அபூபக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸ் நிலை?

எனக்குப் பின் அபூ பக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்களா?

பதில்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் சரியானவையா என்பதில் அறிஞர்கள் முரண்பட்ட கருத்தில் உள்ளனர்.

ஹுதைபா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ்

முஸ்னத் அஹ்மத், திர்மிதீ, பைஹகீ, ஹாகிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

அந்த ஹதீஸ்கள் இவை தான்

مسند أحمد

23245 – حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي: أَبِي  بَكْرٍ، وَعُمَرَ “

سنن الترمذي

3662 – حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ، وَعُمَرَ»

السنن الكبرى للبيهقي

10056 – حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ , عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ , عَنْ رِبْعِيٍّ , عَنْ حُذَيْفَةَ , قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ “

المستدرك على الصحيحين للحاكم

4451 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ إِسْحَاقَ الْفَقِيهُ، وَعَلِيُّ بْنُ حَمْشَاذَ الْعَدْلُ، وَأَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الصَّيْدَلَانِيُّ، وَأَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْبَغَوِيُّ، بِبَغْدَادَ، وَأَبُو أَحْمَدَ بَكْرُ بْنُ مُحَمَّدٍ الصَّيْرَفِيُّ بِمَرْوَ، قَالُوا: ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ الْحَارِثِ الْوَاسِطِيُّ، ثنا أَبُو إِسْمَاعِيلَ حَفْصُ بْنُ عُمَرَ الْأَيْلِيُّ، ثنا مِسْعَرُ بْنُ كِدَامٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ وَعُمَرَ، وَاهْتَدُوا بِهَدْي عَمَّارٍ، وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ أُمِّ عَبْدٍ»  [التعليق – من تلخيص الذهبي] 4451 – صحيح

இதை ரிப்யீ பின் கிராஷ் என்பார் வழியாக அப்துல் மலிக் பின் உமைர் அறிவிப்பதாக இந்த நூல்களில் கூறப்பட்டுள்ளது.  ரிப்யீ பின் கிராஷ் அவர்களை அப்துல் மலிக் சந்தித்து ஹதீஸ்களை அறிவித்து உள்ளார். நான் கேட்டேன் என்ற சொல்லைப் பயன்படுத்தி அறிவித்து இருக்கிறார். இந்த ஹதீஸில் நான் கேட்டேன் என்று  கூறப்படாவிட்டாலும் இந்த ஹதீஸை அவர் ரிப்யீ என்பாரிடம் செவியுறவில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதற்கு ஆதாரமாக இப்னு மாஜாவில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

سنن ابن ماجة

97 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُؤَمَّلٌ قَالَا حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ مَوْلًى لِرِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَا أَدْرِي مَا قَدْرُ بَقَائِي فِيكُمْ فَاقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي وَأَشَارَ إِلَى أَبِي بَكْرٍ وَعُمَرَ

இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

1, ஹுதைபா எனும் நபித்தோழர் வழியாக ரிப்யீ பின் கிராஷ்

2, ரிப்யீ பின் கிராஷ் வழியாக அவரது அடிமை

3, அவரது அடிமை வழியாக அப்துல் மலிக் பின் உமைர்

என்று அமைந்துள்ளது. இதன் படி அப்துல் மலிக் பின் உமைர் என்பார் ரிப்யீ என்பாரிடம் நேரடியாக இதைக் கேட்கவில்லை. மாறாக ரிப்யீ அறிவித்ததை அவரது அடிமையிடம் தான் கேட்டுள்ளார் என்று இதிலிருந்து தெரிகிறது.

எனவே ரிப்யீ பின் கிராஷ் வழியாக அப்துல் மலிக் என்ற சொல் மற்ற அறிவிப்புகளில் வந்தாலும் இந்த ஹதீஸின் அடிப்படையில் இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்று இந்தக் கருத்தில் உள்ள அறிஞர்கள் கூறுகின்றனர்.

இது சரியான காரணம் என்றாலும் இப்னு மாஜாவில் உள்ள ஹதீஸ் பலவீனமானதாக உள்ளது. ரிப்யீ பின் கிராஷ் என்பாரின் அடிமை என்பவர் யார் என அறியப்படாதவராக உள்ளார். எனவே பலவீனமான ஹதீஸை ஆதாரமாக கொண்டு ரிப்யீ என்பாரிடம் அப்துல் மலிக் இந்த ஹதீஸை செவியுறவில்லை என்பது ஏற்புடையதல்ல.

இருவரும் சந்திக்க வாய்ப்பு உள்ளது.

ரிப்யீ என்பாரின் மரணம் ஹிஜ்ரி 104 ஆம் ஆண்டாகும்.

அப்துல் மலிக் என்பாரின் மரணம் 136 ஆம் ஆண்டாகும்.

எனவே இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதே சரியான கருத்தாகும்.

மேலும் இப்னுமாஜாவில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் இருவரும் சந்தித்துள்ளனர் என்பதையும் அவரிடமிருந்து இவர் செவியுற்றுள்ளார் என்பதையும் உறுதி செய்கின்றன.

سنن ابن ماجة

2420 حدثنا محمد بن بشار حدثنا أبو عامر حدثنا شعبة عن عبد الملك بن عمير قال سمعت ربعي بن حراش يحدث عن حذيفة عن النبي صلى الله عليه وسلم أن رجلا مات فقيل له ما عملت فإما ذكر أو ذكر قال إني كنت أتجوز في السكة والنقد وأنظر المعسر فغفر الله له قال أبو مسعود أنا قد سمعت هذا من رسول الله صلى الله عليه وسلم.

கடனை தள்ளுபடி செய்த காரணத்தால் ஒரு வியாபாரியை அல்லாஹ் மன்னித்தான் என்ற கருத்தில் உள்ள மேற்கண்ட ஹதீஸை ரிப்யீ என்பார் வழியாக அப்துல் மலிக் என்பார் அறிவிப்பதாக் கூறப்பட்டுள்ளது. அப்படி கூறும் போது நான் ரிபியியிடம் செவியுற்றேஏன் என்ற சொல்லைப் பயன்படுத்தி இதை அறிவித்துள்ளார்.

சந்தித்து செவியுற்றது உறுதியாகி விட்டதால் மேற்கண்ட ஹதீஸ்களை அவர் செவியுற்று உள்ளார் என்று முடிவுசெய்வதே ஹதீஸ் கலை விதியாகும்.

இதன் படி இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்ற கருத்தே சரியானது.

இதை தவிர இன்னும் பல அறிவிப்புகள் உள்ளன. அவை அனைத்தும் பலவீனமாக உள்ளன.

அபூ பக்ரையும் உமரையும் பின்பற்றுங்கள் என்பது மார்க்க சம்மந்தமான விஷயங்களுக்கு அல்ல. நிர்வாக விஷயங்களுக்கானது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

முழுமையாக்கப்பட்ட மார்க்கம்

இம்மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ் முழுமைப்படுத்தி நமக்கு வழங்கி விட்டான். அதில் அல்லாஹ் எந்தக் குறையும் வைக்கவில்லை.

இதோ அல்லாஹ் கூறுவதைக் கேளுங்கள்!

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

திருக்குர்ஆன் 5:3

நபிகள் நாயகத்தின் காலத்திலேயே இம்மார்க்கம் முழுமைப்படுத்தி வழங்கப்பட்டது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகத்தின் காலத்துக்குப் பின்னால் உருவாக்கப்பட்டவை இஸ்லாம் அல்ல என்பது தான் இதன் பொருள்.

மத்ஹப்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் உருவாக்கப்பட்டவை என்பதால் அவற்றுக்கும், இஸ்லாத்துக்கும் சம்மந்தமில்லை என்பது உறுதி.

எனக்குப் பின்னால் உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். அவற்றில் மத்ஹபும் அடங்கும் என்பதில் சந்தேகமில்லை.

سنن النسائي 1578 –

أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»، ثُمَّ يَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ»، وَكَانَ إِذَا ذَكَرَ السَّاعَةَ احْمَرَّتْ وَجْنَتَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ كَأَنَّهُ نَذِيرُ جَيْشٍ يَقُولُ: صَبَّحَكُمْ مَسَّاكُمْ، ثُمَّ قَالَ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ أَوْ عَلَيَّ، وَأَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மதாகிய எனது நடைமுறையாகும். காரியங்களில் மிகத்தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் :  நஸாயீ 1560

صحيح البخاري 6584 –

قَالَ أَبُو حَازِمٍ: فَسَمِعَنِي النُّعْمَانُ بْنُ أَبِي عَيَّاشٍ، فَقَالَ: هَكَذَا سَمِعْتَ مِنْ سَهْلٍ؟ فَقُلْتُ: نَعَمْ، فَقَالَ: أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، لَسَمِعْتُهُ وَهُوَ يَزِيدُ فِيهَا: ” فَأَقُولُ إِنَّهُمْ مِنِّي، فَيُقَالُ: إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ: سُحْقًا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي ” وَقَالَ ابْنُ عَبَّاسٍ: سُحْقًا: بُعْدًا يُقَالُ: {سَحِيقٌ} [الحج: 31]: بَعِيدٌ، سَحَقَهُ وَأَسْحَقَهُ أَبْعَدَهُ

நான் உங்களுக்கு முன்பே அல்கவ்ஸர் தடாகத்திற்குச் சென்று காத்திருப்பேன். என்னிடம் வருபவர் அவர் அதை அருந்துவார். அதை அருந்துபவருக்கு தாகம் ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள். அவர்களை நான் அறிந்துகொள்வேன். என்னை அவர்களும் அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும், அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். (இறைவா!) இவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று நான் கூறுவேன். அதற்கு உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியதை நீங்கள் அறியமாட்டீர்கள் என்று சொல்லப்படும். உடனே நான் எனக்குப் பின்னால் (மார்க்கத்தை) மாற்றியவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!” என்று (இரண்டு முறை) கூறுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 6584

புகாரி 6585 வது ஹதீஸில்

صحيح البخاري إِنَّكَ لاَ عِلْمَ لَكَ بِمَا أَحْدَثُوا بَعْدَكَ، إِنَّهُمُ ارْتَدُّوا عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى

“நபியே உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டார்கள்” என்று அல்லாஹ் கூறுவான்

என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகாரி 6587 வது ஹதீஸில்

صحيح البخاري إِنَّهُمُ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ القَهْقَرَى

“நபியே உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டார்கள்” என்று அல்லாஹ் கூறுவான்

என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத வழிகளை உருவாக்கினால் அவர்களும் வெற்றி பெற முடியாது என்று இந்த ஹதீஸ்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றன. அவர்களைவிட பண்மடங்கு தகுதியில் குறைந்த இமாம்களுக்கு அந்த அதிகாரம் இருக்குமா?

صحيح البخاري 2697 –

حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்  : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 2697

صحيح مسلم (1718)

وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ أَبِي عَامِرٍ، قَالَ عَبْدٌ: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِيُّ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ، عَنْ رَجُلٍ لَهُ ثَلَاثَةُ مَسَاكِنَ، فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا، قَالَ: يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِي مَسْكَنٍ وَاحِدٍ، ثُمَّ قَالَ: أَخْبَرَتْنِي عَائِشَةُ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ»

நமது கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 3243

எனவே மார்க்க விஷயத்தில் அபூபக்ர் உமரைப் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் இந்த ஹதீஸைப் புரிந்து கொள்ளக் கூடாது.