي -صلَّى الله عليه وسلم- وهو ابنُ ‏ثمانيةَ عشرَ شهراً، فلم يصلِّ عليه رسولُ الله -صلَّى الله عليه وسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் 18 ‎மாதத்தில் மரணித்த போது அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் தொழுகை நடத்தவில்லை.‎

அறிவிப்பவர்: ஆயிஷா ரலி)‎

நூல்: அபூ தாவூத் 2772, அஹ்மத் 25101‎

சிறுவர்களுக்கு ஜனாஸா தொழுகை கட்டாயக் கடமை என்றால் ‎தமது மகனுக்கு அதைச் செய்யாமல் நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்.‎