ஒரு பெண்ணுக்கு தந்தையோ, தந்தைவழி மஹ்ரமான ஆண் உறவினர்களோ  இல்லாத பட்சத்தில் அவளது திருமணத்திற்கு பொறுப்பாளராக (வலிய்யாக) யாரை நியமிப்பது?

பதில்

பெண்கள் தாமாக திருமணம் செய்யாமல் பொறுப்பாளர் மூலம் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கருத்து விரிவாக ஆராய்ந்து அறிய வேண்டிய சட்டமாகும்.

பொறுப்பாளர் இல்லாமல் இல்லாமல் எந்த திருமணமும் இல்லை என்ற கருத்தில் நாம் அறிந்த வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்துமே பலவீனமான செய்திகளாக உள்ளன. அவற்றை இங்கே விளக்கினால் அதுவே தனி நூலாகி விடும்.

அது அல்லாத வேறு ஆதாரங்கள் பல உள்ளன.

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ (221)2

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும், மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 2:221

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போரை திருமணம் செய்யக் கூடாது என்பதை விளக்கும் இவ்வசனத்தில் ஆண்கள் திருமணம் செய்வது பற்றிக் கூறும் போது நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் திருமணம் செய்வது பற்றிக் கூறும் போது உங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்காதீர்கள் என்ரு சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் தாமாகத் திருமணம் செய்தல் கிடையாது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

قَالَ إِنِّي أُرِيدُ أَنْ أُنْكِحَكَ إِحْدَى ابْنَتَيَّ هَاتَيْنِ عَلَى أَنْ تَأْجُرَنِي ثَمَانِيَ حِجَجٍ فَإِنْ أَتْمَمْتَ عَشْرًا فَمِنْ عِنْدِكَ وَمَا أُرِيدُ أَنْ أَشُقَّ عَلَيْكَ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّالِحِينَ (27)28

“எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.

திருக்குர் ஆன் 28:27

மூஸா நபியவர்கள் மத்யன் எனும் நகருக்கு அடைக்கலம் தேடி சென்ற போது ஒருவர் அடைக்கலம் கொடுத்தார். அவர் மூஸா நபிக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுக்க விரும்பி எட்டு ஆண்டுகள் என்னிடம் வேலை செய்தால் உனக்கு என் மகளைத் திருமணம் செய்து தர்வதாக கூறியதை மூஸா நபி ஏற்றுக் கொள்கிறார்கள். பெண்ணின் தந்தை தனது மகளுக்கு திருமணம் வைத்துள்ளதால் பெண்கள் தாமாக திருமணம் செய்து கொள்ளுதல் இல்லை என்று அறிய முடியும்.

இது  கன்னிப் பெண்களுக்கு மட்டும் உரிய சட்டமாகும். மறுமணம் செய்யும் பெண்களுக்கு பொறுப்பாளர் தேவை இல்லை. சாட்சிகள் முன்னிலையில் மனமகள் தானே திருமணம் செய்து கொள்ளலாம்.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (232)2

பெண்களை விவாகரத்துச் செய்த பின் அவர்கள் தமது காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் 2:232

காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள் என்ற வாசகத்தில் இருந்து அவர்கள் தாமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ (234)2

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:234

صحيح مسلم

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَا: حَدَّثَنَا مَالِكٌ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَاللَّفْظُ لَهُ، قَالَ: قُلْتُ لِمَالِكٍ: حَدَّثَكَ عَبْدُ اللهِ بْنُ الْفَضْلِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا، وَالْبِكْرُ تُسْتَأْذَنُ فِي نَفْسِهَا، وَإِذْنُهَا صُمَاتُهَا»؟ قَالَ: نَعَمْ

صحيح مسلم

وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ، سَمِعَ نَافِعَ بْنَ جُبَيْرٍ، يُخْبِرُ عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا، وَالْبِكْرُ تُسْتَأْمَرُ، وَإِذْنُهَا سُكُوتُهَا»،

தன் விஷயமாக முடிவு எடுக்க விதவை பொறுப்பாளரை விட அதிக உரிமை படைத்தவர் ஆவார். கன்னிப்பெண்ணிடம் உத்தரவு பெற வேண்டும். அவளது மவுனம் அவளது சம்மதமாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

விவாகரத்து செய்யப்பட்ட பெண்க்ளும் கணவன இழந்த பெண்களும் தமாகவே திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்துள்ளது.

مصنف عبد الرزاق الصنعاني

10417 – عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا جَعْفَرٌ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ قَالَ: خَطَبَ أَبُو طَلْحَةَ أُمَّ سُلَيْمٍ قَبْلَ أَنْ يُسْلِمَ، فَقَالَتْ: «أَمَا إِنِّي فِيكَ لَرَاغِبَةٌ، وَمَا مِثْلُكَ يُرَدُّ، وَلَكِنَّكَ رَجُلٌ كَافِرٌ، وَأَنَا امْرَأَةٌ مُسْلِمَةٌ، فَإِنْ تُسْلِمْ فَذَلِكَ مَهْرِي، لَا أَسْأَلُكَ غَيْرَهُ»، فَأَسْلَمَ أَبُو طَلْحَةَ وَتَزَوَّجَهَا

அபூ தல்ஹா அவர்கள் இஸ்லாமை ஏற்பதற்கு முன் (அனஸ் ரலியின் தாயாகிய) உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் திருமணம் செய்ய கேட்டுக் கொண்டார். அதற்கு உம்மு சுலைம் அவர்கள் உம்மை நான் விரும்புகிறேன். உம் போன்றவரை நிராகரிக்க முடியாது. இருந்தாலும் நீர் இஸ்லாமை ஏற்காதவராக உள்ளீர். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். நீர் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அதுவே எனக்கு மஹராக இருக்கட்டும். வேறு எதுவும் உம்மிடம் நான் கேட்க மாட்டேன் எனக் கூறினார். அபூதல்ஹா இஸ்லாமை ஏற்று அவரை மணந்து கொண்டார்.

நூல்: முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்

உம்முஸுலைம் அவர்கள் தாமாகவே மனம் பேசி மஹர் உள்ளிட்டவற்றை முடிவு செய்து தாமாகவே மணந்து கொண்டார்கள்.

السنن الكبرى للبيهقي

14038 – أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ يَحْيَى، ثنا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، أنبأ الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، أنبأ الشَّافِعِيُّ، أنبأ مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الْأَسْوَدِ بْنِ سُفْيَانَ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ فَاطِمَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهَا فِي عِدَّتِهَا مِنْ طَلَاقِ زَوْجِهَا: ” إِذَا حَلَلْتِ فَآذِنِينِي ” قَالَتْ: فَلَمَّا حَلَلْتُ أَخْبَرْتُهُ أَنَّ مُعَاوِيَةَ، وَأَبَا جَهْمٍ رَضِيَ اللهُ عَنْهُمَا خَطَبَانِي، فَقَالَ رَسُولُ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ: ” أَمَّا مُعَاوِيَةُ فَصُعْلُوكٌ لَا مَالَ لَهُ، وَأَمَّا أَبُو جَهْمٍ، فَلَا يَضَعُ عَصَاهُ عَنْ عَاتِقِهِ انْكِحِي أُسَامَةَ ” قَالَتْ: فَكَرِهْتُهُ، فَقَالَ: ” انْكِحِي أُسَامَةَ ” فَنَكَحْتُهُ، فَجَعَلَ اللهُ فِيهِ خَيْرًا وَاغْتَبَطْتُ بِهِ. رَوَاهُ مُسْلِمٌ فِي الصَّحِيحِ، عَنْ يَحْيَى بْنِ يَحْيَى، عَنْ مَالِكٍ

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) விவாகரத்துக்காக இத்தா இருந்த போது நீ இத்தாவை முழுமையாக்கியதும் எனக்குத் தெரிவிப்பாயாக!” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்கமாட்டார். முஆவியோ ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமாவை மணந்துகொள்” என்று கூறினார்கள். நான் உசாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீ உசாமாவை மணந்துகொள்” என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்துகொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.

நூல் : பைஹகீ

விவாகரத்து செய்யப்பட்ட ஃபாதிமா பின்த் கைஸ் ரலி அவர்கள் தாமாகத் தான் முடிவு செய்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

கணவனை இழந்த பெண்களும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் தாமாக திருமணம் செய்து கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருந்தாலும் பொறுப்பாளர் மூலம் திருமணம் செய்வதற்கும் அவருக்கு உரிமை உள்ளது.

صحيح البخاري

4005 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يُحَدِّثُ: أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ، حِينَ تَأَيَّمَتْ حَفْصَةُ بِنْتُ عُمَرَ مِنْ خُنَيْسِ بْنِ حُذَافَةَ السَّهْمِيِّ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ شَهِدَ بَدْرًا، تُوُفِّيَ بِالْمَدِينَةِ، قَالَ عُمَرُ: فَلَقِيتُ عُثْمَانَ بْنَ عَفَّانَ، فَعَرَضْتُ عَلَيْهِ حَفْصَةَ، فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ، قَالَ: سَأَنْظُرُ فِي أَمْرِي، فَلَبِثْتُ لَيَالِيَ، فَقَالَ: قَدْ بَدَا لِي أَنْ لاَ أَتَزَوَّجَ يَوْمِي هَذَا، قَالَ عُمَرُ: فَلَقِيتُ أَبَا بَكْرٍ، فَقُلْتُ: إِنْ شِئْتَ أَنْكَحْتُكَ حَفْصَةَ بِنْتَ عُمَرَ، فَصَمَتَ أَبُو بَكْرٍ فَلَمْ يَرْجِعْ إِلَيَّ شَيْئًا، فَكُنْتُ عَلَيْهِ أَوْجَدَ مِنِّي عَلَى عُثْمَانَ، فَلَبِثْتُ لَيَالِيَ ثُمَّ «خَطَبَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْكَحْتُهَا إِيَّاهُ» فَلَقِيَنِي أَبُو بَكْرٍ فَقَالَ: لَعَلَّكَ وَجَدْتَ عَلَيَّ حِينَ عَرَضْتَ عَلَيَّ حَفْصَةَ فَلَمْ أَرْجِعْ إِلَيْكَ؟ قُلْتُ: نَعَمْ، قَالَ: فَإِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرْجِعَ إِلَيْكَ فِيمَا عَرَضْتَ، إِلَّا أَنِّي قَدْ عَلِمْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ ذَكَرَهَا، فَلَمْ أَكُنْ لِأُفْشِيَ سِرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَوْ تَرَكَهَا لَقَبِلْتُهَا

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் குனைஸ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ (ரலி) அவர்கள் இறந்து ஹஃப்ஸா விதவையான போது (அவர்களை வேறொருவருக்குத் திருமணம் முடித்து வைக்க எண்ணினார்கள்.)

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: எனவே, நான் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று கூறினேன். (அதற்கு) உஸ்மான் (ரலி) அவர்கள், இந்த என் விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது; என்று சொன்னார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு (நான் உஸ்மானைச் சந்தித்த போது) அவர் இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன் என்று கூறினார்கள். ஆகவே, நான் அபூபக்ர் அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன் என்று கூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே, உஸ்மான் அவர்களை விட அபூபக்ர் அவர்கள் மீதே நான் மிகவும் மன வருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒரு நாள்) அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்த போது, நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா அவர்களைக் குறித்துச் சொன்ன போது நான் உங்களுக்கு பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது மன வருத்தம் இருக்கக் கூடும்’ என்று கூறினார்கள். நான், ஆம் என்று கூறினேன். (அதற்கு அபூபக்ர் -ரலி) அவர்கள் நீங்கள் கூறிய போது நான் உங்களுக்கு பதில் கூறாததற்குக் காரணம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த ரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான், உங்களுக்கு பதிலேதும் கூறவில்லை.) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 4005

ஹஃப்ஸா (ரலி) விதவையான போது அவர்கள் தாமாக திருமணம் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்று இருந்தாலும் தனது தந்தை பொறுப்பாளராக இருந்து மனம் செய்விப்பதை ஏற்றுக் கொண்டதால் உமர் (ரலி) மனம் செய்து கொடுத்தார்கள்.

صحيح البخاري

5130 – حَدَّثَنَا أَحْمَدُ ابْنُ أَبِي عَمْرٍو، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ يُونُسَ، عَنِ الحَسَنِ، {فَلاَ تَعْضُلُوهُنَّ} [البقرة: 232] قَالَ: حَدَّثَنِي مَعْقِلُ بْنُ يَسَارٍ، أَنَّهَا نَزَلَتْ فِيهِ، قَالَ: زَوَّجْتُ أُخْتًا لِي مِنْ رَجُلٍ فَطَلَّقَهَا، حَتَّى إِذَا انْقَضَتْ عِدَّتُهَا جَاءَ يَخْطُبُهَا، فَقُلْتُ لَهُ: زَوَّجْتُكَ وَفَرَشْتُكَ وَأَكْرَمْتُكَ، فَطَلَّقْتَهَا، ثُمَّ جِئْتَ تَخْطُبُهَا، لاَ وَاللَّهِ لاَ تَعُودُ إِلَيْكَ أَبَدًا، وَكَانَ رَجُلًا لاَ بَأْسَ بِهِ، وَكَانَتِ المَرْأَةُ تُرِيدُ أَنْ تَرْجِعَ إِلَيْهِ، فَأَنْزَلَ اللَّهُ هَذِهِ الآيَةَ: {فَلاَ تَعْضُلُوهُنَّ} [البقرة: 232] فَقُلْتُ: الآنَ أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَزَوَّجَهَا إِيَّاهُ

5130 மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அந்த (2:232ஆவது) வசனம் என்னைக் குறித்தே அருளப்பட்டது: என்னுடைய ஒரு சகோதரியை ஒருவருக்கு நான் மணமுடித்துக் கொடுத்திருந்தேன். அவளை அவர் விவாக விலக்குச் செய்துவிட்டார். அவளுடைய இத்தாக் காலத் தவணை முடிந்த போது, அவர் அவளை மீண்டும் பெண் கேட்டு வந்தார். அப்போது நான் அவரிடம், நான் (என் சகோதரியை) உங்களுக்கு மணமுடித்துக் கொடுத்து மஞ்சத்திலே உங்களை இருக்கச் செய்து கண்ணியப்படுத்தினேன். ஆனால், அவளை நீங்கள் விவாகரத்துச் செய்துவிட்டு, இப்போது (மீண்டும்) அவளை பெண் கேட்டு வந்துள்ளீர்கள். இல்லை! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இனி ஒரு போதும் அவள் உங்களிடம் திரும்ப மாட்டாள் என்று சொன்னேன். அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். என் சகோதரி அவரிடமே திரும்பச் சென்று வாழ விரும்பினாள். அப்போது தான் அல்லாஹ், …அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள் எனும் இந்த (2:232ஆவது) வசனத்தை அருளினான். ஆகவே, நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், இப்போது நான் (அல்லாஹ் கூறியபடியே) செய்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறிவிட்டு, மீண்டும் அவருக்கே என் சகோதரியை மணமுடித்து வைத்தேன்.

நூல் : புகாரி 5130

விவாகரத்து செய்யப்பட்டவர் தானாக திருமணம் செய்ய உரிமை பெற்று இருந்தாலும் அவரது சகோதார் முன்னின்று திருமனம் செய்விப்பதை ஏற்றுக் கொண்டதால் சகோதார் திருமணம் செய்து வைத்துள்ளார்.

صحيح البخاري

6969 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ القَاسِمِ: أَنَّ امْرَأَةً مِنْ وَلَدِ جَعْفَرٍ، تَخَوَّفَتْ أَنْ يُزَوِّجَهَا وَلِيُّهَا وَهِيَ كَارِهَةٌ، فَأَرْسَلَتْ إِلَى شَيْخَيْنِ مِنَ الأَنْصَارِ: عَبْدِ الرَّحْمَنِ وَمُجَمِّعٍ ابْنَيْ جَارِيَةَ، قَالاَ: فَلاَ تَخْشَيْنَ، فَإِنَّ خَنْسَاءَ بِنْتَ خِذَامٍ «أَنْكَحَهَا أَبُوهَا وَهِيَ كَارِهَةٌ، فَرَدَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ» قَالَ سُفْيَانُ: وَأَمَّا عَبْدُ الرَّحْمَنِ، فَسَمِعْتُهُ يَقُولُ: عَنْ أَبِيهِ: «إِنَّ خَنْسَاءَ»

கிதாம் என்பவரின் புதல்வியான கன்ஸாவை அவருடைய தந்தை அவருக்குப் பிடிக்காத ஒருவருக்கு மணமுடித்து வைத்தார். (இது குறித்து அப்பெண்மணி முறையிட்ட போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்திருமணத்தை ரத்துச்செய்தார்கள்.

நூல் : புகாரி 6969

பெண்ணின் சம்மதமில்லாமல் பொறுப்பாளர் திருமணம் செய்வித்தால் அது செல்லாது என்ற அளவுக்கு பெண்களுக்கு உரிமை உள்ளது.

கன்னிப் பெண்கள் தாமாக திருமணம் செய்து கொள்ள முடியாது. பொறுப்பாளர் மூலம் தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் பெண்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடாகும். எனவே தான் பெண்களின் சம்மதம் இல்லாமல் பொறுப்பாளர் திருமணம் செய்விக்க அனுமதி இல்லை.

صحيح البخاري

5136 – حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، حَدَّثَهُمْ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ، وَلاَ تُنْكَحُ البِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ إِذْنُهَا؟ قَالَ: «أَنْ تَسْكُتَ»

உத்தரவு பெறாமல் கணவனை இழந்த பெண்களுக்கு திருமணம் செய்விக்கக் கூடாது. அனுமதி பெறாமல் கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்விக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி என நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவளது மவுனம் தான் என்று பதிலளித்தார்கள்.

நூல் : புகாரி 5136

கன்னிப் பெண்ணாக இருந்தாலும் அவளது சம்மதம் பெறாமல் தந்தையோ மற்ற பொருப்பாளரோ திருமணம் செய்து வைக்க அனுமதி இல்லை.

தந்தையோ மற்ற பொறுப்பாளரோ ஒரு பெண்ணுக்கு இல்லாவிட்டால் அல்லது அவளுக்கு பிடித்தவனை திருமணம் செய்து கொடுக்க மறுத்தால் அந்தப் பொறுப்பை தனக்கு நம்கமான சமுதாயத் தலைவரிடம் ஒப்படைக்கலாம். அவர் மூலம் திருமணம் நடத்திக் கொள்ளலாம்.

இதற்கான ஆதாரம் வருமாறு

5132 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ المِقْدَامِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو حَازِمٍ، حَدَّثَنَا سَهْلُ بْنُ سَعْدٍ، كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسًا، فَجَاءَتْهُ امْرَأَةٌ تَعْرِضُ نَفْسَهَا عَلَيْهِ، فَخَفَّضَ فِيهَا النَّظَرَ وَرَفَعَهُ، فَلَمْ يُرِدْهَا، فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ: زَوِّجْنِيهَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَعِنْدَكَ مِنْ شَيْءٍ؟» قَالَ: مَا عِنْدِي مِنْ شَيْءٍ، قَالَ: «وَلاَ خَاتَمٌ مِنْ حَدِيدٍ؟» قَالَ: وَلاَ خَاتَمٌ مِنْ حَدِيدٍ، وَلَكِنْ أَشُقُّ بُرْدَتِي هَذِهِ فَأُعْطِيهَا النِّصْفَ، وَآخُذُ النِّصْفَ، قَالَ: «لاَ، هَلْ مَعَكَ مِنَ القُرْآنِ شَيْءٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَقَدْ زَوَّجْتُكَهَا بِمَا مَعَكَ مِنَ القُرْآنِ»

ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண்மணி அவர்களிடம் வந்து தம்மை மணந்துகொள்ளுமாறு கோரினார். அவளை விட்டும் தமது பார்வையைத் தாழ்த்திக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிறகு பார்வையை உயர்த்தினார்கள். ஆனால், அந்தப் பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மணந்துகொள்ள) விரும்பவில்லை. அப்போது, நபியவர்களின் தோழர்களில் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்! என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (மஹ்ராகச் செலுத்த) உன்னிடம் (பொருள்) ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள். அவர், என்னிடம் ஏதும் இல்லை என்று பதிலளித்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இரும்பினால் ஆன மோதிரம் கூட இல்லையா? என்று கேட்டார்கள். அவர், (இரும்பு) மோதிரம் கூட இல்லை. ஆயினும், (நான் கீழாடையாக உடுத்திக்கொள்ளும்) என்னுடைய இந்தப் போர்வையை இரண்டாகக் கிழித்து அவளுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டு மீதிப் பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இல்லை! குர்ஆனில் ஏதேனும் (உமக்கு மனனம்) உண்டா? என்று கேட்டார்கள். அவர், ஆம் என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், (அப்படியானால்) நீர் செல்லலாம்! உம்முடனுள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்துவைத்தேன் என்றனர்.

நூல் : புகாரி 5132

ஒரு பெண் வந்து தன்னை நபியிடம் ஒப்படைக்கிறார். தனி விஷயமாக முடிவு செய்யும் பொறுப்பை வழங்குகிறார். உன் தந்தையை அழைத்து வா அல்லது பொறுப்பாளரை அழைத்து வா என்று கூறவில்லை. இன்னொருவர் தனக்கு மணமுடித்து தருமாறு கேட்ட போது இவளது தந்தையிடம் போய் பெண் கேட்டுப்பார் என்று நபிகள் கூறவில்லை. அந்தப் பெண் பொறுப்பை நபிகளிடம் ஒப்படைத்து விட்டதால் நபிகளே பொறுப்பாளராக இருந்து மண முடித்து வைக்கிறார்கள். ஒரு பெண் விரும்பினால் தனது தந்தை போன்ற பொறுப்பாளர்களை விடுத்து அந்த பொறுப்பை சமுதாயத் தலைவரிடம் ஒப்படைக்கலாம்.  அப்படி ஒப்படைக்கப்பட்டால் அவர் பொறுப்பாளராக இருந்து மணமுடித்து வைக்கலாம்.

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...