135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா?

பலிபீடங்களில் அறுக்கப்பட்டவைகளை உண்ணக் கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90, 70:43) கூறப்பட்டுள்ளது.

பீடத்தை நட்டி வைத்து அதற்காக அறுத்துப் பலியிடும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. அன்றைக்கு இவ்வழக்கம் இருந்ததால் இது மட்டும் கூறப்படுகிறது.

படுக்கையாகப் போடப்பட்ட கற்களானாலும், மரத்தால் செய்யப்பட்ட வழிபாட்டுப் பொருட்களானாலும், உயிருடன் இருக்கின்ற மனிதரானாலும், இறந்தவரின் அடக்கத்தலமானாலும், அவற்றுக்காக அறுத்துப் பலியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றே இவ்வசனங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு பொருள் கொள்வதற்கு ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.

அதிக விபரத்திற்கு 427வது குறிப்பைக் காண்க!