215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை

இவ்வசனத்தைச் (10:62) சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத் தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை.

மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை கொள்வதும், இறைவனை அஞ்சுவதுமே அந்த இலக்கணம்.

ஒருவர் இறைவனை உண்மையாகவே நம்புகிறாரா? இறைவனை அஞ்சுகிறாரா? என்பதை யாராலும் அறிய முடியாது. ஏனெனில் இவ்விரு தன்மைகளும் வெளியில் தெரிபவை அல்ல. உள்ளங்களில் இருப்பவையாகும்.

யார் இறைநேசர்கள் என்பதை மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. எனவே மகான்களைக் கொண்டாடும் பேச்சுக்கே இடமில்லை.

மேலும் நம்முடைய வெளிப்படையான பார்வைக்கு ஒருவர் எவ்வளவு நல்லவராகத் தெரிந்தாலும் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர இறைவனுடைய பார்வையில் அவர் நல்லவர் தான் என்று நாம் தீர்மானிக்க இயலாது.

உஸ்மான் பின் மழ்வூன் என்ற நபித்தோழர் மரணித்த போது அவரை நோக்கி “அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்துவான்” என்று உம்முல் அலா என்ற பெண்மணி கூறினார்கள். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அவரைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று உனக்கு எவ்வாறு தெரியும்“ என்று கேட்டு கண்டித்தார்கள்.

பார்க்க : புகாரீ 1243

உஸ்மான் பின் மழ்வூன் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர். ஹிஜ்ரத் செய்தவர். வெளிப்படையான செயல்களைப் பார்த்து ஒருவரை இறைநேசர் என்று சொல்வதாக இருந்தால் இவரைச் சொல்லலாம். ஆனாலும் இவர் மரணித்த பிறகு “அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தி விட்டான்” என்று உம்முல் அலா அவர்கள் தீர்மானித்ததை நபியவர்கள் கண்டிக்கிறார்கள்.

போர்க்களத்தில் ஒருவர் வீரதீரத்துடன் போரிடுவதைக் கண்ட நபித்தோழர்கள் அவரை உயர்வாக மதித்து பாராட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரை நரகவாசி என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் அவர் போரில் ஏற்பட்ட காயத்தின் வேதனை தாளாமல் தற்கொலை செய்து கொண்டார்.

பார்க்க : புகாரீ 2898

நபித்தோழர்கள் கூட ஒருவரை நல்லடியார் எனக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் எப்படி மகான்களைக் கண்டுபிடிக்க முடியும்?

மறுமையில் ஒரு உயிர் தியாகி, ஒரு அறிஞர், ஒரு செல்வந்தர் ஆகியோர் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார்கள். அவர்கள் செய்த நல்லறங்கள் குறித்து அல்லாஹ் விசாரிப்பான். அவர்கள் தாம் செய்த நல்லறங்களைக் கூறுவார்கள். அப்போது இறைவன் நீங்கள் உலகில் பெயர் வாங்குவதற்காகவே செய்தீர்கள். அப்பெயரை உலகில் பெற்றுவிட்டீர்கள் எனக் கூறி “இவர்களை நரகத்துக்கு இழுத்துச் செல்லுங்கள்” என்று கூறிவிடுவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பார்க்க : முஸ்லிம் 3865

உயிர் தியாகிகள் என்றும், வள்ளல் என்றும், அறிஞர் என்றும் மக்களால் கருதப்பட்ட மூவர் அல்லாஹ்விடம் நரகவாசிகளாக உள்ளனர் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அப்படியானால் நாம் எப்படி ஒருவரை மகான் என்று தீர்மானிக்க இயலும்?

நல்லடியார்களை நாம் அறிய முடியும் என்ற கருத்தில் சில சான்றுகள் உள்ளனவே? அதன் நிலை என்ன என்ற கேள்விக்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!

திருக்குர்ஆன் 9:119

இணைகற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:221

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

திருக்குர்ஆன் 9:113

உண்மையான முஃமின்களுடன் வாழ வேண்டும் என்றும், இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றும், இணை கற்பித்தவர்களுக்குப் பாவமன்னிப்பு தேடக் கூடாது என்றும் அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கட்டளையிடுகிறான்.

ஒருவர் நல்லவர் என்றும், கெட்டவர் என்றும் நாம் தீர்மானித்தால் தான் மேற்கண்ட கட்டளைகளை நாம் பின்பற்ற இயலும் என்றாலும் இதில் குழப்பம் தேவையில்லை.

நம்முடைய பார்வையில் இஸ்லாமியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களை நாம் நல்லவர்கள் என்றே தீர்மானிக்க வேண்டும். அதே நேரத்தில் நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதே இஸ்லாமின் அடிப்படைக் கொள்கையாகும்.

நம்முடைய பார்வையில் யார் இறை நம்பிக்கையாளராகத் தெரிகிறாரோ அத்தகைய உண்மையாளருடன் நாம் வாழவேண்டும். அதே நேரத்தில் அவர் நம்முடைய பார்வைக்குத் தான் நல்லவரே தவிர அவருடைய உண்மையான நிலையை இறைவனே அறிந்தவன் என்பதையும் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவனும் இவ்வாறு தான் தீர்மானிக்கச் சொல்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்!

திருக்குர்ஆன் 60:10

நம்பிக்கை கொண்ட பெண்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தால் அவர்கள் இறை நம்பிக்கையாளர்களா? வேறு நோக்கத்தில் வந்துள்ளார்களா? என்று சோதித்து அறியுமாறு இவ்வசனம் கட்டளையிடுகிறது. இவ்வாறு சோதித்துப் பார்த்து அவர்கள் முஸ்லிம்கள் தான் என்ற முடிவுக்கு வந்தாலும் அது சரியானதாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அவர்களின் உள்ளங்களில் இறைநம்பிக்கை உள்ளதா என்பதை அல்லாஹ் தான் அறிவான் என்ற வாக்கியத்தில் இருந்து இதை அறியலாம்.

நம்முடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதால் இறைவனிடத்திலும் அவர்கள் நல்லவர்கள் தான் என்பதை நாம் தீர்மானிக்க இயலாது என்பதைத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் சமாதிகளை வணங்குவோர் இந்த அடிப்படையை உணராமல் மேற்கண்ட வசனங்களைச் சான்றாகக் காட்டி நம்முடைய பார்வைக்கு நல்லவர்களாகத் தெரிபவர்களை அல்லாஹ்விடத்திலும் நல்லவர்கள் என நாம் தீர்மானிக்கலாம் எனக் கூறுகின்றனர். இது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது.

மேலும் ஒருவரை நல்லவர் தான் என்று மக்கள் தீர்மானிக்க இயலும் என்பதற்குப் பின் வரும் ஹதீஸையும் சான்றாகக் காட்டுகின்றனர்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்ற போது, இறந்தவரின் நற்பண்புகளைப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உறுதியாகி விட்டது” எனக் கூறினார்கள். உமர் (ரலி) “எது உறுதியாகி விட்டது?” எனக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்” எனக் கூறினார்கள்.

நூல் : புகாரீ 1367

மக்கள் ஒருவரை நல்லவர் என்று புகழ்ந்தால் அவர் சொர்க்கவாசியென்றும், மக்கள் ஒருவரைக் கெட்டவர் என்று இகழ்ந்தால் அவர் நரகவாசியென்றும் தீர்மானிக்கலாம் என்பது போல் மேற்கண்ட ஹதீஸில் இருந்து தெரிகிறது.

மக்கள் தான் நல்லவர்கள் என்று முடிவு செய்பவர்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தந்தாலும் யாரையும் நல்லவர் என்று தீர்மானிக்க நமக்கு உரிமை இல்லை. அதற்கான அறிவும் நமக்கு இல்லை என்ற கருத்தில் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக இதன் கருத்து அமைந்துள்ளது.

மேலும் இது நடைமுறைக்கும் மாற்றமாக உள்ளது. இஸ்லாமை அப்பட்டமாக மீறி நடப்பவர்களை மகான்கள் என்று மக்கள் முடிவு செய்வதை நாம் காண்கிறோம். கஞ்சா அடிப்பவன், பீடி குடிப்பவன், குளிக்காமல் சடை வளர்த்துத் திரிபவன் எனப் பலரை நம் மக்கள் மகான்கள் பட்டியலில் சேர்த்து தர்கா கட்டியுள்ளனர். மக்கள் சரியாக முடிவு எடுப்பதில்லை என்பதற்கு இது சான்றாக உள்ளது.

மேலும் ஒரு மனிதனின் உள்ளத்தில் உள்ளதை யாராலும் அறிய முடியாது என்ற இஸ்லாமின் அடிப்படைக்கும் இது மாற்றமாக உள்ளது. இது இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான ஹதீஸாக உள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது..

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!

ஆயிஷா ரலி திருமணம் வஹியின் அடிப்படையிலா ? சமுதாய வழக்கப்படியா

கேள்வி: நீங்கள் ஏராளமான பயான்களில் கூறி வருகிறீர்கள்: ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் ஆயிஷா நாயகி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை சிறு வயதில் திருமணம் செய்ததற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் மார்க்கம் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பதாலும், ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா?

முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...