127. அச்சமற்ற நிலையில் தொழும் முறை
போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (4:103) கூறுகிறான்.
ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறப்படவில்லை.
அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் செயல்படுத்திக் காட்டியுள்ளனர். அதைத் தான் அல்லாஹ் இங்கே சுட்டிக் காட்டுகிறான்.
திருக்குர்ஆன் கூறும் சில சட்டங்களை விளங்கிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!