ஏழு வயதில் தொழ ஏவ வேண்டும் என்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

பதில்

இந்தக் கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை முற்றிலும் பலவீனமாக உள்ளன.

ஆயினும் சில ஹதீஸ்களில் சில விமர்சனங்கள் இருந்தாலும் அதன் காரணமாக பலவீனமாக ஆகாது.   அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இதன் கருத்து சரியானதாக இல்லை..

முதலில் அறிவிப்பாளர் குறித்த விமர்சனத்தை எடுத்துக் கொள்வோம்.

سنن أبي داود 

495 – حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ – يَعْنِى الْيَشْكُرِىَّ – حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ سَوَّارٍ أَبِى حَمْزَةَ – قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِىُّ الصَّيْرَفِىُّ – عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مُرُوا أَوْلاَدَكُمْ بِالصَّلاَةِ وَهُمْ أَبْنَاءُ سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ وَفَرِّقُوا بَيْنَهُمْ فِى الْمَضَاجِعِ

உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள். பத்து வயதினராக இருக்கும் போது அவர்களை அதற்காக அடியுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல் : அபூதாவூத்

இதன் எல்லா அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருந்தாலும் ஸவ்வார் பின் தாவூத் என்ற அறிவிப்பாளர் குறித்து விமர்சனங்கள் உள்ளன.

تهذيب التهذيب 

وقال اسحاق بن منصور عن ابن معين ثقة وقال الدارقطني لا يتابع على احاديثه فيعتبر به وذكره ابن حبان في الثقات قلت: وقال يخطئ.

ஸவ்வார் பின் தாவூத் என்பவர் நம்பகமானவர் என்று இமாம் இப்னு மயீன் கூறியுள்ளார்.

இவரது ஹதீஸ்கள் துணைச் சான்றாகக் கூட எடுக்கப்படாது என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.

இந்த விமர்சனத்தில் இப்னு மயீன் அவர்கள் அவரை நம்பகமானவர் என்று நற்சான்று அளிக்கிறார். தாரகுத்னீ இவரைக் குறை கூறுகிறார்.

الجامع في الجرح والتعديل

1740 – سوار بن داود المزني، أبو حمزة الصيرفي البصري صاحب الحلي. * قال البزار: لم يكن بالقوي، وقد حدَّث عنه كثيرٌ من أهل العلم.

பஸ்ஸார் அவர்கள் இவர் பலமானவர் அல்ல என்று கூறுகிறார். அறிஞர்களில் பலர் இவர் வழியாக அறிவித்துள்ளனர் என்று கூறுகிறார்.

“، وقال البزار: “لم يكن بالقوي، وقد حدث عنه كثير من أهل العلم”، وقال البيهقي: “ليس بالقوي” (

பைஹகியும் இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார்.

تهذيب الكمال 

قال أبو طالب (2) ، عن أحمد بن حنبل : شيخ بصري لا بأس به ،

இவர் பஸராவைச் சார்ந்தவராவார். இவரைக் கொண்டு பிரச்சனையில்லை என்று இமாம் அஹ்மது அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல்: தஹ்தீபு

قال المزي: ذكره ابن حبان في «الثقات» كذا ذكره وهو لعمري في «الثقات» لكن بلفظ: يخطئ. وذكره ابن خلفون في «الثقات» وذكر المزي عن الإمام أحمد أنه لم يرو عنه غير حديث: «علموا أولادكم الصلاة وهم أبناء سبع سنين» ولم يتبعه عليه ولا ناقشه فيه،

இப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார். சத்தியமாக இவர் நம்பகமானவர் தான் என்று மிஸ்ஸி கூறுகிறார். இப்னு கல்பூன் இவரை நம்பகமானவர் என்று கூறுகிறார். இந்த ஒரு ஹதீஸை தான் இவர் அறிவித்துள்ளார் எனக் கூறிய அஹ்மத் பின் ஹம்பல் இவரை குறை கூறவில்லை.

இவை தான் இந்த அறிவிப்பாளர் குறித்த விமர்சனமாகும். குறை கூறும் விமர்சனத்துக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் அந்தக் குறை காரணத்துடன் இருக்க வேண்டும். குறை கூறியவர்கள் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை. காரணம் சொன்னால் தான் அந்தக் காரணம் அவரிடம் உள்ளதா என்று ஆய்வு செய்ய முடியும். காரணமில்லாமல் சொல்லப்படும் குறைகளாக இருந்தால் மற்றவர்கள் நற்சான்று அளிக்காவிட்டால் தான் ஏற்கப்படும்.

இந்த அறிவிப்பாளருக்கு யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் ஹம்பல் உள்ளிட்டவர்கள் நற்சான்று அளித்துள்ளனர். இவர்கள் குறை கூறியவர்களை விட அந்த அறிவிப்பாளருக்கு காலத்தால் நெருக்கமானவர்கள். மேலும் குறை கூறும் விமர்சகர்களை விட பல பல மடங்கு எடை போடுவதில் விற்பன்னர்கள். உதாரணமாக யஹ்யா பின் மயீன் அவர்கள் குறை கூறிய விமர்சகர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உயரத்தில் உள்ளவர். அந்த விபரத்தையும் பார்ப்போம்

யஹ்யா பின் மயீன் அவர்களின் அவர்களின் அறிவிப்பாளர் குறித்த ஆய்வுக்கு முன் பிற்காலத்தில் வந்தவர்கள் செய்யும் விமர்சனம் நிற்காது.

அறிவிப்பாளர் குறித்து யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறும் எந்த விமர்சனத்தையும் மறுப்பது என்றால் அவரை விட பலமானவர்களின் மேற்கோளுடன் இருக்க வேண்டும்.

அறிவிப்பாளர்களை எடை போடும் எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதிகமான அறிவிப்பாளர்களை எடைபோடுவதில் யஹ்யா பின் மயீன் அவர்கள் தான் முதலிடத்தில் இருப்பதைக் காணலாம். மிகப் பெரும்பாலான நூலாசிரியர்கள் அறிவிப்பாளர்கள் குறித்து விமர்சிக்கும் போது யஹ்யா பின் மயீன் என்ன சொல்லி இருக்கிறார் என்று எடுத்துக் காட்டுவதை அதிகமாகக் காண முடியும். மற்ற எந்த அறிஞரின் விமர்சனமும் இவரது விமர்சனத்தின்  அளவை எட்டியதில்லை.

இந்தக் கலையை உலகுக்கு சொன்ன பேரறிஞர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் ஆவார். அவருடைய மாணவர்களில் முதன்மையானவரும் அவரையும் இத்துறையில் மிஞ்சியவரும் ஹதீஸ் கலையின் இமாமுமானவர் தான் யஹ்யா பின் மயீன் ஆவார். இவரைப் பற்றிய சில குறிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம்.

تهذيب التهذيب – ابن حجر

وقال العجلي ما خلق الله تعالى أحدا كان أعرف بالحديث من يحيى بن معين ولقد كان يجتمع مع أحمد وابن المديني ونظرائهم فكان هو الذي ينتخب لهم الأحاديث لا يتقدمه منهم أحد ولقد كان يؤتى بالأحاديث قد خلطت وتلبست فيقول هذا الحديث كذا وهذا كذا فيكون كما قال

ஹதீஸ் கலை பற்றி யஹ்யா பின் மயீனை விட அதிகம் அறிந்தவரை அல்லாஹ் படைக்கவில்லை. இவர் அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, மற்றும் இது போன்ற தரத்தில் உள்ளவர்களின் காலத்தில் வாழ்ந்தவர். இவர்களுக்குச் சரியான ஹதீஸ்களைக் கண்டறிந்து சொல்பவராக இருந்தார். மேற்கண்டவர்களில் யாரும் இவரை முந்தியதில்லை. ஹதீஸ்களைக் குழப்பி அவர் முன்னால் சொல்லப்பட்டால் இந்த ஹதீஸ் இப்படித்தான் என்று சொல்லி விடுவார், அவர் சொன்னது போலவே இருக்கும் என்று அஜலீ கூறுகிறார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

அஹ்மத் பின் ஹம்பல், இப்னுல் மதீனி ஆகியோரின் காலத்தில் வாழ்ந்த யஹ்யா பின் மயீனிடம் தான் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ளும் அளவுக்கு மாமேதையாகத் திகழ்ந்தார். ஒரு ஹதீஸை அறிவிப்பாளர்க்ளின் பெயர்களை அனைத்தையும் மாற்றி கூறினாலும் இது இப்படி அல்ல என்று சொல்லும் அளவுக்கு மாமேதையாக யஹ்யா பின் மயீன் திகழ்ந்தவர்.

تهذيب التهذيب

وقال محمد بن رافع سمعت أحمد بن حنبل يقول كل حديث لا يعرفه بن معين فليس هو بحديث وفي رواية فليس هو ثابتا

யஹ்யா பின் மயீனுக்குத் தெரியாத எந்த ஹதீஸும் ஹதீஸாக இருக்க முடியாது என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்கள்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

قال بن الرومي وكنت عند أحمد فجاء رجل فقال يا أبا عبد الله انظر في هذه الأحاديث فإن فيها خطأ قال عليك بأبي زكريا فإنه يعرف الخطأ

நான் அஹ்மத் பின் ஹம்பலுடன் இருந்த போது ஒரு மனிதர் வந்தார். இதோ சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றில் பல தவறுகள் உள்ளன. அதை உங்களால் கூற முடியுமா என்று கேட்டார். அதற்கு அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அபூ ஜக்கரியா (எனும் யஹ்யா பின் மயீன்) அவர்களிடம் செல். அவர் தவறுகளைக் கண்டுபிடித்து விடுவார் என்றார்கள் என இப்னுர் ரூமி சொன்னார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

 وقال عبد الخالق بن منصور قلت لابن الرومي سمعت بعض أصحاب الحديث يحدث بأحاديث يحيى ويقول حدثني من لم تطلع الشمس على أكبر منه فقال وما يعجب سمعت بن المديني يقول ما رأيت في الناس مثله وقال أيضا قلت لابن الرومي سمعت أبا سعيد الحداد يقول الناس كلهم عيال على يحيى بن معين فقال صدق ما في الدنيا مثله قال وسمعت بن الرومي يقول ما رأيت أحدا قط يقول الحق في المشايخ غير يحيى

மனிதர்களில் இவருக்கு நிகரானவர் யாரையும் நான் காணவில்லை என்று இப்னுல் மதீனி கூறினார். தமது ஆசிரியர்களானாலும் தாட்சண்யமில்லாமல் அவர்கள் குறித்து உண்மையைச் சொன்னதில் யஹ்யா பின் மயீனைத் தவிர வேறு எவரையும் காணவில்லை என்று இப்னுர் ரூமி கூறினார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

وقال الإسماعيلي سئل الفرهياني عن يحيى وأحمد وعلي وأبي خيثمة قال أما علي فأعلمهم بالعلل وأما يحيى فأعلمهم بالرجال وأحمد بالفقه وأبو خيثمة من النبلاء وقال حنبل عن أحمد كان بن معين أعلمنا بالرجال

யஹ்யா பின் மயீன், அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனி, அபூ ஹைஸமா ஆகியோர் குறித்து ஃபர்ஹியானியிடம் கேட்கப்பட்டது. அலீ பின் மதீனி அவர்கள் நுணுக்கமான குறைபாடுகளை நன்கு அறிந்தவர். யஹ்யா பின் மயீன் அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர். அஹ்மத் பின் ஹம்பல் ஃபிக்ஹ் எனும் சட்டங்களை நன்கு அறிந்தவர். அபூ ஹைசமா கூர்மையான புத்தி உள்ளவர் என்றார். எங்களில் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர்களை நன்கு அறிந்தவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறினார்.

ஆதாரம் : தஹ்தீபுத் தஹ்தீப்

تهذيب التهذيب

وقال أبو عبيد القاسم بن سلام قال انتهى العلم إلى أربعة أبو بكر بن أبي شيبة أسردهم له وأحمد أفقههم فيه وعلي بن المديني أعلمهم به ويحيى بن معين أكتبهم له وفي رواية عنه أعلمهم بصحيحه وسقيمه بن معين وقال صالح بن محمد أعلم من أدركت بعلل الحديث بن المديني وبفقهه أحمد بن حنبل وأحفظهم عند المذاكرة أبو بكر بن أبي شيبة وأعلمهم بتصحيف المشائخ يحيى بن معين وفي رواية عنه يحيى أعلم بالرجال والكني وقال الآجري قلت لأبي داود أيما أعلم بالرجال علي أو يحيى قال يحيى عالم بالرجال وليس عند علي من خبر أهل الشام شيء

ஹதீஸ்களில் சரியானதையும், பலவீனமானதையும் நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். கல்வி நான்கு பேருக்குள் அடக்கம்., அபூபக்ர் பின் ஷைபா நன்கு மனனம் செய்தவர். அஹ்மத் பின் ஹம்பல் நன்கு சட்டம் அறிந்தவர். அலீ பின் மதீனி அவர்களில் அறிஞர். யஹ்யா பின் மயீன் சரியான ஹதீஸையும், தவறான ஹதீஸையும் நன்கு அறிந்தவர் என்று காசிம் பின் சலாம் கூறினார். தனக்கு அறிவித்தவர்களின் பெயர்க் குழப்பங்களை நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார். அறிவிப்பாளர்கள் பற்றி நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீன் ஆவார் என்று சாலிஹ் பின் முஹம்மத் கூறுகிறார். அறிவிப்பாளர்கள் குறித்து நன்கு அறிந்தவர் யஹ்யா பின் மயீனா? அலீ பின் மதீனியா என்று அபூதாவூத் இடம் கேட்டேன். அதற்கவர்கள் யஹ்யா பின் மயீன் தான் அறிவிப்பாளர் பற்றி அதிகம் அறிந்தவர். அலீ பின் மதீனிக்கு சிரியாவாசிகளான அறிவிப்பாளர் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியதாக ஆஜுர்ரீ கூறுகிறார்.

அது மட்டுமின்றி அறிவிப்பாளர்களை எடைபோடும் அறிஞர்களில் இரு சாரார் உள்ளனர். பெரிய குறைபாடுகள் இருந்தால் மட்டுமே அறிவிப்பாளரைப் பலவீனமாக்கும் அறிஞர்கள் ஒரு வகையினர். சின்னக் குறைபாடுகள் இருந்தால் அதன் காரணமாக பலவீனம் என்று சொல்ல மாட்டார்கள். ஹாகிம் போன்றவர்கள் இந்த வகையில் சேருவார்கள்.

சின்னக் குறை இருந்தால் கூட பலவீனமாக்கும் அறிஞர்களும் இருந்துள்ளனர். இப்படி அற்ப குறைபாடுகள் இருந்தால் கூட அவரைப் பலவீனப்படுத்தும் அறிஞர்களில் முதன்மையானவர் யஹ்யா பின் மயீன்.

ஒருவரைப் நம்பகமானவர் என்று சொல்வதற்கு அதிகத் தயக்கம் காட்டக் கூடிய அளவுக்கு கடும் போக்குடையவராகவும் அறிவிப்பாளர்களைப் பிரித்து மேய்வதில் மாபெரும் விற்பன்னராகவும், இவரது சொல்லையே அனைவரும் மேற்கோள் காட்டும் அளவுக்கு மாமேதையாகவும், ஹதீஸ்களை எப்படித் தான் மாற்றிப் போட்டாலும் அதைக் கண்டு பிடிக்கும் ஞானமுள்ளவர் யஹ்யா பின் மயீன் ஆவார் அவர் ஒருவரை நமபகமானவர் என்று முடிவு செய்கிறார் அலச வேண்டிய அளவுக்கு அலசியே முடிவு செய்துள்ளார்.

பிற்காலத்தில் அதாவது ஹிஜ்ரி 305ல் மரணித்த தாரகுத்னீ போன்றவர்கள் காரணம் இல்லாமல் செய்யும் விமர்சனம் நிற்காது.

இப்னு மயீன் விமர்சனத்தில் தவறே வராது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அவரது விமர்சனம் தவ்று என்பவர்கள் குறிப்பாக காலத்தில் பிந்தியவர்கள் தக்க ஆதாரம் காட்டினால் அந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்னு மயீன் விமர்சனத்தை தள்ள முடியும். இந்த விமர்சனம் அந்த தரத்தில் இருக்கவில்லை. என்வே இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பதே உண்மை.

இக்கருத்து சரியானதாக உள்ளதா என்பதை இனி ஆராய்வோம்.

இஸ்லாத்தின் கடமைகள் அனைத்தும் பருவ வயது வந்தவர்களுக்குத் தான் உரியதாகும். பருவ வயதை அடையாதவர்கள் செய்யும் தவறான செயல்களுக்காக அல்லாஹ் அவர்களைத் தண்டிக்க மாட்டான். செய்ய வேண்டிய வணக்கங்களை விடுவதற்காகவும் அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

مسند أحمد

24694 – حَدَّثَنَا عَفَّانُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثٍ: عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ، وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ، وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ “، وَقَدْ قَالَ حَمَّادٌ: ” وَعَنِ الْمَعْتُوهِ حَتَّى يَعْقِلَ “

மூன்று நபர்களை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டு விட்டது. (அதாவது அவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படாது.) தூங்குபவன் விழிக்கும் வரையிலும், சிறுவன் பருவ வயதை அடையும் வரையிலும், பைத்தியம் பிடித்தவன் தெளிவாகும் வரையிலும் எழுது கோல் உயர்த்தப்பட்டு விட்ட்து என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத்

சிறுவர்களின் செயல்கள் பதிவு செய்யப்படாது என்று அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். அல்லாஹ்வே தண்டிக்காத ஒன்றுக்காக நாம் தண்டிப்பது இந்த அடிப்படைக்கு எதிரானதாகும். பருவ வயது வரை தொழுகை கடமை இல்லை. அது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான் என்பதால் அதற்காக அடிக்க முடியாது.

மேலும் சிறுவர்களிடம் இரக்க குணத்துடன் நடக்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும்.

مسند أحمد

7073 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ (2) عَامِرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا فَلَيْسَ مِنَّا “

நம்மில் சிறுவர் மீது கருணையுடன் நடக்காதவரும், பெரியவர்களை மதிக்காதவரும் நம்மைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : அஹ்மத்

சிறுவர்கள் மீது கடமையாகாத காரியத்துக்காக அவர்களை அடிப்பது அவர்களுக்கு கருணை காட்டுவதற்கு எதிரானதாகும்.

صحيح مسلم

79 – (2328) حَدَّثَنَاهُ أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «مَا ضَرَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا قَطُّ بِيَدِهِ، وَلَا امْرَأَةً، وَلَا خَادِمًا، إِلَّا أَنْ يُجَاهِدَ فِي سَبِيلِ اللهِ، وَمَا نِيلَ مِنْهُ شَيْءٌ قَطُّ، فَيَنْتَقِمَ مِنْ صَاحِبِهِ، إِلَّا أَنْ يُنْتَهَكَ شَيْءٌ مِنْ مَحَارِمِ اللهِ، فَيَنْتَقِمَ لِلَّهِ عَزَّ وَجَلَّ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் யாரையும் அடித்ததே இல்லை. ஊழியரையோ பெண்களையோ அடித்ததில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

யாருடைய தவறுகள் பதிவு செய்யப்படுமோ அவர்களையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கவில்லை என்றால் சிறுவர்களை அடிப்பது சரியாகாது. அல்லாஹ்வின் தூதரிடம் அழகான முன்மாதிரி இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த முன்மாதியைக் கவனித்தால் சிறுவர்களை அடிக்கக் கூடாது என்பது உறுதியாகும்.

صحيح مسلم

78 – (2594) حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمِقْدَامِ وَهُوَ ابْنُ شُرَيْحِ بْنِ هَانِئٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ»

எந்தக் காரியத்தில் மென்மை உள்ளதோ அந்தக் காரியம் அதை அழகுற அமைக்கும். எந்தக் காரியத்தில் மென்மை போய் விட்டதோ அந்தக் காரியத்தின் அழகு கெடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரியுள்ளனர்,

நூல் : முஸ்லிம்

அனைத்திலும் மென்மையாக நடக்க வலியுறுத்தும் மார்க்கத்தில் சிறுவர்களை அடிக்க அனுமதி இருக்காது.

مسند أحمد

24427 – حَدَّثَنَا هَيْثَمُ بْنُ خَارِجَةَ قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا أَرَادَ اللهُ عَزَّ وَجَلَّ بِأَهْلِ بَيْتٍ خَيْرًا، أَدْخَلَ عَلَيْهِمُ الرِّفْقَ “

ஒரு குடும்பத்திற்கு அல்லாஹ் நல்லதை நாடினால் அவர்களிடம் மென்மையை ஏற்படுத்துகிறான் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : அஹ்மத்

குழந்தைகளை அடிக்கச் சொல்லும் ஹதீஸ் இஸ்லாத்தின் இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ளதால் கருத்து அடிப்படையில் அது தவறான ஹதீஸாகும்.

அடிக்காமல் மென்மையாக சிறுவர்களுக்கு அறிவுரை கூறி பயிற்சி அளிக்க வேண்டுமே தவிர அடிப்பதன் மூலம் வணக்கத்தில் வெறுப்பை விதைக்க கூடாது.